Home
News

HDFC வங்கியில் அக்கவுண்ட் இருக்கா.. ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?

HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதாவது லாக்கர் கட்டணத்தில் மாற்றம், ஏடிஎம் பணம் எடுக்கும் விதிகள், கடன் வட்டி விகிதங்கள் போன்றவற்றில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது எச்டிஎப்சி வங்கி.

அதுவும் இந்த மாற்றங்களில் சில ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. மற்றவை வரும் ஏப்ரல் 1 2026 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இந்திய முழுவதும் உள்ள பல மில்லியன் கணக்கான வங்கி வாடிக்கையாளர்களைப் பாதிக்கலாம்.

HDFC வங்கியில் அக்கவுண்ட் இருக்கா.. ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்..

1.ஏடிஎம் மையங்களில் யுபிஐ (UPI) சேவை மூலம் பணம் எடுக்கும் வசதியான யுபிஐ ஏடிஎம் வித்ட்ராவல்கள் (UPI ATM Withdrawals) விரைவில் மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்பிற்குள் (Monthly free transaction cap) சேர்க்கப்படும் என்று எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் இலவச வரம்பை மீறினால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 மற்றும் பொருந்தக்கூடிய வரிகள் வசூலிக்கப்படும்.

அதாவது ஏடிஎம் மையங்களில் UPI மூலம் பணம் எடுப்பது தனிப்பட்ட முறையில் இலவசமாக இருந்தது. ஆனால் இனி அப்படி இருக்காது என அறிவித்துள்ளது HDFC வங்கி . இதுவும் DEPIT கார்டு மூலம் பணம் எடுப்பதைப் போன்றே கணக்கில் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. ஆக இனி உங்கள் மாதாந்திர இலவச பரிவர்த்தனைகள் முடிவடையும் பட்சத்தில் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படலாம். குறிப்பாக இந்த விதி வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும்.

2. HDFC வங்கி லாக்கர் வாடகையில் மாற்றம் வருகிறது. இதுவும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வரும். இதுதவிர கடன் வட்டி விகிதங்கள், நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 1-ம் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

புதிய வருமான வரிச் சட்டம்
புதிய விதிகளின்படி, வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸில் பணம் டெபாசிட் செய்யும்போது அல்லது எடுக்கும்போது பான் எண்ணை மேற்கொள் காட்டுவதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது முன்னதாக ரூ.50,000-க்கு மேல் பரிவர்த்தனைகளுக்கு பான் கட்டாயமாக இருந்தது. இப்போது, ​​ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் வரையிலான ரொக்க பரிவர்த்தனைகளுக்கு பான் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ரூ.10 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனைகளுக்கு பான் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல், உணவகங்கள், அரங்குகள் அல்லது ஈவென்ட் மேனேஜர்களுக்குக் கொடுக்கும் பேமென்ட் ரூ.1 லட்சத்தைத் தாண்டினால் பான் கார்டு காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நடைமுறையில் பேமென்டில் ரூ.50,000 தாண்டினால் பான் கார்டு காட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது.

புதிய வருமான வரிச் சட்டத்தின் படி, ரியல் எஸ்டேட்டில் ரூ.20 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நிலம் அல்லது வீட்டை வாங்கினாலோ, பரிசாகப் பெற்றாலோ பான் கார்டு தேவைப்படும். முன்பு இந்த லிமிட் ரூ.10 லட்சமாக இருந்தது.

HDFC வங்கியில் அக்கவுண்ட் இருக்கா.. ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்..

புதிய விதியின்படி ரூ.5 லட்சத்திற்கும் மேலான இருசக்கர வாகனங்களை வாங்கினால் பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். அதேபோல் கார் வாங்கினாலும் பான் கார்டு கட்டாயம் ஆகும். இதற்கு டிராக்டர்கள் மட்டும் விதிவிலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதியின்படி எந்தவொரு காப்பீட்டுக் கொள்கையையும் வாங்குவதற்கு இனி PAN அட்டை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்பதற்காக, புதிய வருமான வரி விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இப்போது வரைவு விதிகள் வெளியாகி உள்ள நிலையில் வரும் 2026 ஏப்ரல் 1 முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HDFC Bank Announces New Banking Rules Affecting FD Rates and UPI ATM Withdrawals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X