ஐப்ரவ்சரை இன்ஸ்டால் செய்ய இபிபோவுடன் கூட்டணி வைக்கும் எச்சிஎல்

Posted By: Karthikeyan
ஐப்ரவ்சரை இன்ஸ்டால் செய்ய இபிபோவுடன் கூட்டணி வைக்கும் எச்சிஎல்

கணினி உலகில் தனி முத்திரை பதித்து வரும் எச்சிஎல்லின் டேப்லெட்டுகளுக்கு கணிசமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக தனது டேப்லெட்டுகளில் ஐப்ரவ்சஸர் என்ற ஒரு புதிய சாப்ட்வேரை எச்சிஎல் இன்ஸ்டால் செய்ய இருக்கிறது. அதற்காக இபிபோ வெப் ப்ரைவேட் லிமிடட் நிறுவனத்தோடு எச்சிஎல் கூட்டணி வைத்திருக்கிறது.

இந்த ஐப்ரவ்சர் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு மொபைல் ப்ரவ்சர் ஆகும். இந்த ப்ரவ்சரை எச்சிஎல் தனது டேப்லெட்டுகளில் இன்ஸ்டால் செய்தால் கண்டிப்பாக எச்சிஎல்லின் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார்கள்.

இந்த ஐப்ரவ்சரை டென்சென் என்ற மிகவும் பிரபலமான ஆசியாவின் மிகப் பெரிய இன்டர்நெட் நிறுவனம் வழங்குகிறது. இந்த ப்ரவ்சரை தனது மி யு1 மற்றும் மி ஒய்2 ஆகிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளில் இன்ஸ்டால் செய்ய இருக்கிறது எச்சிஎல்.

இந்த ப்ரவுசரை இன்ஸ்டால் செய்வதன் மூலம் இந்த டேப்லெட்டுகளில் ப்ரவுசிங் வேலைகளை மிக வேகமகாக செய்ய முடியும். குறிப்பாக இணைய தளங்களை தேடுதல், இமெயில் அனுப்புதல், சமூக வலைத் தளங்களில் வேலை செய்தல் மற்றும் செய்திகளை வாசித்தல் போன்ற வேலைகளை மிக விரைவாக செய்ய முடியும்.

இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்றன. இந்த ஐப்ரவ்சரை இன்ஸ்டால் செய்வதன் மூலம் எச்சிஎல் வாடிக்கையாளர்கள் தங்களது டேப்லெட்டுகளில் புதிய அனுபவத்தைப் பெறுவார்கள் என்று எச்சிஎல்லின் வர்த்தக மேலாளர் விக்ராந்த் கொரனா தெரிவித்திருக்கிறார்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot