அதிர்ச்சி ரிப்போர்ட் : 'டீன் ஏஜ்' சிறுவர்கள் ஜாக்கிரதை..!

Posted By:

பெருமையாக சொல்லிக் கொள்ளலாம் - இது ஒரு அதிநவீன தொழில்நுட்ப காலம். எங்கும் ஸ்மார்ட்போன், எப்போதும் இன்டர்நெட் என உலகம் ஆன்லைனில் நொடியை கூட தவற விடாமல் பயன்படுத்திக் கொண்டும், அதனால் அணு தினமும் முன்னேறி கொண்டும் இருக்கிறது என்று, பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்..!

ஹா ஹா ஹா.. சூப்பர் கற்பனை : சுதந்திரத்திற்கு முன் இன்டர்நெட்..!?

ஆனால், அந்த முன்னேற்றத்திற்கு பின்னால் உடல் மற்றும் மனநிலை அளவில் ஏற்படும் விளைவுகளை பற்றி யாரும் கவலைப்படுவதுமில்லை, தெரிந்து கொள்ள விரும்புவதுமில்லை என்பது தான் நிதர்சனம். முக்கியமாக 'டீன் ஏஜ்' இளைஞர்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அதிர்ச்சி :

அதிர்ச்சி :

சமீபத்தில் 'டீன் ஏஜ்ர்'களை வைத்து, அதாவது 13 வயது முதல் 19 வயது வரை உள்ள சிறுவர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

வாய்ப்பு :

வாய்ப்பு :

அதாவது அதிகப்படியாக இன்டர்நெட்டை பயன்படுத்தும் 'டீன் ஏஜர்'களுக்கு உயர்நிலை இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறது அந்த ஆய்வின் முடிவு.

உடல் எடை :

உடல் எடை :

உயர்நிலை இரத்த அழுத்தம் மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கு புறம்பான உடல் எடை கூடும் வாய்ப்பும் அவர்களுக்கு அதிகமாம்.

பாதிப்பு :

பாதிப்பு :

வாரத்திற்கு 14 மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தும் பெரும்பாலான 'டீன் ஏஜர்'கள் இந்த பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறது அந்த ஆய்வு.

ஆய்வு :

ஆய்வு :

14 முதல் 17 வயதிற்க்குட்பட்ட 335 சிறுவர்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

25 மணி நேரம் :

25 மணி நேரம் :

அந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்கள் வாரத்திற்கு சுமார் 25 மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரத்த அழுத்தம் :

இரத்த அழுத்தம் :

அதில் அதிகப்படியாக இன்டர்நெட் பயன்படுத்திய 134 'டீன் ஏஜர்'களில், 36 பேருக்கு உயர்நிலை இரத்த அழுத்தம் கொண்டவர்களாக ஆய்வு விவரிகின்றது.

விளக்கம் :

விளக்கம் :

உடல் தேர்வு நடத்தி இரத்த அழுத்தத்தின் நிலையானது கணக்கிடப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளது ஆய்வு குழு.

ஒப்பீடு :

ஒப்பீடு :

மேலும் குறைந்த அளவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் அதிகமாக இன்டர்நெட் பயன்படுத்தும் 43% பேர் அதிகப்படியான உடல் எடை கொண்டுள்ளார்களாம்.

அறிவுரை :

அறிவுரை :

இன்டர்நெட் பயன்பாடு என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகிவிட்ட போதிலும் அது கட்டுப்பாட்டை மீறி செல்லக்கூடாது என்றும் அந்த ஆய்வு அறிவுரை வழங்கியுள்ளது.

பொறுப்பு :

பொறுப்பு :

மேலும் ஆய்வு குழுவானது பெற்றோர்கள் தான் இந்த பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும், தினம் 2 மணி நேரம் என்றபடியாக, வாரம் 5 நாட்களுக்கு மட்டும் மொத்தம் 10 மணி நேரம் இன்டர்நெட் பயன்பாட்டு முறையை பிள்ளைகளுக்கு பழக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
அதிகப்படியான இன்டர்நெட் பயன்பாடு ஏற்படுத்தும் உடல்நிலை பாதிப்புகள் சார்ந்த அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகி உள்ளது. மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்