பூமி அருகே சுற்றித்திரியும் 230 அடி நீளமுள்ள மர்ம விண்கலம்..!

|

பூமி கிரகத்திற்கு அருகே சுழன்று கொண்டிருக்கும் சிறுகோள் ஒன்றை நோக்கி மிகவும் வெளிச்சமான மற்றும் நீளமான ஒரு அடையாளம் தெரியாத விண்கலம் ஒன்று பயணிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ள இந்த வீடியோவில் காணப்படும் வெள்ளை பொருள் ஆனது யூஎப்ஒ எனப்படும் வேற்றுகிரக வாசிகளின் விண்கலமா என்ற கோணத்திலும் அந்த வீடியோ ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது சார்ந்த தகவல்களையும் பதிவான வீடியோவையும் கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்..!

230 அடி நீளம் :

230 அடி நீளம் :

பதிவான கருப்பு மற்றும் வெள்ளை வீடியோவில் வரும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஆனது சுமார் 230 அடி நீளம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சில நொடிகள் :

சில நொடிகள் :

அந்த மர்ம விண்கலம் ஆனது சில நொடிகள் மட்டுமே பதிவான அந்த வீடியோ முடியும் வரையிலாக சுழன்று கொண்டிருக்கும் ஒரு குறுங்கோளை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறிய நிலவு :

சிறிய நிலவு :

இது குறித்து விளக்கமளித்த நாசாவோ இந்த பொருள் பற்றி தனைகளுக்கு முன்னதாகவே தெரியும் என்றும், அது ஒரு வகையான ஒரு சிறிய நிலவு போன்ற விண்வெளி பொருள் என்றும் கூறியுள்ளது.

மறுப்பு :

மறுப்பு :

ஆனால், சில ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பகுப்பாய்வாளர்கள் நாசாவின் விளக்கத்தை ஏற்க மறுப்பு தெரிவித்ததோடு அந்த வீடியோவில் வருவது ஒரு யுஎஃப்ஒ என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

முட்டை வடிவம் :

முட்டை வடிவம் :

கிடைக்கப்பெற்ற வீடியோவை நன்கு ஆராய்ந்து பார்த்ததில் இருந்து அந்த மர்ம விண்கலம் ஆனது நீளமான மற்றும் அதே சமயம் சாத்தியமான முட்டை வடிவத்தில் (Oval shape) இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிக்ஸ்லேட் :

பிக்ஸ்லேட் :

சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவிக் கொண்டிருக்கும் இந்த வீடியோவில் காணப்படும் மர்ம பொருள் ஆனது உலோக மேலோடு கொண்டிருப்பது போல் தெரிகிறது என்ற கருத்துகள் ஒருபக்க எழ மறுபக்கம், 'ஸூம்' (Zoom) செய்யும்போது வீடியோ 'பிக்ஸ்லேட்' (Pixelate) ஆவதால் தான் அப்படி தெரிகிறது என்ற மறுப்பும் எழுந்தவண்ணம் உள்ளது

வீடியோ :

இந்த சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டது செக்யூர் டீம் என்ற யூட்யூப் சேனல் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

விண்ணில் தெரிந்த 'கடவுளின் கை', புகைப்படம் எடுத்த நாசா..!


பிளாக்ஹோல் விளைவுகள் : உயிரினங்கள் 'கிழிந்து அல்லது 'எரிந்து' சாகும்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Has NASA been keep a huge UFO near earth secret from us. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X