உடல்நலத்தை கெடுக்கும் தொழில்நுட்ப கேஜெட்கள்

By Meganathan
|

முன்பதிவு செய்வது, புதிய நண்பர்களை கண்டறிவது, குறுந்தகவல் மூலம் உலகம் முழுவதும் பரவி இருக்கும் நட்புகளுடன் இணைப்பில் இருப்பது என பல வழிகளில் இன்று செல்போன் எனப்படும் கைப்பேசிகள் பேருதவியாக இருக்கின்றன.

அடங்கப்பா இப்படியும் கருவிகளா, சத்தியமா முடியலடா

தொழில்நுட்பம் பல வழிகளில் உதவினாலும் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரிக்க தான் செய்கின்றது. இன்றைய இயந்திர உலகில் உடல்நல ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியதாகி இருக்கும் நிலையில் தொழில்நுட்ப கருவிகள் மக்களுக்கு எவ்வாறு ஆபத்தாக இருக்கின்றது என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

மன அழுத்தம்

மன அழுத்தம்

அடிக்கடி செல்போன்களை சரி பார்ப்பது மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

முகப்பரு

முகப்பரு

செல்போன்களை முகத்தில் வைத்து பயன்படுத்துவது முகப்பருக்களுக்கு வழி வகுக்கும். செல்போன்களில் இருக்கும் கண்களில் தெரியாத கிருமிகள் முகத்தில் இருக்கும் எண்ணெய் முகத்தில் எளிதாக முகப்பரு உருவாக காரணமாக இருக்கின்றது.

கட்டை விரல்

கட்டை விரல்

பொதுவாக ப்ளாக்பெரி செல்போன்கள் பெரிதும் விரும்பும் ஸ்க்ரோலிங் பட்டன் கட்டை விரலில் அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு காயங்களுக்கும் வழி வகுக்கின்றது.

கதிர்வீச்சு

கதிர்வீச்சு

செல்போன்கள் வெளிப்படுத்தும் கதிர்வீச்சுகள் அதன் பயனாளிகளிடம் சென்றடைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றது, எனினும் இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்குமா என்பதை ஆய்வு முடிவுகள் தான் தெரிவிக்க வேண்டும்.

நோய்

நோய்

செல்போன்களில் கண்களுக்கு தெரியாத பல்லாயிர கணக்கான கிருமிகள் இருக்கின்றதோடு அவை உடலில் நோய் உண்டாகவும் காரணமாக இருக்கின்றதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

விபத்து

விபத்து

வாகனங்களை ஓட்டும் போது செல்போன்களில் சாட் செய்வது விபத்துகளுக்கு வழி வகுக்கின்றது. இதனால் வாகனங்களை ஓட்டும் போது கையில் செல்போன்களை எடுக்காமல் இருப்பது உங்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பாதுகாப்பானதாகும்.

ஒவ்வாமை

ஒவ்வாமை

செல்போன்கள் முகத்தில் நேரடியாக பயன்படுத்துவது பல வழிகளில் கேடாக இருக்கின்றது.

நினைவு

நினைவு

செல்போன் பயன்படுத்துபவர்களில் 68% அவ்வப்போது போன் வைப்ரேட் ஆவது போன்று உணர்வை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர்

அதிகமாக டைப் செய்வது மணி கட்டுகளில் வலியை ஏற்படுத்தும், முடிந்த வரை கீபோர்டினை சவுகரியமாக வைத்து டைப் செய்வதன் மூலம் இந்த வலியில் இருந்து விடை பெறலாம்.

முதுகு வலி

முதுகு வலி

சில ஆய்வு முடிவுகள் அதிக நேரம் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது முதுகு மற்றும் கழுத்து பகுதிகளில் வலியை உண்டாக்குவதாக தெரிவிக்கின்றது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Check out here the Worst Tech-Related Health Risks. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X