சார்., நான் ஏடிஎம் வந்திருக்கேன் பணம் வேணுமா: வீடு தேடி வரும் ஏடிஎம்- பிரபல வங்கி சிறப்பு ஏற்பாடு!

|

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கு மக்கள் வீட்டுக்குள்ளேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீடு தேடி ஏடிஎம் மிஷன்கள் வரும் வகையில் ஹெச்டிஎப்சி வங்கி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயர்

வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயர்

சீனா வுகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து பரவியதாக தெரிவிக்கப்படும் வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் ஆனது சீனாவில் அதிவேகமாக பரவிய நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியது.

இந்தியாவில் நிலவரம் தலைகீழாக மாறியது

இந்தியாவில் நிலவரம் தலைகீழாக மாறியது

இந்தியாவில் 4,421 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் 115 இறப்புகளைப் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உலக அளவில் வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக மாறி இருக்கிறது. இது இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 83 சதவீதத்திற்கு குறைவானோர் 60 வயதுக்கு உட்படுத்தப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது

 ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு

இதையடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உலக அளவில் வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக மாறி இருக்கிறது. இது இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 83 சதவீதத்திற்கு குறைவானோர் 60 வயதுக்கு உட்படுத்தப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா

கொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் கொரோனாவின் தாக்கத்தினை எதிர்கொள்ள ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, கடந்த வாரம் தான் வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தினை, அதாவது ரெபோ விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகள் குறைத்தது.

வீட்டுக் கடன், வாகன கடன், தனி நபர் கடன்

வீட்டுக் கடன், வாகன கடன், தனி நபர் கடன்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வட்டி குறைப்பினால் வீட்டுக் கடன், வாகன கடன், தனி நபர் கடன் என அனைத்துக்கு வட்டி விகிதம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வங்கி வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் கடந்த மார்சிலேயே குறைக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கான புதிய வட்டி விகிதம்

பொது மக்களுக்கான புதிய வட்டி விகிதம்

7 முதல் 45 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 3.50%, 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 4.5%, 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 5%, 211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 5%, 1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 5.7%, 2 வருடம் முதல் 3 வருடத்துக்குள்- 5.7%, 3 வருடம் முதல் 5 வருடத்துக்குள்- 5.7%, 5 வருடம் முதல் 10 வருடம் வரையில்- 5.7% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வங்கியில் சேமிப்பு கணக்கில் ஒர் லட்சம் ரூபாய் வரை வைத்திருக்கும் டெபாசிட் தொகைக்கு, வட்டி விகிதத்தை 3%ல் இருந்து 2.75% ஆக குறைத்துள்ளது. இந்த புதிய விகிதமானது ஏப்ரல் 15ல் இருந்து அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வீட்டு வாசலில் நிற்கும் ATM

வீட்டு வாசலில் நிற்கும் ATM

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தங்கள் வீட்டு வாசலில் நிற்கும் ATM வேனில் இருந்து பணத்தை எடுக்க முடியும் என்று ஹெச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது. இந்த முறை விரைவில் பல்வேறு பகுதிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3-5 இடங்களில் நிறுத்தப்படும்

3-5 இடங்களில் நிறுத்தப்படும்

இந்த மொபைல் ATM ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில், மொபைல் ATM காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 3-5 இடங்களில் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
HDFC bank introduces mobile atm methods due to covid19

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X