ஜியோவுக்கு போட்டி: ரூ.399க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட் வழங்கும் ஹாத்வே.!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் ஜியோ ஜிகா பைபர் சேவையை நாடு முழுவதும் விரைவில் துவங்க இருக்கின்றது. இதில், வரம்பற்ற இணையம், ஹோம்டிவி, இலவச வாஸ் கால், ஸ்மார்ட்டிவி, 4 கே செட்டாபாக்ஸ் வழங்குதாக ஜிகா ஜிகா பைபர் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜியோவுக்கு போட்டியாகவும் சந்தையில், தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் வகையில், ரூ.399க்கு அளவில்லா பிராட்பேண்ட் சேவையை வழங்குகின்றது ஹாத்வே.
இதில், 100 எம்பிபிஎஸ், 150 எம்பிபிஎஸ், 200 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவைவைய வழங்குதாக ஹாத்வே அறிவித்துள்ளது.

ஜியோ ஜிகா பைபர்:
ரூ.799க்கு 100 எம்பிபிஸ் வேகத்தில் இலவச வாய்ஸ் கால், ஹோம் டிவி 200 சேனல்கள் ப்ரீ, 4 கே செட்டாப்ஸ், இலவச ஸ்மார்ட் டிவி உள்ளிட்டவை வழங்கின்றது. செலுத்தும் கட்டணத்திற்கு ஏற்பவும், வைப்பு தொகைக்கு ஏற்பவும் பல்வேறு சேவைகளை வழங்குகின்றது.

ரூ.399க்கு ஹாத்வே:
நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மலிவு விலையான ரூ.399 க்கு புதிய திட்டத்தை ஹாத்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களில் ஒன்றைப் போலவே, ஹாத்வே சந்தாதாரர்களுக்கும் 50Mbps வேகத்தில் ஹோம் பிராட்பேண்டை வழங்குகின்றது.

அளவில்லா இணையம்:
அளவில்லாமல் இந்த மலிவு விலைக்கு இணையத்தை வழங்குகின்றது. இதற்கு FUP வரம்பு இல்லை. எப்படி வேண்டுமானும் நாம் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பதிவுக் கட்டணம்:
ஹாத்வே திட்டத்திற்கு ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.1999 ஆகும். இது இந்த தொகையை நாம் திரும்பி பெற முடியாது.
ஹாத்வே செயல்படும் ஒரு சில வட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் ஹைதராபாத்தில் வேறு சில தென் மாநிலங்களில் உள்ளது.

சேவைகள் வழங்கும் ஹாத்வே:
மாத கட்டணங்களுக்கு ஏற்ப ஹாத்வே 100 எம்பிபிஸ், 150 எம்பிபிஎஸ், 200 எம்பிபிஎஸ் வேகத்தில், நாம் பிராட்பேண்ட் சேவைகளை நாம் பெறமுடியும். இதற்கு கட்டணமும் ஓரே சேவையாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications