Home
News

உஷார்.. இந்த தேதியில் UPI வேலை செய்யாது.. பணம் அனுப்பவோ, பெறவோ முடியாது.. முக்கிய வங்கி அறிவிப்பு!

எச்டிஎப்சி வங்கி (HDFC Bank) ஆனது வருகிற 2025 செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று திட்டமிடப்பட்ட கணினி பராமரிப்பு பணியை (Scheduled system maintenance) அறிவித்துள்ளது. இதன்கீழ் எச்டிஎப்சி வங்கியின் யுபிஐ சேவை உட்பட பல்வேறு வகையான சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது

எச்டிஎப்சி வங்கியின் இந்த பராமரிப்பு பணியானது செப்டம்பர் 12 ஆம் தேதி நள்ளிரவு முதல் அதிகாலை 1:30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில், யுபிஐ பரிவர்த்தனைகள், ரூபே கிரெடிட் கார்டு கட்டணங்கள் மற்றும் எச்டிஎப்சி வங்கியின் மொபைல் மற்றும் மூன்றாம் தரப்பு ஆப் வழியிலான யுபிஐ சேவைகள் அணுக கிடைக்காது.

இந்த தேதியில் UPI வேலை செய்யாது.. முக்கிய வங்கி அறிவிப்பு!

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த பராமரிப்பு பணி நடக்கும் தேதி மற்றும் நேரம் குறித்து, எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்குத் எஸ்எம்எஸ் மூலம் தெரிவித்து வருகிறது. பயனர்களுக்கான வங்கி அனுபவத்தை இன்னும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த சேவைகள் பாதிக்கப்படும்? எச்டிஎப்சி வங்கியின் இந்த பராமரிப்பு காலத்தில், பல சேவைகள் பாதிக்கப்படும். எச்டிஎப்சி வங்கி உடனான நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகள் இரண்டிலும் யுபிஐ பரிவர்த்தனைகள் வேலை செய்யாது. கூடுதலாக, ரூபே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யப்படும் பணம் செலுத்துதல்களும் செயல்படுத்தப்படாது.

எச்டிஎப்சி வங்கியின் மொபைல் பேங்க் ஆப் மற்றும் எச்டிஎப்சி வங்கி மூலம் யுபிஐ சேவைகளை ஆதரிக்கும் மூன்றாம் தரப்பு ஆப்களும் பாதிக்கப்படும். எச்டிஎப்சி வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட யுபிஐ சேவைகளை கொண்ட வணிகர்களும் இடையூறுகளை சந்திப்பார்கள். சிரமத்தைத் தணிக்க, இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை செய்ய பேஸாப் (PayZapp) வாலட்டை பயன்படுத்துமாறு எச்டிஎப்சி வங்கி பரிந்துரைக்கிறது.

மேலும் எச்டிஎப்சி வங்கி ஆனது, இந்த பராமரிப்பு காலத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் நெட் பேங்கிங் சேவையை மாற்றாக பயன்படுத்துமாறும் ஊக்குவிக்கிறது. பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஒரு வங்கி கிளைக்கு செல்லாமல் 200 க்கும் மேற்பட்ட வகையான பரிவர்த்தனைகளை செய்யலாம்.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் வங்கியில் சேர்ந்தவுடன் தானாகவே நெட் பேங்கிங் கணக்கை பெறுவார்கள். பேஸாப் ஆப் ஆனது - எச்டிஎப்சி வங்கி பயனர்களுக்கு மற்றொரு விருப்பமாக செயல்படும். இது ஒரு டிஜிட்டல் வாலட் மற்றும் விர்ச்சுவல் கார்டு ஆக செயல்படுகிறது, இது வங்கி கணக்கு அல்லது கார்டு தேவையில்லாமல் பல்வேறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேவைகளுக்கான கட்டணங்களை செய்ய அனுமதிக்கிறது.

சுவாரசியமாக எச்டிஎப்சி வங்கி மற்றும் எச்டிஎப்சி வங்கி அல்லாத வாடிக்கையாளர்கள் ஆகிய இருவருமே பே ஸாப் ஆப்பை அணுகலாம். இதன்கீழ் கேஒய்சி அல்லாத கணக்குகளுக்கு, பரிவர்த்தனை வரம்புகள் மாதத்திற்கு ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கேஒய்சி-க்கு இணங்கும் வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.2 லட்சம் வரை வரம்பு உள்ளது.

யுபிஐ தொடர்பான மற்ற முக்கிய செய்திகளை பொறுத்தவரை வருகிற 2025 செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் யுபிஐ சேவையின் கீழ் குறிப்பிட்ட வகைகளுக்கான பரிவர்த்தனை வரம்பு (Transaction Limits) அதிகரிக்கப்படும் என்று என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) அறிவித்துள்ளது.

இந்த புதிய மாற்றங்கள் காப்பீடு செலுத்துதல், கடன் இஎம்ஐ-கள் அல்லது சந்தைகளில் முதலீடு செய்தல் போன்ற பெர்சன்-டூ-மெர்சன்ட் (P2M) பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும். அதாவது குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு பணம் அனுப்புவது போன்ற பெர்சன்-டூ-பெர்சன் (P2P) பணப்பரிமாற்றங்களில் எந்த மாற்றமும் இருக்காது. என்னென்ன பணப்பரிவர்தனைகள் எவ்வளவு அதிகரிக்கப்பட உள்ளன என்கிற கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HDFC Bank UPI Services Not Available For 90 Minutes On September 12 Check Timings Why What To Do
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X