வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.! தெரியாமல் கூட 'இதை' மட்டும் கிளிக் செய்யாதீர்கள்? ஏன் தெரியுமா?

|

கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக இந்தியாவில் கோவிட்-19 பரவலுக்குப் பிறகு லாக்டவுன்களின் போது டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடுகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இதனால், நாட்டில் எதிர்பாராத விதமாக மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. பெருகி வரும் மோசடிகள் எண்ணிக்கை கருத்தில் கொண்டு HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் அறிவுரைகளை இப்போது வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் பேமெண்ட் செய்யும் வங்கி பயனர்களுக்கு எச்சரிக்கை

டிஜிட்டல் பேமெண்ட் செய்யும் வங்கி பயனர்களுக்கு எச்சரிக்கை

HDFC வங்கியானது, அதன் வாடிக்கையாளர்களை மிகவும் கவனமாக இருக்கும்படி எச்சரித்துள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்களின் பான் கார்டு விவரங்களைப் புதுப்பிக்கச் சொல்லும், முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தெரியாத இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. "#GoDigitalGoSecure மற்றும் உங்கள் பான் கார்டு விவரங்களைப் புதுப்பிக்கக் கேட்கும் தெரியாத இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள்" என்று வங்கி ட்வீட் செய்துள்ளது.

இந்தியாவில் பெருகும் ஃபிஷிங் மோசடி

இந்தியாவில் பெருகும் ஃபிஷிங் மோசடி

ஆன்லைன் மோசடிகளில் நிகழும் ஒருவகை ஃபிஷிங் மோசடி இது என்று அழைக்கப்படுகிறது. இதில் மோசடி செய்பவர்கள், வங்கியின் இணையதளம் போல, ஈ-காமர்ஸ் இணையதளம் போல, போலியான சர்ச் பிரௌசர் போன்ற சட்டப்பூர்வமான இணையதளமாகத் தோன்றும் மூன்றாம் தரப்பு ஃபிஷிங் இணையதளத்தை உருவாக்கி, மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மோசடி செய்பவர்கள், பொதுமக்களுக்கு SMS மூலம் இணைப்புகளை அனுப்புகிறார்கள்.

நீங்கள் கிளிக் செய்யும் முன் URL ஐ சரிபார்க்கவும்

நீங்கள் கிளிக் செய்யும் முன் URL ஐ சரிபார்க்கவும்

வங்கி வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் அவர்களுக்கு வரும் இணைப்பின் விரிவான யூனிஃபார்ம் ரிசோர்ஸ் லொக்கேட்டரை (URL) முதலில் சரிபார்க்காமல், கண்மூடித்தனமாக இணைப்பைக் கிளிக் செய்து,சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள். அதேபோல், தனிப்பட்ட அடையாள எண் (PIN), ஒரு முறை கடவுச்சொல் (OTP), கடவுச்சொல் போன்ற பாதுகாப்பான கடவுச்சொற்களையும் உள்ளிட்டு, சிக்கலில் சிக்கி தவிக்கிறார்கள். முன்பின் தெரியாத இணைப்புகள் இது போன்ற தகவல்கள் கேட்கப்பட்டால், அவற்றை நிரப்பவேண்டாம்.

ஃபிஷிங் தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன தெரியுமா?

ஃபிஷிங் தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன தெரியுமா?

 • தெரியாத அல்லது URL சரிபார்க்கப்படாத இணைப்புகளைக் கிளிக் செய்யக் கூடாது.
 • எதிர்காலத்தில், தவறுதலாகக் கூட அவற்றை அணுகுவதைத் தவிர்க்க வேண்டும்.
 • தெரியாத அனுப்புநர்கள் அனுப்பும் SMS மற்றும் மின்னஞ்சல்களை உடனடியாக நீக்க வேண்டும்.
 • குறிப்பாகச் சந்தேகத்திற்குரிய கோப்புகளை ஓபன் செய்யாமல் நேரடியாக அவற்றை டெலீட் செய்து நீக்குவது சிறப்பானது.
 • 27 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்பட்ட Internet Explorer.. 90s கிட்ஸ் குமுறல்..2K கிட்ஸ் கேலி.. என்னாச்சு தெரியுமா?27 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்பட்ட Internet Explorer.. 90s கிட்ஸ் குமுறல்..2K கிட்ஸ் கேலி.. என்னாச்சு தெரியுமா?

  பிளாக் செய்த பின் விலகும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்

  பிளாக் செய்த பின் விலகும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்

  • வங்கி, இ-காமர்ஸ் அல்லது சர்ச் என்ஜின் மூலம் வங்கி தொடர்பான இணைப்புகளை வழங்கும் மின்னஞ்சல்களில் இருந்து விலகவும்.
  • அத்தகைய மின்னஞ்சல்களை நீக்கும் முன் அனுப்புநரின் மின்னஞ்சல் ஐடியைத் பிளாக் செய்த பின் அவற்றில் இருந்து விலகவும்.
  • உங்கள் வங்கி அல்லது சேவை வழங்குநரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு மட்டும் எப்போதும் செல்லவும்.
  • சந்தேகம் இருந்தால் உடனே வங்கிக்குத் தெரியப்படுத்துங்கள்

   சந்தேகம் இருந்தால் உடனே வங்கிக்குத் தெரியப்படுத்துங்கள்

   • இணையதள விவரங்களைக் கவனமாகச் சரிபார்க்கவும், குறிப்பாக உங்களின் நிதி தொடர்பான விபரங்களை உள்ளிட வேண்டிய இடங்களில் கூடுதல் கவனம் தேவை.
   • பாதுகாப்பான கடவுச்சொற்களை உள்ளிடுவதற்கு முன் இணையதளத்தில் முகவரியில் https பாதுகாப்பு அடையாளத்தைக் கொண்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
   • எழுத்துப் பிழைகளுக்கு மின்னஞ்சல்களில் பெறப்பட்ட URLகள் மற்றும் டொமைன் பெயர்களைச் சரிபார்க்கவும்.
   • சந்தேகம் இருந்தால் உடனே வங்கியைத் தொடர்புகொண்டு, புகார் அளிக்கவும்.
   • ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..

Most Read Articles
Best Mobiles in India

English summary
HDFC Issues Warning For Its Customers To Not To Click On Unknown Links Inside Mail Or SMS : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X