ஹெச்.டி.எப்.சி மொபைல் ஆப் திடீர் நீக்கம்: காரணம் என்ன?
பின்பு ஹெச்.டி.எப்.சி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் என்னவென்றால் மாபைல் ஆப் பிரச்னையை சரிசெய்து மீண்டும் புதிய வெர்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்தியாவில் ஹெச்.டி.எப்.சி வாடிக்கiயாளர்கள் அதிகளவு இந்த ஹெச்.டி.எப்.சி மொபைல் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெச்.டி.எப்.சி வங்கியின் மொபைல் அப்ளிகேஷன் ஐபோன் மற்றும்
ஆண்ட்ராய்டு ஸ்டோர்களில் இருந்து தற்சமயம் நீக்கப்பட்டுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட புகார் என்னவென்றால், கடைசியாக அப்டேட் செய்யப்பட்டதிலிருந்து இந்த ஹெச்.டி.எப்.சி மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹெச்.டி.எப்.சி மொபைல் அப்ளிகேஷன்
மேலும் கடந்த வாரம் தான் இந்த ஹெச்.டி.எப்.சி மொபைல் அப்ளிகேஷன் மொபைல் அப்டேட் செய்யப்பட்டது, புதிய வடிவமைப்புடன் அறிமுகமாக அந்த வெர்ஷனில் தொடர்ந்து பல்வேறு புதிய பிரச்சனைகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தது.

சர்வர்
குறிப்பாக சரியான தகவலை கொடுத்து லாக்இன் செய்ய முயன்றால் சர்வர் பிசியாக இருப்பதாக தகவல் வந்துகொண்டிருக்கிறது, இதனால் வாடிக்கையாளர்கள் மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

புதிய அப்ளிகேஷன்:
இந்நிலையில் தொடர்ந்து இதே போன்று பிரச்சனைகள் தொடரும் எனில், இந்த அப்ளிகேஷனுக்குப் பதிலாக நெட் பேங்கிங் வசதியை ஹெச்.டி.எப்.சி நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்கள்
இதை தொடர்நது பல்வேறு சமூக வலைதளங்களில் ஹெச்.டி.எப்.சி மொபைல் ஆப் பற்றி அதருப்தி புகார்களை வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்காலிகமாக ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர்களில் இந்த ஹெச்.டி.எப்.சி மொபைல் ஆப் நீக்கப்பட்டுள்ளது.

ஹெச்.டி.எப்.சி நிறுவனம்
பின்பு ஹெச்.டி.எப்.சி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் என்னவென்றால் மாபைல் ஆப் பிரச்னையை சரிசெய்து மீண்டும் புதிய வெர்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.


Click it and Unblock the Notifications