ஜூலை 12 உஷார்.. 4 மணி நேரத்திற்கு UPI வேலை செய்யாது.. எப்போது முதல் எப்போது வரை? பிரபல வங்கி அறிவிப்பு!
இந்தியாவின் மிக முக்கியமான வங்கிகளில் ஒன்று - நாளை, அதாவது ஜூலை 12 ஆம் தேதி அன்று அதனுடைய யுபிஐ (UPI) சேவைகள் ஆனது 4 மணி நேரத்திற்கு வேலை செய்யாது என்று அறிவித்துள்ளது. அது என்ன வங்கி? எந்த 4 மணிநேரத்திற்கு யுபிஐ வேலை செய்யாது? என்ன காரணம்? இதோ விவரங்கள்:
என்ன வங்கி? என்ன காரணம்? எச்டிஎப்சி வங்கியின் (HDFC Bank) யுபிஐ சேவைகள் தான் நாளை (ஜூலை 12) வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எச்டிஎப்சி வங்கியின் சிஸ்டம் மெயிட்டெனன்ஸ் (System Maintenance) காரணமாக நாளை நான்கு மணி நேரத்திற்கு யுபிஐ சேவைகள் ஷட்டவுன் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது தொடங்கி எப்போது வரை எச்டிஎப்சி யுபிஐ வேலை செய்யது? ஜூலை 12 ஆம் தேதி அன்று அதிகாலை 2:30 மணி முதல் விடியற்காலை 6:30 மணி வரை (மொத்தம் 4 மணிநேரம்) எச்டிஎப்சி வங்கியின் யுபிஐ சேவை தற்காலிகமாக மூடப்படும் என்று எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.
அதாவது குறிப்பிட்டுள்ள 4 மணி நேரத்தில், உங்கள் எச்டிஎப்சி அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்ட யுபிஐ சேவையை உங்களால் பயன்படுத்த முடியாது. மேலும் இந்த 4 மணி நேரத்தில், எச்டிஎப்சி வங்கி ஆனது அதன் அமைப்பில் தேவையான பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும்.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக, பணப் பரிவர்த்தனைகளை எந்த தொந்தரவும் இல்லாமல் செய்ய, குறிப்பிட்ட 4 மணி நேரத்தில் (ஜூலை 12 ஆம் தேதி காலை 2.30 - காலை 6.30 மணி வரை) பேஸாப் வாலட்டை (PayZapp Wallet) பயன்படுத்தலாம் என்று எச்டிஎப்சி வங்கி பரிந்துரைத்து உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இந்த சிரமத்திற்கு எச்டிஎப்சி வங்கி ஆனது மன்னிப்பும் கேட்டு கொண்டுள்ளது, மேலும் சேவையின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்த பணி மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளது. இதற்காக வங்கி வாடிக்கையாளர்கள் ஒத்துழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஒருவேளை முக்கியமான கட்டணம் அல்லது பரிவர்த்தனை செய்ய வேண்டி இருந்தால், உங்களிடம் எச்டிஎப்சி வங்கி கணக்கு மட்டுமே இருந்தால், ஜூலை 12 ஆம் தேதி அதிகாலை 2:30 மணிக்குள் அதை செய்து முடிக்கவும் அல்லது இந்த காலகட்டத்தில் யுபிஐ சேவைக்கு பதிலாக பேஸாப் அல்லது பிற விருப்பங்களை பயன்படுத்தவும். சிஸ்டம் பராமரிப்புக்குப் பிறகு, எச்டிஎப்சி வங்கியின் யுபிஐ சேவை ஆனது 6:30 மணி முதல் வழக்கம் போல செயல்படும்.
இந்த 4 மணி நேரத்தில் கட்டாயம் பணம் செலுத்த வேண்டிய சூழிநிலை இருந்தால், நீங்கள் பயன்படுத்தும் யுபிஐ ஆப்பில் எச்டிஎப்சி வங்கியை தவிர்த்து உங்களிடம் இருக்கும் வேறு வங்கியின் அக்கவுண்ட்-ஐ லிங்க் செய்து வைத்து கொள்ளவும். குறிப்பிட்ட 4 மணிநேரத்தில் நீங்கள் அந்த வங்கியின் யுபிஐ சேவையை பயன்படுத்தலாம்.
எச்டிஎப்சி வங்கி ஆனது அதாவது வீட்டுவசதி மேம்பாட்டு நிதிக் கழக வங்கி (Housing Development Finance Corporation Bank) ஆனது கடந்த 1994 இல் நிறுவப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாகும். இந்த வங்கி நிதி சேவைகள், டிஜிட்டல் வங்கி மற்றும் வாடிக்கையாளர் சேவைத் துறையில் அதன் நம்பகமான அடையாளத்தை நிலைநாட்டியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளில் எச்டிஎப்சி வங்கி ஆனது டிஜிட்டல் பேங்க் சேவையை நிறைய ஊக்குவித்துள்ளது. இதன் மொபைல் ஆப், நெட்பேங்கிங் மற்றும் யுபிஐ சேவைகள் ஆனது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதனுடன், எச்டிஎப்சி வங்கியின் பேஸாப் வாலட்டும் டிஜிட்டல் பேமண்ட்டிற்கான பிரபலமான விருப்பமாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








