Home
News

புது ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிட்டீங்களா? அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி தமிழ்நாட்டில் 2.24 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் உள்ளன. மேலும் கடந்த மே மாதம் 2021 முதல் கிட்டத்தட்ட 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது.

அதேபோல் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையை வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள், ஆதரவற்றோர், முதியோர், கூலி வேலை பார்ப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள் எனப் பலர் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

புது ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிட்டீங்களா?

இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல வெளிவந்துள்ளது. newindianexpress தகவலின்படி, ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் ஒரு கார்டும் கேட்டு விண்ணப்பத் தொடங்கி உள்ளனர்.

தற்போது இதனால் தான் உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களில், தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக இருக்கிறதா? என்பதை அதிகாரிகள் முதலில் ஆய்வு செய்கின்றனர்.

புது ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிட்டீங்களா?

அதன்பின்பு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் முகவரிக்குச் சென்று வீட்டை ஆய்வு செய்கின்றனர். குறிப்பாகச் சமையலறை ஒன்று இருக்கிறதா? ஒரு சிலிண்டரா? 2 சிலிண்டரா என்பதை நேரில் சென்று பார்க்கின்றனர். மேலும் புதிதாக திருமணம் செய்தவர்கள் என்றால், பழைய கார்டில் இருந்து பெயரை நீக்கி விட்டு புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது திருமண பத்திரிகைகளை இணைத்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் சரிபார்த்த பின்பு தான் புதிய ரேஷன் கார்டுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்கிறார்கள்.

ஆனால் இந்த ஆய்வுப் பணியை முடிப்பதற்கு இப்போது காலதாமதம் ஆவதால் புதிய ரேஷன் கார்டு கிடைப்பதில் 3 முதல் 4 மாதங்கள் வரை தள்ளிப்போகிறது. பின்பு இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி தெரிவித்தது என்னவென்றால், தகுதியான நபர்களுக்கு புதிய கார்டு வழங்குவதில் எவ்வித பிரச்சனையும் இல்லை.

புது ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிட்டீங்களா?

ஆனால் 2 பேருக்கு ஒரு கார்டு வாங்க வேண்டும் என்பதற்காகவே தாய்-தந்தையர் பெயரில் பலர் இப்போது விண்ணப்பிக்கத் தொடங்கிவிட்டனர். எனவேதான் சமையல் அறை எத்தனை உள்ளது? சிலிண்டர் எத்தனை இருக்கிறது? யார் பெயரில் சிலிண்டர் உள்ளது போன்ற விவரங்களைச் சரிபார்க்கச் சொல்லி உள்ளோம் என்று கூறினார்.

மேலும் இந்த ஆய்வுப் பணிக்கு ஊழியர்கள் சென்று வருவதால் விசாரித்து முடிந்த பின்பு தான் புதிய ரேஷன் கார்டு அச்சிடப்படுகிறது என்று உணவு வழங்கல் துறை அதிகாரி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Have you applied for a new ration card? Then you must know this matter : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X