ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக ரூ.499-விலையில் தரமான சலுகையை வழங்கிய ஹாத்வே.!

|

நகரங்களில் சிறப்பான இணைய சேவையை வழங்கி வருகிறது ஹாத்வே (Hathway), இது அதிக பிரபலம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெறும் ரூ.499-க்கு தனது சிறப்பான சலுகைகளை மக்களுக்கு அளித்திட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 100Mbps இணைய வேகம்

100Mbps இணைய வேகம்

அதிகமான இடங்களில் இந்நிறுவனம் 100Mbps இணைய வேகம் அளித்துவந்த போதிலும், சில தேர்தெடுக்கப்பட்ட நகரங்களில் 300Mbpsவேகத்தை நிரூபிக்கத் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

மாதத்திற்கு 499 ரூபாய்

மாதத்திற்கு 499 ரூபாய்

மேலும் Hathway Freedom திட்டத்தை 12மாதங்களுக்கு ரூ.5988-க்கு அளிக்கும் இந்நிறுவனம் (மாதத்திற்கு 499 ரூபாய்)இந்த கட்டணத்துடன் கூடுதல் வரிகளையும் வசூல் செய்கிறது. பின்பு கூறப்பட்ட விலையை விட இந்த திட்டத்தின் விலைசற்று கூடுதலாக போகலாம்.

மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்.!மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்.!

 Hathway Freedom திட்டத்தை  வரம்பற்ற தரவு

குறிப்பாக இந்த நிறுவனம் Hathway Freedom திட்டத்தை வரம்பற்ற தரவு விருப்பத்துடன் வழங்குகிறது, ஆனால் ACT பைபர்நெட் போன்ற பிற போட்டியாளர்கள் தங்கள் இணையத் திட்டங்களில் FUP வரம்பைக் கொண்டுள்ளனர்.

ஆக்ட் பைபர்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஹாத்வே நிறுவனம் அதன் பிரபல இணைய சேவை வழங்குநர் ஜியோ பைபர், ஆக்ட் பைபர் நெட், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் நிறுவனங்களுக்கு ஹைதராபாத்தில் கடுமையான போட்டியை அளித்து வருகிறது.

100Mbps பிராட்பேண்ட்

100Mbps பிராட்பேண்ட்

அதாவது குறைந்தபட்ச அலைவரசி வேகமாக 25Mbps மற்றும் அதிகபட்ச 125Mbps வேகத்துடன் மலிவு கட்டண திட்டங்களை ஹாத்வே நிறுவனம் வழங்குகிறது. இதனிடையே தற்சமயம் Freedom திட்டம் 100Mbps பிராட்பேண்ட் வேகத்துடன் வருகிறதுஇ இதன் விலைரூ.599-க்கு (ஒரு சந்தாதாரர் மாதாந்திர அடிப்படையில் திட்டத்தை எடுக்க விரும்பினால்) அளிக்கிறது.

திட்டத்தை பயனர்கள்

ஒருவேளை இதே திட்டத்தை பயனர்கள் ஆறு மாதங்களுக்கு தேர்வு செய்தால், திட்டத்தின் செலவு 3,294 + வரி என்ற அடிப்படையில் (அதாவது மாதத்திற்கு 549 ரூபாய்) அளிக்கிறது. அதேப்போல் இந்த திட்டத்தை பயனர்கள் 12 மாதத்திற்கு எடுக்க விரும்பினால் ரூ.5,988+ வரி வசூளிக்கப்படுகிறது (அதாவது மாதம் 499 ரூபாய்). மேலும் ஹைதராபாத்தில் எந்த வரம்பும் இல்லாமல் வரம்பற்ற தரவுகளுடன் இது வருகிறது என்பது ஹாத்வே இணையத் திட்டங்களின் நன்மை.

549ரூபாய் வசூலிக்கப்படும்

இந்த ஹாத்வே நிறுவனம் 125Mbps திட்டத்தையும், ஹாத்வே தண்டர் (Hathway Thunder) திட்டம் என்றும் வழங்குகிறது. பின்பு பயனர் ஒரு மாத, அரை ஆண்டு அடிப்படை முறையில் ரூ.649, ரூ.3594 மற்றும் ரூ.6,588என்ற விலைகளில் பெறலாம். இந்த திட்டத்தின் சந்தாதாரர்கள் ஆண்டு கட்டணத் திட்டத்தைத் தேர்வுசெய்தால் மாதத்திற்கு 549ரூபாய் வசூலிக்கப்படும்.

மட்டுமே

ஆனால் இந்த திட்டங்கள் முதல் முறையாக Hathway பிராட்பேண்டில் சேரும் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமேபொறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Hathway Broadband new Freedom Plan offers 100mbps Speed at Rs 499 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X