Home
News

மைக்ரோசாஃப்ட் மீதான கிரிமினல் வழக்கை ரத்து செய்த டெல்லி உயர்நீதிமன்றம்!

By Super
மைக்ரோசாஃப்ட் மீதான கிரிமினல் வழக்கை ரத்து செய்த டெல்லி உயர்நீதிமன்றம்!

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதாக கூறி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், தவறான தகவல்களையும் மக்களிடம் திணிப்பதாக 21 இணையதளங்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஃபேஸ்புக், யூ டியூப், மைக்ரோசாஃப்ட் இந்திய நிறுவனம் உள்பட பல இணையதளங்களின் மீது தொடரப்பட்டது.

ஆனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு மீது தொடரப்பட்ட இந்த வழக்கு இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற இணையதளங்களை போல் மைக்ரோசாஃப்டு கருத்துக்களை பரிமாறி கொள்ளும் சமூக இணையதளமல்ல என்றும், இது முழுக்க முழுக்க சாஃப்டுவேர் தயாரிப்பு மற்றும் க்ளவுடு கம்ப்யூட்டிங் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனால் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடவதாக சொல்லப்படும் கருத்துக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை பொருத்த அளவில் வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளது.

இதை ஏற்றுக்கொண்டு, மைக்ரோசாஃப்ட் இந்திய நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X