Home
News

HDFC வங்கியின் சேவைகள் 4 மணி நேரம் கிடைக்காது.. எப்போது? என்னென்ன சேவைகள்?

இந்திய முழுவதும் யுபிஐ (UPI) சேவையைத் தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். சில முக்கிய தேவைகளுக்கு மட்டும் ஏடிஎம் சென்று ரொக்கப் பணம் எடுத்து செலவு செய்கின்றனர். சிறிய மளிகைக் கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை தற்போது இந்த யுபிஐ வசதி அதிகம் பயன்படுகிறது என்றே கூறலாம். இந்நிலையில் HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது.

ஜூன் 8

அதாவது எச்டிஎஃப்சி வங்கி தற்காலிக பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஜூன் 8, 2025 அன்று சில முக்கிய வங்கி சேவைகள் கிடைக்காமல் இருக்கலாம் என வாடிக்கையாளர்களுக்கு முன்னதாகவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் வங்கியின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காகவே இந்த சேவை முடக்கம் செய்யப்படுவதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HDFC வங்கியின் சேவைகள் 4 மணி நேரம் கிடைக்காது.. எப்போது?

குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சிறப்பான சேவையை வழங்கும் நோக்கில் தான் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவ்வங்கி கூறியுள்ளது. மேலும் ஜூன் 8, 2025 அன்று அதிகாலை 2.30 மணியில் இருந்து காலை 6:30 மணி வரை எச்டிஎஃப்சியின் சேவைகள் கிடைக்காது என்று கூறப்படுகிறது. அதுவும் நான்கு மணிநேரம் இந்த சேவைகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த பராமரிப்பு காலத்தின் போது எச்டிஎஃப்சி வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட யுபிஐ சேவைகள் கிடைக்காது என்று கூறப்படுகிறது. அதாவது இந்த பராமரிப்பு காலத்தின் போது யூபிஐ மூலம் பணம் அனுப்புவது, பணம் செலுத்துவது போன்ற சேவைகள் கிடைக்காது என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் ஆப் (MobileBanking APP), பணப் பரிவர்த்தனை, டெபிட் கார்டு மூலம் ஆன்லைன் பேமென்ட் மற்றும் ஏடிஎம் சேவைகள் போன்றவை வங்கி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் செயலிக்கான அணுகல், கணக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் வைப்புத்தொகைகளைப் பார்ப்பது அல்லது நிர்வகிப்பது ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர UPI, IMPS, NEFT மற்றும் RTGS போன்ற நிதி பரிமாற்ற சேவைகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால்
வாடிக்கையாளர்கள் இந்த பராமரிப்பு நேரத்தில் உங்களது அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் PayZapp வாலாட்டைப் பயன்படுத்த எச்டிஎஃப்சி வங்கி பரிந்துரைத்துள்ளது. இல்லையெனில் அவசர பணப் பரிவர்த்தனைகள் இருந்தால், முன்னதாகவே முடித்துக்கொள்ளுங்கள். பராமரிப்பு பணிகளுக்குப் பின்பு சேவைகள் வழக்கம்போல கிடைக்கும்.

PayZapp எப்படி செயல்படுகிறது?
PayZapp ஆனது எச்டிஎஃப்சி வங்கியின் ஒரு ஆன்லைன் கட்டண செயலியாகும் அதாவது இந்த செயலி டிஜிட்டல் வாலட் மற்றும் மெய்நிகர் அட்டையாகவும் செயல்படுகிறது. உங்கள் வங்கி கணக்குகள் அல்லது அட்டைகளை பயன்படுத்தாமல், பில்களை செலுத்துதல், பணம் அனுப்புதல், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் பல சேவைகளுக்குப் பணம் செலுத்த இந்த PayZapp-ஐ பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த PayZapp-ல் பரிவர்த்தனை வரம்புகள் உள்ளன. அதன்படி KYC அல்லாத கணக்குகளுக்கு மாதத்திற்கு ரூ.10000 ஆகவும், அதே KYC-இணக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.20000 ஆகவும் பரிவர்த்தனை வரம்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

source 1, 2

Best Mobiles in India

English summary
HDFC digital services unavailable for four hours on June 8: Heres the reason
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X