கையில பணமா எடுத்து வச்சிக்கோங்க.. இந்த பிப்ரவரியில் ஒரு நாள் மட்டும் UPI வேலை செய்யாது.. எப்போது? எந்த வங்கி?
யுபிஐ (UPI) சேவையை பயன்படுத்த தொடங்கிய, நம்மில் பலரும் பின்னர் ஏடிஎம் (ATM) பக்க சென்று பணம் எடுக்கும் பழக்கத்தையே விட்டு விட்டோம். ஆனால் அந்த பழக்கத்தை மீண்டும் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதுவும் இந்த பிப்ரவரி மாதமே.. ஆனால் ஒரே ஒரு நாளுக்காக மட்டுமே.
ஏனென்றால் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) ஆனது அதன் யுபிஐ சேவை நிறுத்தம் தொடர்பாக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிஸ்டம் பராமரிப்பு காரணமாக, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதியன்று சில மணிநேரங்களுக்கு யுபிஐ சேவைகள் (UPI Services) அணுக கிடைக்காது என்று ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட தேதியில், சரியாக நள்ளிரவு 12 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை ஹெச்டிஎஃப்சி வங்கியின் யுபிஐ சேவைகள் அணுக கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த குறிப்பிட்ட காலத்தின் போது ஹெச்டிஎஃப்சி வங்கியின் பயனர்களால் யுபிஐ மூலம் பணம் அனுப்ப முடியாது என்று ஹெச்டிஎஃப்சி வங்கி அதன் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
இது ரூபே கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும். அதாவது பிப்ரவரி 8 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை, ஹெச்டிஎஃப்சி வங்கியின் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகள் மற்றும் ரூபே கிரெடிட் கார்டுகள் மூலம் நிதி மற்றும் நிதி அல்லாத யுபிஐ பரிவர்த்தனைகளும் செய்ய முடியாது.
மற்றொரு தனியார் நிறுவனமான கோடக் மஹிந்திரா வங்கி கூட, சமீபத்தில் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகளை அமல் படுத்தி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தகடு. கோடக் மஹிந்திரா வங்கி 811 சேவிங்ஸ் அக்கவுண்ட்களில் முக்கிய மாற்றம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது. இந்த வங்கியின் கிளைகள் மற்றும் பண வைப்பு இயந்திரங்களின் வழியிலான ரொக்க பரிவர்த்தனை கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளது.
இதன்கீழ் ஒரு மாதத்திற்கான முதல் இலவச பரிவர்த்தனைக்கு பிறகு அல்லது மாதம் ரூ.10,000 டெபாசிட்க்கு பின்னர் அனுப்பப்படும் ரூ.1,000 க்கு ரூ.5 (அதிகபட்சம் ரூ.50) கட்டணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரியர் மூலம் பின் ரீஜெனரேஷன், மூத்த குடிமக்களுக்கு கேஷ் / இன்ஸ்ட்ரூமென்ட் பிக்அப் மற்றும் பேலன்ஸ் ஸ்டேட்மெண்ட்ஸ் போன்ற சில கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
ஏடிஎம் டிக்ளைன் கட்டணம் ரூ.25 ஆகவே உள்ளது, ஆனால் இப்போது இது கோட்டாக் அல்லாத ஏடிஎம்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் ஸ்டேண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் (SI) ஃபெயிலருக்கான கட்டணம் ரூ.200 இல் இருந்து ரூ.100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்புகள் ஆனது, கார்டு வகையின் அடிப்படையில் திருத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வரம்புகளுக்கு அப்பால் கட்டணம் விதிக்கப்படும்.
இதற்கு முன்னதாக யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளை (UPI transaction ID) உருவாக்கும் செயல்முறையை தரப்படுத்துவதற்காக, என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது, யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளில் "எண்ணெழுத்து" எழுத்துக்களை (Alphanumeric characters) மட்டுமே பயன்படுத்தும் படியும், சிறப்பு எழுத்துக்களை (Special characters) பயன்படுத்துவதை தவிர்க்கவும் அறிவுறுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல், எந்த யுபிஐ பேமெண்ட் ஆப்களாலும் சிறப்பு எழுத்துகளை பயன்படுத்தி பரிவர்த்தனை ஐடிகளை உருவாக்க முடியாது. ஒருவேளை பரிவர்த்தனை ஐடியில் சிறப்பு எழுத்துகள் உள்ள யுபிஐ ஆப்பை நீங்கள் பயன்படுத்தினால், அந்த ஆப் வழியிலான பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ பரிவர்த்தனை ஐடி ஆனது உங்களுடைய யுபிஐ ஐடி-யில் இருந்து வேறுபட்டது என்பதை நினைவில் கொள்ளவும் இரண்டையும் ஒன்றென எண்ணி குழப்பிக்கொள்ள வேண்டாம்.


Click it and Unblock the Notifications








