ஹாரி பாட்டர் கதைகளை இனி இ-புக்கிலும் படிக்கலாம்!

இதுவரை புத்தக வடிவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஹாரி பாட்டர் சாகச கதைகளை இனி மின்னணு சாதனங்களிலும் படிக்கலாம். ஆம்! ஹாரி பாட்டர் கதைகளை இ-புக்கில் படிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பபட்டிருக்கிறது.
குழந்தைகளையும், பெரியவர்களையும் பெரிய அளவில் கவர்ந்த ஹாரி பாட்டர் கதைகளை அனைவரும் இதுவரை புத்தக வடிவில் படித்து வந்தனர். ஆனால் இந்த கதையை இனி இ-புக் மூலம் படிக்கலாம். அதாவது இ-புக் வசதியினால் டேப்லட் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களிலும் இந்த ஹாரி பாட்டர் கதைகளை படிக்க முடியும்.
இதனால் எங்கு சென்றாலும், எந்த நேரத்திலும் புத்தகத்தின் பக்கங்களை புரட்ட வேண்டிய அவசியம் இல்லை. டேப்லட் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை ஒரு விரல் கொண்டு தட்டினால் போதும். மிக சவுகரியமாக படிக்க முடியும்.
எழுத்தாளரான ஜே.கே.ரவ்லிங் ஹாரி பாட்டர் கதைகளை எல்லா விதமான மின்னணு சாதனங்களிலும் இ-புக் மூலம் படிக்கும் வசதியினை ஏற்படுத்தியுள்ளார்.
இ-புக் வசதியில் ஹாரி பாட்டர் கதையை படிக்க இ-புக் வசதியை ஏற்படுத்தி இருக்கும் ஜே.கே.ரவ்லிங்கின் இந்த யுக்தி, நிச்சயம் மற்ற எழுத்தாளர்களையும் பெரிதும் கவர்ந்திழுக்கும். புத்தக வடிவில் விற்பனையை அள்ளி குவித்த ஹாரி பாட்டர், இனி இ-புக் வடிவில் வசூல் ராஜாவாக புதிய அவதாரம் எடுக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications