ஏசியிலேயே இருக்கீங்களா..? அப்போ 'மூச்சை' பாத்துக்கோங்க.!!

By Meganathan
|

ஒரு காலத்தில் குடிசை வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். அதிக மரங்கள் தந்த காற்று அன்று நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தது. ஆனால் காலம் மாற இன்று எல்லாமே மாறிவிட்டது. குடிசைகள், கட்டிங்களாகவும், மரங்கள் மேசைகளாகவும் மாற ஒரு கட்டத்தில் எல்லாமே முற்றிலும் மாறி விட்டது.

அடிக்கடி, அதிகப்படி மாறிய காலம் இன்று மக்களை வாட்டி வதைக்கின்றது. கால மாற்றத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள் இன்று மாற்றத்தை நினைத்து வருந்தியும் வருகின்றனர்.

அடிக்கும் வெயிலுக்கு வீட்டில் ஏசி இல்லாமல் இருக்க முடியாது தான். ஆனால் ஏசியிலேயே இருந்தால் உடம்புக்கு என்னென்ன பாதிப்பு வரும்'னு தெரியுமா.??

நிலையான சோர்வு

நிலையான சோர்வு

எந்நேரமும் ஏசியில் இருப்பவர்களுக்கு முதலில் நிலையான சோர்வு ஏற்படும்.

தலைவவி

தலைவவி

முழுவதும் குளுமையான அறையில் இருப்பவர்களுக்கு அடிக்கடி தலைவலியும், சோர்வும் ஏற்படும். மேலும் சளி, சவ்வு எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதல் சிரமமும் ஏற்படும்.

உலர்ந்த சருமம்

உலர்ந்த சருமம்

நீண்ட நேரம் குளிரூட்டப்பட்ட சூழலில் இருப்பவர்களின் சருமம் எளிதில் உளர்ந்து போகக்கூடும். முறையான ஈரப்பதம் இல்லாமல் போனால் சருமம் உலர்ந்து போய்விடும்.

நாள்பட்ட நோய்

நாள்பட்ட நோய்

ஏற்கனவே உடலில் நோய் இருந்தால் குளிர்ந்த அறையில் இருக்கும் போது நோயின் தன்மை அதிகரித்து நாள்பட்ட நோய்களுக்கு வழி செய்யும். அதிக நேரம் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பவர்களுக்கு முதலில் குறைந்த இரத்த அழுத்தம், கீல்வாதம், நரம்புத்தளர்வு போன்றவை ஏற்படும்.

சூடு

சூடு

எந்நேரமும் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பவர்களின் உடல் வெயிலை தாங்கும் தன்மையை இழந்து விடும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் வெயில் காலத்தில் மட்டும் சுமார் 400 பேர் உயிர் இழப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மூச்சு பிரச்சனை

மூச்சு பிரச்சனை

வெயில் காலத்தில் வாகன நெரிசலில் வெயிலின் உக்கிரத்தில் இருந்து காரின் ஏசி நம்மை காத்தாலும், நாளடைவில் இது மூச்சு விடுவதில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

நிமோனியா

நிமோனியா

துவக்கத்தில் தொற்று நோய் ஏற்பட்டு, பின் தீவிர காய்ச்சல் மற்றும் நிமோனியா போன்ற நோய் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

குளிர்சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டி

மின் விசிறி மூலம் எளிய முறையில் உடல் நலத்திற்க்கு பாதிப்பு விளைவிக்காத குளிர்சாதன பெட்டியை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள க்ளிக் செய்யவும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சலிப்பாய் இருந்தால் இதை பாருங்கள் : 60 நொடிகள் இண்டர்நெட் நடவடிக்கைகள்.!!

இண்டர்நெட்டில் வைரலாய் பரவி நம்மையெல்லாம் ஏமாற்றிய புகைப்படங்கள்..!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Health problems caused by air conditioner Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X