குறைந்த விலையில் டேப்லெட்டுகள்: எச்சிஎல் அறிமுகம்

By Super
|
குறைந்த விலையில் டேப்லெட்டுகள்: எச்சிஎல் அறிமுகம்

எச்சிஎல் நிறுவனம் சமீபத்தில் இரண்டு புதிய டேப்லட்களை அறிமுகம் செய்துள்ளது. மீ யூ-1 மற்றும் மீ டியூ டேப் என்ற பெயர் கொண்ட அந்த 2 டேப்லட்களும் உயர்ந்த தொழில் நுட்பத்தினை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும்.

மீ யூ-1 டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குவதால் சிற்பபான வேகத்தினையும் வழங்கும்.

இந்த டேப்லட் 7 இஞ்ச் திரை வசதியினையும் வழங்கும். இதன் இன்டர்னல் ஸ்டோரேஜ் 4 ஜிபி கொண்டதாக இருக்கும். இதன் மெமரி வசதியினை 32 ஜிபி வரை எளிதாக விரிவுபடு்த்தி கொள்ளவும் முடியும்.

யூ-1 டேப்லட்டின் மூலம் வைபை வசதியினை சிறப்பாக பெறலாம். இன்னொரு டேப்லட்டான மை எடியூ டேப், கல்விக்காக பிரத்தியேகமாக பயன்படுத்தும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லட்டில் 2 விதமான மாடல்கள் உள்ளன. மை எடியூ டேப்-கே12 மற்றும் மை எடியூ டேப்-ஹையர் எஜுக்கேஷன் (எச்இ) என்ற இந்த டேப்லட்களை கல்வி சம்மந்தமாக பயன்படுத்தலாம்.

மீ யூ-1 டேப்லட்டை ரூ.7,999 விலையில் பெறலாம். மை எடியூ டேப்-கே12 டேப்லட் ரூ.11,499 விலையிலும் மை எடியூ டேப்-எச்இ டேப்லட் ரூ.9,999 விலையிலும் எளிதாக கிடைக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X