Home
News

அடிக்கடி Google Pay-ல் இந்த பிரச்சனை வருகிறதா? சரி செய்ய இதோ எளிய வழிமுறைகள்.!

இந்தியா முழுவதும் கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். சிறிய கடைகள் முதல் பெரிய பெரிய ஷாப்பிங் மால் வரை இந்த யுபிஐ செயல்கள் பயன்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கூகுள் பே செயலியில் தற்போது பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது லோன் எடுக்கும் வசதி உட்பட பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக பேடிஎம், போன்பே செயலிகளை விட கூகுள் பே செயலியைத் தான் மக்கள் அதிகம் பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

அடிக்கடி Google Pay-ல் இந்த பிரச்சனை வருகிறதா?

அதேபோல் கூகுள் பே செயலியில் பரிவர்த்தனை செய்வதில் எதாவது பிரச்சனை இருந்தால், அதை சரி செய்யும் வழிமுறைகளும் உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே சற்று விரிவாகப் பார்ப்போம்.

புகார் செய்யலாம்: சில சமயம் பயனரின் கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டாலும் பெறுநரை சென்றடையாது. இதுபோன்ற சூழ்நிலையில் கூகுள் பே சில நொடிகளில் ஓரிஜனல் அதாவது அனுப்புநரின் வங்கி கணக்கிற்குத் தானாகவே பணத்தை திருப்பித் தருகிறது. ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் பணத்தை திரும்பப் பெற 48 மணி நேரம் ஆகலாம். ஒருவேளை 48 மணிநேரத்திற்குப் பிறகும் பணத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால் நீங்கள் உடனே புகார் செய்ய வேண்டும். இதைக் கூகுள் பே ஆப் மூலம் செய்யலாம்.

குறிப்பாக புகார் தெரிவிக்க கூகுள் பே செயலியில் Transaction History > Select the transaction > Having Issues > Payment Issue> அதன்பின்பு ஸ்கிரீனில் வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும். கூகுள் பே நபர்கள் இந்த புகாரை ஆராய்ந்து தீர்வு வழங்க உதவுவார்கள்.

அதேபோல் 1800-419-0157 என்ற எண்ணை டயல் செய்வதன் மூலம் கூகுள் பே வாடிக்கையாளர் சேவையை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். இது கூகுள் பே-வில் பணம் செலுத்துதல் தொடர்பான அனைத்து உதவிகளுக்கான கட்டணமில்லா எண்ணாகும்.

சர்வர் பிழை: கூகுள் பே பயனர்கள் Encountering 'Can't reach bank server' error on Google Pay என்பதைப் பார்த்திருக்கலாம். இது ஒரு பொதுவான error ஆகும். இது சரியான இன்டர்நெட் கனெக்ஷன் இருந்தபோதிலும், வங்கியின் பக்கத்தில் உள்ள சர்வர் பிழை காரணமாக உங்களால் பணம் செலுத்த முடியாமல் போகலாம். இந்த சூழ்நிலையில் போன்பே அல்லது பேடிஎம் போன்ற பிற யுபிஐ கட்டணப் பயன்பாடுகளைப் பயன்படுத்தலாம்.

இன்டர்நெட் கனெகஷன்: QR குறியீட்டை ஸ்கேன் செய்யவோ அல்லது கூகுள் பே-வில் பணம் செலுத்தவதை அங்கீகரிக்கவோ முடியாவிட்டால். உங்கள் போனில் இருக்கும் ஆக்டிவ் இன்டர்நெட் கனெகஷன் இல்லாமல் இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மொபைல் அல்லது வைஃபை நெட்வொர்க்கை பயன்படுத்தி ஒருவர் கூகுள் பே மூலம் பணம் செலுத்த முடியும் என்றாலும், தடையில்லா டேட்டா இணைப்பு இருப்பதை உறுதிசெய்யவும்.

அடிக்கடி Google Pay-ல் இந்த பிரச்சனை வருகிறதா?

கூகுள் பே செயலியை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த மூன்று வழிமுறைகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் கூகுள் பே மூலம் யுபிஐ முறையில் உலக நாடுகளில் இந்தியர்கள் பணம் செலுத்தும் அம்சம் விரைவில் அறிமுகமாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கூகுள் இந்தியா டிஜிட்டல் சேவை மற்றும் என்பிசிஐ இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ் லிமிடெட் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே இந்த வசதி மூலம் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது வெளிநாட்டு கரன்சி மற்றும் கிரெடிட் கார்டு / ஃபாரக்ஸ் கார்டுகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் செலுத்துவதை எளிமையாகவும், பாதுகாப்பாகவும், பயனர்களுக்கு வசதியான முறையிலும் மேற்கொள்ளும் மற்றொரு நிலையாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Having trouble using Google Pay frequently? Here's how to fix it in 3 steps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X