பதான் திரைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போனுடன் வரும் ஹர்திக் பாண்டியா! ட்விட்டரில் வெளியான புகைப்படம்!
ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் முந்தைய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து வசூலை குவித்து வருகிறது. தேசப்பற்று குறித்து பேசும் இந்த திரைப்படமானது நாடு முழுவதும் நல்ல வசூல் செய்து வருகிறது. இந்த திரைப்படம் ஒரு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்கான வாய்ப்பை அமைத்துக் கொடுத்துள்ளது.
பதான் படத்தின் இடைவேளை காட்சி
பதான் திரைப்படத்தை பார்க்க தியேட்டர்களுக்கு வருவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒன்று தனது புதிய ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பை இந்த படத்தின் இடைவேளை நேரத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை ட்விட்டர் பயனர் ஒருவர் தனது ட்வீட்டின் மூலம் பகிர்ந்துள்ளார்.

இடைவேளை நேரத்தில் தோன்றிய புகைப்படம்
திரைப்படத்தின் இடைவேளை நேரத்தில் தோன்றும் இந்த புகைப்படம் Poco X5 Pro குறித்தது ஆகும். இந்த புகைப்படத்தில் Poco X5 Pro வெளியீடு பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் புதிய போனை கிரக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கையில் வைத்திருக்கிறார். போக்கோவின் பிராண்ட் தூதராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
தற்போது வெளியாகி உள்ள புகைப்படத்தின் இடது மூலையில் பிளிப்கார்ட் லோகோ இடம்பெற்றிருக்கிறது. இதன்மூலம் புதிய போக்கோ எக்ஸ்5 ப்ரோ பிளிப்கார்ட் இல் பிரத்யேகமாக விற்பனைக்கு வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா வைத்திருக்கும் ஸ்மார்ட்போன்
சில தினங்களுக்கு முன்பு ஹர்திக் பாண்டியா இந்த மொபைல் போனை பயன்படுத்தும் புகைப்படம் வெளியானது. POCO X5 Pro 5G அறிமுகமாவதற்கு முன்னதாவே இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா அதை பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார். அதேபோல் POCO X5 Pro 5G ஸ்மார்ட்போனின் ஃபர்ஸ்ட் லுக்கை "லீக்" செய்தவர் ஹர்திக் பாண்டியா என்றும் குறிப்பிடலாம்.

ஹர்திக் பாண்டியா மூலம் போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படத்தின் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களும் உறுதிப்படுத்தப்பட்டது.
ஐகானிக் டூயல் டோன் ரியர் டிசைன்
POCO X5 Pro 5G ஸ்மார்ட்போன் மஞ்சள் நிற மாறுபாட்டில் இருக்கும் என்பது தெரிய வந்திருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிராண்டின் ஐகானிக் டூயல் டோன் ரியர் டிசைன் மற்றும் பெரிய கேமரா மாட்யூல் என ஸ்மார்ட்போனின் பின்புற மேற்பகுதி முழுவதும் தெளிவாகத் தெரிகிறது. அதேபோல் பவர் பட்டன் மற்றும் கைரேகை ஸ்கேனர் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் காண முடிகிறது. இந்த லீக்கில் ஸ்மார்ட்போனின் முன்பகுதி எதுவும் தென்படவில்லை.
POCO X5 Pro 5G சிறப்பம்சங்கள்
POCO X5 Pro 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ரெட்மி நோட் 12 ஸ்பீடு பதிப்பின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட சில தினங்களுக்கு முன்பு ரெட்மி நோட் 12 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி இருக்கும்பட்சத்தில் இதன் அம்சங்களையும் கணித்துவிடலாம்.
108 எம்பி முதன்மை கேமரா
POCO X5 Pro 5G ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778G சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் வெளியாகலாம். ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, இதில் 108 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும் என்றும் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோகால் ஆதரவுக்கு என 16 எம்பி கேமரா இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
POCO X5 Pro 5G ஸ்மார்ட்போனின் பேட்டரி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 5500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்படலாம். யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆதரவு இதில் இருக்கும். அதேபோல் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான MIUI 14 ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸ் இல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








