ஜிசாட்-11 செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.! வீடியோ,!

டிஜிட்டல் இந்தியா மற்றும் எதிர்கால இந்தியாவுக்காக அதிவேக சேவைக்காக பிரான்ஸ் நாட்டில் உள்ள கயானாவில் இருந்து ஜிசாட்-11 என்ற செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டது.

|

டிஜிட்டல் இந்தியா மற்றும் எதிர்கால இந்தியாவுக்காக அதிவேக சேவைக்காக பிரான்ஸ் நாட்டில் உள்ள கயானாவில் இருந்து ஜிசாட்-11 என்ற செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டது.

ஜிசாட்-11 செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.! வீடியோ.!

இது இந்திய நேரப்படி அதிகாலை 2 மணியளவில் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. ஏற்கனவே இந்தியா தரப்பில் ஜிஎஸ்எல்சி ராக்கெட்கள் வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது குறிப்பிட தக்கது.

இஸ்ரோ:

இஸ்ரோ:

இஸ்ரோ சார்பில் பல்வேறு நாடுகளின் செயற்கைகோள்கள் விண்ணுக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டு வருகின்றது.

இஸ்ரோ குறைந்த விலையில், வெளிநாடு மற்றும் உள்நாடுகளின் செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தி வருவதால், வர்த்தக தளமாக இருக்கின்றது.

 30 செயற்கைகோள்கள்:

30 செயற்கைகோள்கள்:

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா கோட்ட சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1 ஏவு தளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகையை கொண்ட 30 வணிக ரீதியிலான செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தியது.

பிரான்ஸில் இருந்து ஏவக்காரணம்:

பிரான்ஸில் இருந்து ஏவக்காரணம்:

குறைந்த எடையுள்ள செயற்கைகோள்களை இந்தியாவில் உள்ள விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து ஏவ முடியும். ஆனால் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேல் எடையுள்ள ஜிசாட் செயற்கைகோள்களை இஸ்ரோ விண்வெளி மையத்தில் இருந்து செலுத்த முடியாது. இதனால் பிரான்ஸ் இருந்து அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

4 ஆயிரம் எடை உள்ளது:

4 ஆயிரம் எடை உள்ளது:

ஸ்ரீ ஹரிகோட்ட விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுமார் 4 ஆயிரம் எடையுள்ள செயற்கைகோள்களை மட்டும் விண்ணுக்கு அனுப்ப முடியும். இதனால் பிரான்ஸ் நாட்டின் கயானா விண்வெளி மையம் தேர்வு செய்யப்பட்டது.

அதிகாலையில் ஏவுப்பட்டது:

இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கைக்கோளை சுமந்தபடி பிரான்சில் உள்ள கயானாவில் இருந்து 'ஏரைன் - 5' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தியது. தென்கொரியாவின் ஜியோ செயற்கைக்கோளும் ஏவப்பட்டது.

 5 ஆயிரம் எடை ஜிசாட்:

5 ஆயிரம் எடை ஜிசாட்:

5 ஆயிரத்து 894 கிலோ எடை கொண்ட ஜிசாட்-11 செயற்கைக்கோளை, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 'இஸ்ரோ' தயாரித்துள்ளது. இது வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தப்பட்டதால், இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

Best Mobiles in India

English summary
Heaviest ISRO Satellite GSAT 11 Successfully Launched : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X