கையில பணமா எடுத்து வச்சிக்கோங்க! இந்த மே மாதம் 2 நாட்கள் மட்டும் UPI, IMPS வேலை செய்யாது! எப்போது? எந்த வங்கி?
எச்டிஎப்சி வங்கி (HDFC Bank) ஆனது 2025 ஆம் ஆண்டு மே 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகளை அறிவித்துள்ளது. ஆகையால் மேற்குறிப்பிட்டுள்ள 2 நாட்களில் எச்டிஎப்சி வங்கியின் யுபிஐ (UPI) சேவை, நெட் பேங்கிங், டெபிட் / கிரெடிட் கார்டு பயன்பாடு, லோன் மற்றும் டீமேட் சேவைகள் உள்ளிட்ட பல முக்கிய சேவைகள் தற்காலிகமாக வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பராமரிப்பு பணியானது எச்டிஎப்சி வங்கியின் மிகவும் வழக்கமான உள்கட்டமைப்பு மேம்பாடுகளின் ஒரு பகுதியாகும் என்றும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க இந்த பராமரிப்பு பணியானது அதிகாலை நேரங்களில் (பொதுவாக குறைந்த வங்கி சேவைகள் நடக்கும் நேரங்களில்) நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 9 ஆம் தேதி அன்று எந்த நேரத்தில் எந்தெந்த எச்டிஎப்சி வங்கி சேவைகள் வேலை செய்யாது? டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் ஆனது இந்திய நேரப்படி அதிகாலை 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கிடைக்காது. இது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய 2 வகையான பயன்பாட்டையும் பாதிக்கும்.
மேலும் எச்டிஎப்சி பேங்க் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளை செய்வது அதிகாலை 12:30 மணி முதல் அதிகாலை 2:00 மணி வரை செயல்படுத்தப்படாது. இந்த 90 நிமிட காலத்தில், எச்டிஎப்சி வழங்கிய கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைன் பர்சேஸ் செய்வதை வாடிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும் மே 9 ஆம் தேதி அதிகாலை 1:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை எச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் கார்டு சேவைகள் மற்றும் ஸ்டேட்மென்ட் அம்சங்களும் செயல்படாது. இந்த 3 மணி நேர பராமரிப்பு நேரத்தில் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை செய்யவோ அல்லது மாதாந்திர ஸ்டேட்மென்ட்ன்டை அணுகவோ அல்லது பதிவிறக்கவோ முடியாது.
மே 10 ஆம் தேதி அன்று எந்த நேரத்தில் எந்தெந்த எச்டிஎப்சி வங்கி சேவைகள் வேலை செய்யாது? மே 10 ஆம் தேதி, மிகவும் விரிவான முறையில் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் ஆப் சேவைகள் பாதிக்கப்படும் அதிகாலை 2:30 மணி முதல் அதிகாலை 5:30 மணி வரை, பயனர்கள் தங்கள் அக்கவுண்ட் தகவலை அணுகவோ, பணம் செலுத்தவோ அல்லது நிதி பரிமாற்றங்களை தொடங்கவோ முடியாது.
இதன்கீழ் யுபிஐ (UPI), ஐஎம்பிஎஸ் (IMPS), என்இஎப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) போன்ற முக்கிய கட்டண முறைகளும் அடங்கும். மேலும் மெர்ச்சண்ட் பேமன்ட்ஸ் மற்றும்இன்ஸ்டன்ட் அக்கவுண்ட் ஓப்பனிங் ஆகிய சேவைகளும் மேற்குறிப்பிட்ட நேரத்தில் அணுக கிடைக்காது.
மேலும் மே 10 ஆம் தேதி அன்று கிரெடிட் மற்றும் டீமேட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது. லோன் தொடர்பான பரிவர்த்தனைகள் இந்திய நேரப்படி காலை 4:30 மணி முதல் காலை 6:30 மணி வரை தடை செய்யப்படும். அதே நேரத்தில் வர்த்தகம் மற்றும் பிற தொடர்புடைய சேவைகள் உட்பட டீமேட் அக்கவுண்ட் நடவடிக்கைகள் ஆனது இந்திய நேரப்படி காலை 5:00 மணி முதல் காலை 7:00 மணி வரை அணுக முடியாததாக இருக்கும்.
கூடுதலாக, கிரெடிட் கார்டு சேவைகள் ஆனது மே 10 ஆம் தேதி அன்று காலை 5:00 மணி முதல் காலை 7:00 மணி வரை மற்றொரு இடையூறையும் சந்திக்கும். இந்த நேரத்தில், பயனர்கள் பரிவர்த்தனைகள் அல்லது கார்டு தொடர்பான அம்சங்களை அணுகுவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
மிகவும் முக்கியமாக மே 10 அன்று அதிகாலை 2:30 மணி முதல் காலை 6:30 மணி வரை யுபிஐ சேவைகளுக்கான 4 மணிநேர செயலிழப்பு நடக்கும். இந்த நேரத்தில் எச்டிஎப்சி வங்கி அதன் யுபிஐ உள்கட்டமைப்பை மேம்படுத்த உள்ளது. இதன் விளைவாக, எச்டிஎப்சி சேவிங்ஸ் மற்றும் நடப்பு கரண்ட் அக்கவுண்ட்கள், ரூபே கிரெடிட் கார்டுகள் மற்றும் மூன்றாம் தரப்பு யுபிஐ ஆப்களுடன் இணைக்கப்பட்ட அனைத்து யுபிஐ சேவைகளும் கிடைக்காது!
மே 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடக்கும் இந்த பராமரிப்பு நேரங்களுக்கு முன்னதாக, ஏதேனும் முக்கியமான பரிவர்த்தனையை செய்ய வேண்டி இருந்தால், அதை முன்கூட்டியே செய்யுமாறு எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் இடையூறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்று எச்டிஎப்சி வங்கி நம்புகிறது.


Click it and Unblock the Notifications








