Home
News

மே 1 முதல் அமல்.. HDFC வங்கியில் முக்கிய சேவை கட்டணம் குறைப்பு.. இனி மாதம் எவ்வளவு மிச்சம் ஆகும்?

எச்டிஎப்சி வங்கி (HDFC Bank) தனது இன்ஸ்டா அலர்ட் எஸ்எம்எஸ் சேவைக்கான (Insta Alert SMS service) கட்டணங்களில் முக்கிய திருத்தத்தை அறிவித்துள்ளது. எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளுக்கான புதிய கட்டணங்கள் வருகிற மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்டிஎப்சி வங்கியின்படி, எஸ்எம்எஸ் மூலம் பரிவர்த்தனை எச்சரிக்கைகளை பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மெசேஜிற்கான கட்டணத்தில் குறைப்பு இருக்கும். முன்பு நீங்கள் ஒரு எஸ்எம்எஸ்-க்கு 20 பைசா + ஜிஎஸ்டி ​​செலுத்தி வந்தீர்கள் என்றால், இனி ஒரு எஸ்எம்எஸ்-க்கு 15 பைசா + ஜிஎஸ்டி ​​செலுத்துவீர்கள்.

மே 1 முதல் அமல்.. HDFC வங்கியில் முக்கிய சேவை கட்டணம் குறைப்பு!

இனி மாதம் எவ்வளவு மிச்சம் ஆகும்? உதாரணத்திற்கு ஒரு மாதத்தில் நீங்கள் 100 எஸ்எம்எஸ் பரிவர்த்தனை அலெர்ட்களை பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முன்பு, நீங்கள் ஒரு எஸ்எம்எஸ்-க்கு 20 பைசா செலுத்தி இருப்பீர்கள், இது ரூ.20 (கூடுதல் ஜிஎஸ்டி) ஆகும்.

ஆனால் எச்டிஎப்சி அறிவித்துள்ள இந்த திருத்தத்திற்கு பிறகு, ஒரு எஸ்எம்எஸ்-க்கு 15 பைசா என்ற கட்டணத்தில், செலவு ரூ.15 (கூடுதல் ஜிஎஸ்டி) ஆக குறையும். இதன் மூலம், எஸ்எம்எஸ் அலெர்ட் கட்டணங்களில் நீங்கள் மாதத்திற்கு சுமார் ரூ. 5 சேமிக்க முடியும்.

எச்டிஎப்சி வங்கியின் இமெயில் எச்சரிக்கைகள் (Email Alerts) ஆனது தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்று எச்டிஎப்சி வங்கி தெளிவுபடுத்தி உள்ளது. அதாவது எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி மின்னஞ்சல் அறிவிப்புகளை தொடர்ந்து பெறுவார்கள்.

டெபிட்ஸ் (Debits), கிரெடிட்ஸ் (Credits) மற்றும் பிற அக்கவுண்ட் தொடர்பான செயல்பாடுகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கும் உடனடி எச்சரிக்கைகள் மூலம், வங்கி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதை எச்டிஎப்சி வங்கி எளிதாகியுள்ளது. இந்த எச்சரிக்கைகள், வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு செல்லாமலேயே, தங்கள் பேலன்ஸ் நிலவரங்களை தெரிந்துகொள்ளவும், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை விரைவாக கண்டறியவும் உதவுகின்றன

நெட் பேங்கிங் மூலம் எச்டிஎப்சி பேங்க் இன்ஸ்டா அலர்ட்ஸை மாற்றுவது எப்படி?
படி 1: நெட் பேங்கிங்கில் லாக்-இன் செய்யவும்
படி 2: மேல் வலது மூலையில் கிளிக் செய்து, 'மை ப்ரொபைல்' (My Profile) என்பதை தேர்ந்தெடுக்கவும்
படி 3: 'இன்ஸ்டா அலர்ட்ஸ்' (Insta Alerts) என்பதை கிளிக் செய்யவும்
படி 4: தேவைக்கேற்ப அலர்ட்ஸை மாற்றவும் அல்லது அன்சப்ஸ்க்ரைப் செய்யவும்.

எச்டிஎப்சி வங்கி மொபைல் பேங்கிங் ஆப் மூலம் இன்ஸ்டா அலர்ட்ஸை மாற்றுவது எப்படி?
படி 1: மொபைல் பேங்கிங் ஆப்பில் லாக்-இன் செய்யவும்
படி 2: மேல் இடது மெனுவை கிளிக் செய்யவும்
படி 3: 'மை ப்ரொபைல்' (My Profile) என்பதை தேர்ந்தெடுக்கவும்
படி 4: விருப்பத்தேர்வுகளின் (Preferences) கீழ் உள்ள 'இன்ஸ்டா அலர்ட்ஸை' (Insta Alerts) கிளிக் செய்யவும்
படி 5: அலர்ட்ஸை அப்டேட் செய்யவும் அல்லது அன்சப்ஸ்க்ரைப்

எச்டிஎப்சி வங்கி இன்ஸ்டா அலர்ட்ஸை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
படி 1: உங்கள் நெட் பேங்கிங் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்-ஐ பயன்படுத்தி நெட் பேங்கிங்கில் லாக்-இன் செய்யவும்
படி 2: இன்ஸ்டா அலர்ட்ஸ் பதிவு படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, உங்கள் அருகிலுள்ள எச்டிஎப்சி வங்கி கிளையில் சமர்ப்பிக்கவும்.

எச்டிஎப்சி வங்கி இன்ஸ்டா அலெர்ட்களை செயலிழக்க செய்வது எப்படி?
படி 1: உங்கள் வாடிக்கையாளர் அடையாள எண் மற்றும் நெட் பேங்கிங் பாஸ்வேர்ட்-ஐ பயன்படுத்தி நெட் பேங்கிங்கில் லாக்-இன் செய்யவும்
படி 2: பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள "இன்ஸ்டா அல்பெர்ட்ஸ்" என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: எந்த அக்கவுண்ட் நம்பரில் இருந்து எச்சரிக்கைகளை நீக்க விரும்புகிறீர்களோ, அந்த அக்கவுண்ட் நம்பரை தேர்ந்தெடுக்கவும்.
படி 4: அலெர்ட்களின் வகையை தேர்ந்தெடுத்து, 'டெலிட்' (Delete) என்பதை கிளிக் செய்யவும்.
படி 5: அலெர்ட்களைத் தேர்ந்தெடுத்தவுடன், 'உறுதிப்படுத்து' (Confirm) என்பதை கிளிக் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HDFC Bank Insta Alert SMS Charge Will be Reduced From May 1 2026 Here is All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X