Home
News

வெறும் சாம்பிள் தான்- ஹர்திக் பாண்டியா கட்டியிருக்கும் வாட்ச் மதிப்பு ரூ.5 கோடி: அப்படி என்ன ஸ்பெஷல்?

27 வயதான ஆல் ரவுண்ட் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது பகிர்ந்த புகைப்படத்தில் அவர் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வெளிநாட்டில் பயணம் செய்தபடியும் அப்போது சன்கிளாஸ் உடன் கோடைக்கால தொப்பி அணிந்தபடியும் இருக்கிறார். அடுத்தடுத்த புகைப்படங்களை பார்க்கையில் அதில் பளபளப்பான மிக அரிதான பச்சை நிற மரகதங்கள் பொறிக்கப்பட்டுள்ள படேக் பிலிப் நவ்ட்டில்ஸ் பிளாட்டினம் 5711 வாட்ச் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

விலை உயர்ந்த 5711 வாட்ச்

32 பக்கோட் வெட்டு மரகதங்கள் இந்த வாட்ச்சில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் தொழிற்சாலைகளில் அமைக்கப்பட்டவை, இது 40 மிமீ கேஸ் மற்றும் ஒருங்கிணைந்த காப்பு இரண்டும் உலோகங்களால் ஆனது. மரகதங்கள் மணிநேர குறிப்பான்களாக இருக்கிறது. இது அடர் சாம்பல் நிற டயலுடன் வேறுபடுகின்றன. 5711 வாட்ச் ஆனது ஆஃப் கேடலாக் வகைகளை கொண்டுள்ளது. டார்க் டயல் செய்யப்பட்ட கடிகாரங்களில் இதுவும் ஒன்றாகும். அல்ட்ரா ரேட் படேக் வாட்ச் விலைகள் தற்போது ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பச்சை மரகதங்களுடன் வாட்ச்

பச்சை மரகதங்களுடன் வாட்ச்

ஹர்திக் பாண்டியாவின் கைக்கடிகாரம் ஆனது நவ்ட்டில்ஸ் வரம்பை சேர்ந்த அனைத்து கடிகாரங்களையும் போன்றே தேதி சாளரம் 3 மணி இருக்கும் இடத்தில் வைக்கப்படுகிறது. 5711 வரம் என்பதே அரிதான ஒன்றாகும் அதிலும் குறிப்பாக அடர் சாம்பல் நிற டயல் செய்யப்பட்ட மரகத மாடல் இன்னும் அரிதான மாடல்களில் ஒன்றாகும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த அரிதானவைகளில் ஹர்திக் பாண்டியா மட்டுமில்லை நகைச்சுவை நடிகர் கெவின் ஹார்ட் மற்றும் ராப்பர் டிரேக் போன்றவர்கள் இதில் அடங்குவர். ராப்பர் டிரேக்கின் படேக் சாதனமும் மரகதங்களால் அலங்கரிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா முக்கிய கடிகார ஆர்வலர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சிறந்த தொழில்நுட்பம்

பல்வேறு சிறந்த தொழில்நுட்பம்

ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் பேண்ட்கள் என தொடர்ந்து கடிகாரங்கள் அம்சங்கள் அதிகரித்து வருகிறது. பல்வேறு சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆப்பிள், சாம்சங், ரெட்மி என பல்வேறு நிறுவனங்களும் ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஸ்மார்ட் வாட்ச்களும் ஸ்மார்ட் பேண்ட்களும் உடல் ஆரோக்கிய அம்சம் என பல்வேறு ஆதரவுகளோடு வெளியாகின்றன.

ரூ.5 கோடிக்கு வாட்ச் இருக்கிறதா

ரூ.5 கோடிக்கு வாட்ச் இருக்கிறதா

ரூ.5 கோடிக்கு வாட்ச் இருக்கிறதா என ஆச்சரியப்படுபவர்களில் ஒருவராக இருந்தால் 55 மில்லியன் டாலர் வரையிலும் வாட்ச்கள் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. க்ராஃப் டைமண்ட் ஹலுசினேசன் என்ற வாட்ச் விலை 55 மில்லியன் டாலர் ஆகும். டாப் பட்டியல்களில் பார்த்தால் படேக் பிலிப் வாட்ச் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது.

படேக் பிலிப் என்ற கடிகாரம்

படேக் பிலிப் என்ற கடிகாரம்

படேக் பிலிப் என்ற கடிகாரம் மற்றும் கைக்கடிகாரம் உற்பத்தி செய்யும் நிறுவனமானது ஸ்விட்சர் லாண்டில் 1839 ஆம் நிறுவப்பட்டது. அதன் பின் ஜெனீவாவில் 1932 முதல் ஸ்டெர்ன் குடும்பத்தால் நடத்தப்பட்டு வருகிறது. உலகின் மிகவும் ஆடம்பரமிக்க நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் படேல் பிலிப் நிறுவனம் தயாரிக்கப்படும் ஒவ்வொரு கைக்கடிகாரமும் சுமார் 5 மில்லியன் டாலருக்கும் மேல் விற்கப்படுகிறது.

8 ஆண்டுகள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் கைக்கடிகாரம்

8 ஆண்டுகள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் கைக்கடிகாரம்

கடந்த 2014 ஆம் ஆண்டு ஹென்றி கிரேவ்ல் சூப்பர் காம்ப்ளிகேஷன் என்றழைக்கப்படும் கைக்கடிகாரம் சுமார் 2.13 கோடி டாலர் அதாவது ரூ. 131 கோடி ஏலத்திற்கு போனது. இந்த கடிகாரமானது 1925 ஆம் ஆண்டு படேக் பிலிப் நிறுவனத்திடம் ஹென்றி கிரேவ்ஸ் என்றவர் உருவாக்கித்தருமாறு கேட்டுள்ளார். இந்த கைக்கடிகாரம் வடிவமைப்பதற்கு 3 ஆண்டுகளும், தயாரிப்பதற்கு 5 ஆண்டுகளும் ஆனதாக கூறப்படுகிறது. இந்த கடிகாரமானது 2.31 கோடி டாலர் ஏலத்திற்கு விடப்பட்டு உலக சாதனை படைத்தது.

Best Mobiles in India

English summary
Hardik Pandya's Wear Rs.5 Crore Worth Patek Philippe Nautilus Platinum 5711 Watch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X