பேடிஎம் சிஇஓவிடம் கொள்ளையடிக்க மங்காத்தா பிளான் போட்ட பெண் ஊழியர்- ஸ்சுவாரசியமான தகவல்
சுருக்கமாக செல்ல வேண்டும் என்றால், நடிகர் அஜித், நண்பர்போல் பழகி பிறகு, ஆர்கேவிடம் வரும் பெட்டிங் பணத்தை முழுமையாக கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதை போல, பேடிஎம் நிறுவனரை அதன் ஊழியரான பெண், தனியாக கு
தற்போது இந்திய முழுவதும் அல்லாமல் உலகம் முழக்க இந்த விஷயம் தான் பரபரப்பாக பேசப்படுகின்றது. மங்காத்தா படத்தையே மிஞ்சும் அளவுக்கு பிளான் போட்டுள்ளார் ஒரு பெண் ஊழியர்.

சுருக்கமாக செல்ல வேண்டும் என்றால், நடிகர் அஜித், நண்பர்போல் பழகி பிறகு, ஆர்கேவிடம் வரும் பெட்டிங் பணத்தை முழுமையாக கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதை போல, பேடிஎம் நிறுவனரை அதன் ஊழியரான பெண், தனியாக குழு அமைத்து மிரட்டி பணம் பறிக்க திட்டமே தீட்டியுள்ளார்.
தற்போது போலீசில் சிக்கிக் கொண்டதால் இந்த தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் மேலும் ஸ்சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று பேர் கைது:
பேடிஎம் மொபைல் வாலெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஜய் சேகர் சர்மாவின் தனிநபர் விவரங்களைத் திருடி 20 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக அவரது தனிப்பட்ட உதவியாளர் பெண் உட்பட 3 நபர்களைக் காவல் துறையினைக் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

10 ஆண்டு ஊழியர்:
விஜய் சேகர் ஷர்மாவின் அண்ணன் அஜய் சேகர் ஷர்மாவும் பேடிஎம் நிறுவனத்தின் மூத்த துணை தலைவராக உள்ளார். இவருக்கு உதவியாளராக கடந்த 10 ஆண்டாக சோனியா தவான் என்ற பெண் பணியாற்றி வந்தார். மேலும், விஜய் சேகர் ஷர்மாவின் கணினியில் உள்ள கோப்புகளை அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
மேலும், பேடிஎம் நிறுவனம் சார்ந்த ஏராளமான கணக்கு வழக்குகளையும் சோனியா தவான் கவனித்து வந்துள்ளார். மேலும் பேடிஎம் நிறுவனத்திற்கு இவ்வளவு பணம் வருகின்றதா எனவும் அவர் இதைக்கண்டு அதிர்ந்து போனார்.

ஒரு மாத்திற்கு 8 லட்சம் சம்பளம்:
பேடிஎம் நிறுவனத்தின் உள்ள கோப்புகள் கணினியில் விவரங்கள், நிறுவனத்தின் முக்கிய விவரங்கள் குறித்தும் பணியாற்றி வந்த சோனியா தவானுக்கு சம்பளம் ஒரு மாத்திற்கு ரூ.8 லட்சம் வழக்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு சுமராக ரூ.38 ஆயிரம் பெற்று வந்துள்ளார் சோனியா தவான்.

பணத்தின் மீது ஆசை:
பேடிஎம் நிறுவனத்தின் இவ்வளவு பணம் புழங்குவதாக தனது வீட்டில் உள்ளகணவர் ரூபக் ஜெயினிடம் தெரிவித்துள்ளார். மேலும் வாழ்வில் செட்டிக் ஆக நாம் அந்த பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை எழுந்துள்ளது. இதையடுத்து பக்கவாக மங்காத்த படத்தில் வரும் அஜித் போல கணவர் ஜெயின் உடன் சேர்ந்து சோனியா திட்டம் மிட்டார்.

புதிய ஆட்ளை நியமித்தார்:
கணவரின் ஆலோசனைக்கு மங்காத்தா திட்டத்திற்காக புதிய சிஸ்டம் அட்மினை பிறகு வேலைக்கு தேர்வு செய்துள்ளார். மேலும், கணவர் ரூபக் ஜெயின், அதே நிறுவனத்தில் வேலை செய்யும் தேவேந்திரகுமார், ரோகித் சோமல் ஆகியோருடன் அனைத்து விவரங்களையும் திருடியுள்ளனர்.

பிளான் படி மிரட்டல்:
நிறுவனரின் சகோதரர் அஜய் சேகர் சர்மாவுக்கு செல்போனில் அழைப்பு விடுத்து, தாங்கள் விஜய் சேகர் சர்மாவின் லேப்டாப்பில் உள்ள தகவல்களை திருடியுள்ளதாகவும், 20 கோடி பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதுகுறித்து விஜய் சேகர் ஷர்மா, பிளான் போட்ட அலுவலக ஊழியர்களிடமே தெரிவித்துள்ளார்.

சந்தேகம்:
சோனியா தவான் உள்ளிட்ட குழுவினர் பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளனர். முதல் கட்டமாக மிரட்டல் விடுக்கப்பட்டவர் கொடுத்த வங்கி கணக்கில் ரூ. 2 லட்சம் செலுத்தியுள்ளார். மேலும் பணத்தை தாமதிக்காமல் செலுத்த வேண்டும் என்று இந்த குழுவினர் தகவல் தெரிவித்ததால், இவர்கள் மீது சந்தேகமடைந்த விஜய் சேகர் ஷர்மா போலீசில் புகார் அளித்துள்ளார்.

மக்காத்தா பிளான் அம்பலம்:
இவர்கள் மங்காத்தா படத்தில் வரும் அஜித் போல அனைவரும் பிளான் போட்டு மிரட்டல் பாணியை அரங்கேற்றியது அனைத்தும் போலீசில் விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணமாக தெரிவித்ததால், வெளிச்சமாகியது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரையும் நொய்டா போலீசார் கைது செய்தனர். 10 ஆண்டாக பணியாற்றி உதவியாளரா இப்படி செய்தார் என்று நிறுவனத்தின் சிஇஓ அடிபோய்விட்டார்.

வாடிக்கையாளர்கள் அச்சம் வேண்டாம்:
இதனிடையே பேடிஎம் நிறுவனத்தில் திருடு போன தகவல்கள் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவுடைய தனிப்பட்ட விவரங்கள். இதற்குச் சாட்சி இவர்கள் போன் அழைப்புகள் மூலம் மிரட்டிய ஆடியோ ரெக்கார்டிங். இதனால் பேடிஎம் பயனர்களால் அச்சம் அடையத் தேவையில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications