HDFC வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு! 6 லட்சம் பேரின் விபரங்கள் திருட்டு! டார்க் வெப்பில் விற்பனை!
HDFC வங்கி வாடிக்கையாளர்களின் தலையில் பெரும் இடியாய் வந்து விழுந்த செய்தி தான், "6 லட்சம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட வங்கி விபரங்கள் டார்க் வெப் இணையத்தில் லீக் செய்யப்பட்டு, இப்போது அவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது" என்ற தகவல்.
இந்த தகவலை அறிந்த ஒட்டுமொத்த HDFC வங்கி வாடிக்கையாளர்களும் பீதியில் உறைந்தனர். இப்போது, இந்த தகவல் குறித்து HDFC வங்கி சில அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது என்ன என்பதைப் பற்றிப் பார்க்கலாம். இந்தியாவில் இணைய மோசடி வழக்குகள் இந்த நாட்களில் அதிகரித்து வருகின்றது. ஆன்லைன் மற்றும் SMS வழியாக மக்கள் பணத்தை ஏமாற்றும் ஏராளமான மோசடிகள் தொடர்ந்து இந்தியாவில் பதிவாகி வருகிறது.

HDFC வாடிக்கையாளர்களே உஷார்! 6 லட்சம் பயனர் தகவல் திருட்டு!
ஹேக்கர்களின் இருண்ட பக்கமான, டார்க் வெப்பில் 6 லட்சம் ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாகச் சமீபத்தில் பல அறிக்கைகள் கூறுகின்றன. தனியுரிமை விவகாரங்களின் அறிக்கையின்படி, 6 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் 'பிரபலமான சைபர் கிரைமினல் மன்றத்தில்' ஹேக்கர்களால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டார்க் வெப் இல் வெளியிடப்பட்ட 6 லட்சம் பயனர்களின் கசிந்த தரவுகளில் அவர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், வீட்டு முகவரி மற்றும் பிற முக்கியமான நிதித் தரவுகள் போன்ற பல தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹேக்கர்கள் வங்கியைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் டிவிட்டர் கணக்குகளை உருவாக்கி, அதைப் பயன்படுத்தி பயனரின் புகார்களுக்குப் பதிலளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெச்டிஎஃப்சி வங்கி இந்த டேட்டா பிரீச் தகவலை முற்றிலுமாக மறுத்தது. காரணம், வங்கிக்குச் சொந்தமான தகவல்கள் அதன் சர்வரில் பலத்த பாதுகாப்புடன் பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது எச்டிஎஃப்சி வங்கி உடன் நேரடி தொடர்பில் இருக்கும் தகவல்களில் இருந்து திருடப்படவில்லை என்பதை வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. வங்கியின் கணினி சர்வர்கள் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத முறையிலும் மீறப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

HDFC வங்கி இந்த சம்பவம் குறித்து என்ன சொல்கிறது?
எங்கள் அமைப்புகளில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் தரவுப் பாதுகாப்பின் விஷயம் மிகவும் தீவிரமானது மற்றும் தரவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை உறுதிப்படுத்த வங்கி அமைப்புகள் மற்றும் எங்கள் சுற்றுச்சூழல் அமைப்புகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று வங்கி அதன் டிவிட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளது.
பல பயனர்கள் HDFC வங்கியின் பெயரில் ஃபிஷிங் மோசடியைப் பெறுவதாகப் புகார் அளித்துள்ளனர். டிவிட்டரில் இந்த புகார்களுக்கு வங்கி பதிலளித்துள்ளது மற்றும் PAN கார்டு / KYC புதுப்பிப்பு அல்லது வேறு ஏதேனும் வங்கித் தகவலைக் கேட்கும், தெரியாத எண்களுக்கு மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பதிலளிக்க வேண்டாம் என்றும் HDFC வங்கி எச்சரித்துள்ளது.
இந்த விஷயத்தை முதலில் நினைவில் கொள்ளுங்கள், வங்கி ஒருபோதும் பான் அட்டை விவரங்கள், OTP, UPI VPA / MPIN, வாடிக்கையாளர் ஐடி மற்றும் பாஸ்வோர்ட், அட்டை எண், ATM பின் மற்றும் CVV போன்ற தகவலை ஒரு போதும் கேட்காது என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ரகசிய விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று HDFC வங்கியின் சேவை மேலாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஃபோன் மற்றும் சிம் கார்டு உள்ள எவரும் ஃபிஷிங் அழைப்பு அல்லது SMS பெறலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மோசடி செய்பவர்கள் வங்கிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் போலி செய்திகளை அனுப்புகிறார்கள் மற்றும் கணக்கு விவரங்கள், OTPகள் மற்றும் அடையாள எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை மக்களிடம் கேட்கிறார்கள்.
இத்தகைய அழைப்புகள் மற்றும் செய்திகளைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் அவற்றிற்கு பதிலளிக்கக்கூடாது. அத்தகைய எண்களை உடனடியாக பிளாக் செய்வது பாதுகாப்பானது. இதனால் அவர்கள் உங்களை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாது. உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நீங்கள் எடுக்கக்கூடிய மற்றொரு படி, உங்கள் UPI, இணைய வங்கி மற்றும் மொபைல் ஃபோனுக்கான கடவுச்சொற்களை வைத்திருப்பது.


Click it and Unblock the Notifications








