Home
News

ஜூன் 4 மற்றும் 6ம் தேதி.. உங்களுடைய இந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வேலை செய்யாது.. என்ன காரணம்?

இந்தியாவில் அதிக வடிக்கியாளர்களை கொண்ட ஒரு வங்கியின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளின் சேவை வரும் ஜூன் 4,2024 மற்றும் ஜூன் 6, 2024 ஆம் தேதிகளில் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த வங்கி என்பது இங்கே.

சமீபத்தில் வெளியான தகவலின் படி, ஜூன் 4ம் தேதி ஆன இன்று இந்தியாவை சுற்றியுள்ள பல இடங்களில் எச்டிஎப்சி (HDFC) வங்கி கிரெடிட் கார்டு (credit card) மற்றும் டெபிட் கார்டு (debit card) சேவைகள் மதியம் 12:30 மணி முதல் 2:30 மணி வரை வேலை செய்யவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் எச்டிஎப்சி வங்கி (HDFC bank) வாடிக்கையாளர்கள் குழம்பியுள்ளனர்.

ஜூன் 4 மற்றும் 6ம் தேதி.. டெபிட், கிரெடிட் கார்டுகள் வேலை செய்யாது..

ஜூன் 4 மற்றும் 6ம் தேதி.. உங்களுடைய இந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வேலை செய்யாது:

சமீபத்தில் எச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ள அதன் அதிகாரப்பூர்வ தகவல், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள் வரும் ஜூன் 4ம் தேதி மற்றும் ஜூன் 6 தேதி ஆகிய இரண்டு தேதிகளில் பராமரிப்பு சேவை (service maintenance) காரணமாக சில மணி நேரங்கள் வேலை செய்யாது என்று அறிவித்துள்ளது. இந்த தகவலை ஏற்கனவே எச்டிஎப்சி வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு மிஞ்சங்கள் மூலமாகவும் மற்றும் எஸ்எம்எஸ் வழியாகவும் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.

எச்டிஎப்சி வங்கி வெளியிட்ட தகவலில் என்ன கூறப்பட்டுள்ளது? ஜூன் 4 மற்றும் ஜூன் 6 ஆகிய தேதிகளில், எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் சேவை குறுக்கீடுகளை (no service problem) அனுபவிப்பார்கள் என்று கூறியுள்ளது. எச்டிஎஃப்சி வங்கி இந்த திட்டமிடல் குறித்து வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் (email) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) மூலம் அறிவித்துள்ளதாக கூறியுள்ளது.

ஜூன் 4 ஆம் தேதி மதியம் 12:30 முதல் 2:30 வரை வங்கி கார்டு பரிவர்த்தனைகள் இயங்காது என்று அறிவித்துள்ளது. இதேபோல், 6ம் தேதி மதியம் 12:30 முதல் 2:30 வரை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இயங்காது என்றும் கூறியுள்ளது. இந்த குறுக்கீடுகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சேவைகளுக்கான சிஸ்டம் மேம்படுத்தல்கள் காரணமாக குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது என்று எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.

ஜூன் 4 மற்றும் 6ம் தேதி.. டெபிட், கிரெடிட் கார்டுகள் வேலை செய்யாது..

என்ன காரணங்களால் இந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்டு சேவை சில மணி நேரம் மட்டும் துண்டிக்கப்படுகிறது?

பராமரிப்பு காலங்களில், ஏடிஎம் (ATM Transactions) பரிவர்த்தனைகள், கார்டு ஸ்வைப்கள் (card swipe), ஆன்லைன் பேமெண்ட்கள் (online payment) மற்றும் நெட்சேஃப் பரிவர்த்தனைகள் என்று பல சேவைகள் பயன்படுத்த கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தங்கள் பரிவர்த்தனைகளை திட்டமிடுமாறு வாடிக்கையாளர்களுக்கு வங்கி அறிவுறுத்தியுள்ளது. மே 25 அன்று, எச்டிஎஃப்சியின் நெட் பேங்கிங் (net banking) மற்றும் மொபைல் பேங்கிங் (mobile banking) சேவைகள் இடையில் நிறுத்தப்பட்டது.

குறிப்பாக, மே 25, 2024 ஆம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு திட்டமிடப்பட்ட பராமரிப்பு காரணமாக இந்த இடையூறுகளை எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் (HDFC bank customers) எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகளையும் பாதித்தது என்பது கவனிக்கத்தக்கது. HDFC வங்கி சமீபத்தில் தனது எஸ்எம்எஸ் அப்டேட் விதிகளை (changes in HDFC SMS update rules) திருத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் அனுப்பிய அல்லது செலுத்திய பணத்திற்கு அனுப்பப்ட்டும் வரம்பு மாற்றப்பட்டுள்ளது. அதாவது, ரூ. 100 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டும் இனி SMS நோட்டிபிகேஷன்களை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். அதேபோல், கிரெடிட் செய்யப்படும் பணத்திற்கான SMS நோட்டிபிகேஷன் வரம்பும் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ. 500 அல்லது அதற்கு மேல் உள்ள தொகைக்கு மட்டுமே இனி மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் நோட்டிபிகேஷன் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
HDFC Bank Debit Card and Credit Card Wont Work For Few Hours On June 4 2024 and June 6 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X