11 ஸ்மார்ட்போன்னுடன் வேட்டைக்குச் செல்லும் 70 வயது முதியவர் "கேட்ச் எம் ஆல்".!
தைவான் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது சைக்கிள் இல் 11 ஸ்மார்ட்போன்னுடன் தினமும் 20 மணி நேரம் தொடர் வேட்டைக்குச் செல்கிறார்.
தைவான் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது சைக்கிள் இல் 11 ஸ்மார்ட்போன்னுடன் தினமும் 20 மணி நேரம் தொடர் வேட்டைக்குச் செல்கிறார். இவர் வெறித்தனமாய் வேட்டையாடுவது எதுவென்று சொன்னால் சிலருக்கு வேடிக்கையாக இருக்கும்.
சென் சான் யுவான் என்ற 70 வயது முதியவர் தைவான் தெருக்களில் பிரபலமடைந்து வந்தவர், தற்பொழுது உலக அளவில் பிரபலமடைந்து வருகிறார். தினமும் அவர் பேட்டரி ரிக் பொருத்தப்பட்ட சைக்கிள் இல் 11 ஸ்மார்ட்போன்களுடன் டிஜிட்டல் மொன்ஸ்டர் போகிமொன்களை தைவான் தெருக்களில் வேட்டையாடுகிறார்.

புதிய மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு
சென் சான் யுவான் அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டவர், இந்த போகிமொன் க்கோ கேம் அவரை அந்த நோயினால் தவிப்பதை மறக்கடித்து இன்னும் பல புதிய மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தருவதனால் விளையாடுவதாகக் கூறியுள்ளார்.

தொடர் 20 மணி நேரம்
சென் சான் வாரத்தில் 5 அல்லது 6 முறை இந்த கேம் ஐ தொடர் 20 மணி நேரம் விளையாடுவதாகவும், தொடர்ந்து விளையாடுவதற்கு ஒன்பது பேட்டரி பவர்பேங்க் உடன் வேட்டைக்குச் செல்வதாக கூறுகிறார். தனது அனைத்து பேட்டரி பவர்பேங்களும் தீரும் வரை வேட்டையை நிறுத்தமாட்டாராம் சென் சான்.

11 போன் டிஜிட்டல் போக்கிபால்
தெருக்களில் 11 போன்களுடன் வேட்டைக்குச் செல்லும் சென் சான் யுவான், தெருக்களில் போகிமொன்களை பார்த்ததும் தனது டிஜிட்டல் போகிபால்களை பயன்படுத்தி டிஜிட்டல் மொன்ஸ்டர்களை வேட்டையாடிப் பிடித்துவிடுகிறார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சூப்பர் போகிமொன்களை பிடித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

அடேங்கப்பா.!
இந்த வெறித்தனமான போகிமொன் கேட்சர் ஒரு மாதத்திற்கு சுமார் 1165 பவுண்ட் செலவு செய்கிறார். இது இந்திய மதிப்பின்படி ரூ.1,45,662 ஆகும். இந்த போகிமொன் வேட்டைக்கு இவர் செய்யும் செலவு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

தினமும் 5 அல்லது 6 முறை
இவருடைய முக்கிய வேட்டையாடும் தலமாக அவர் வசிப்பிடத்தின் அருகே உள்ள பார்க் ஐ கூறுகிறார். இங்கு தினமும் 5 அல்லது 6 முறை போகிமொன்களை வேட்டையாட செல்வதாகவும் கூறுகிறார்.

போகிமொன் பேரன்
இந்த போகிமொன் கேம் ஐ சென் சான் கு அறிமுகம் செய்து வைத்தது அவர் பேரன் தான், 2016 இல் தனது பேரன் சொல்லி இதை விளையாடத் தொடங்கியுள்ளார்.

"அங்கிள் போகிமொன்"
தனது சைக்கிள் இல் மொபைல் அக்கௌன்ட் லெவல் 30 ற்கு மேல் இருக்கும் அக்கௌன்ட்களை மட்டுமே பொருத்திக்கொண்டு வேட்டைக்குச் செல்கிறார். இவருக்கு தைவான் இல் "அங்கிள் போகிமொன்" என்ற செல்லப் பெயருடன் தெருக்களில் தனது வேட்டைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications