குட் நியூஸ்! சென்னையில் களமிறங்கிய Jio.. மொபைலில் இதை மட்டும் செய்தால் அதிவேக 5ஜி!

|

ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவை மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி உள்ளிட்ட நான்கு நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. 5ஜி சேவைகள் அறிமுகம் செய்வதற்கு முன்பே, ஜியோ அதன் போட்டியாளரான ஏர்டெல்லை விட சிறந்த 5ஜி இணைய வேகத்தை பதிவு செய்தது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

5ஜி சேவையை விரிவாக்கம் செய்த ஜியோ

5ஜி சேவையை விரிவாக்கம் செய்த ஜியோ

ஏர்டெல் இன் 5ஜி சேவை எட்டு நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஜியோ 5ஜி சேவை 4 நகரங்களில் மட்டுமே கிடைத்து வந்தது. இந்த நிலையில் ஜியோ, 5ஜி சேவைக் கிடைக்கும் பகுதியை விரிவுப்படுத்தி இருக்கிறது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஜியோவின் 5ஜி சேவை விரிவுப்படுத்தப்பட்ட பகுதியில் தமிழகத்தின் தலைநகரும் இடம்பெற்றிருக்கிறது.

சென்னையில் 5ஜி சேவை

சென்னையில் 5ஜி சேவை

சென்னையில் உள்ள ஜியோ பயனர்கள் இனி 5ஜி சேவையை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் உள்ள பயனர்களுக்கும் ஜியோ வெல்கம் ஆஃபரும் விரிவுப் படுத்தப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஜியோ 5ஜி தொடக்க விழாவில் சென்னையில் 5ஜி சேவை தொடங்கப்படுவதாக ரிலையன்ஸ் தலைவர் ஆகாஷ் அம்பானி அறிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் ஜியோவின் 5ஜி சேவையை தொடங்கி வைத்த ஆகாஷ் அம்பானி, அதே நாத்துவாரா பகுதியிலும் 5ஜி சேவைகள் கிடைக்கத் தொடங்கும் என குறிப்பிட்டார்.

ஜியோ 5ஜி வைஃபை சேவை

ஜியோ 5ஜி வைஃபை சேவை

அதன்படி ஜியோ 5ஜி சேவை மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி பகுதிகளில் மட்டும் கிடைத்து வந்த நிலையில் இனி தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும், ராஜஸ்தான் மாநிலத்தின் நாத்வாரா பகுதியிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிகம் கூடும் இடங்களில் ஜியோ 5ஜி சேவை

அதிகம் கூடும் இடங்களில் ஜியோ 5ஜி சேவை

இந்த பகுதிகளில் உள்ள வழிபாட்டு தளங்கள், கல்வி நிறுவனங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஜியோ 5ஜி வைஃபை சேவை கிடைக்கும் என ஆகாஷ் அம்பானி குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் 5ஜி சேவை

நாடு முழுவதும் 5ஜி சேவை

ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவை தான் இந்த நகரங்களிலும் கிடைக்கிறதே, பிறகு ஆகாஷ் அம்பானி அறிமுகம் செய்தார் என்று குறிப்பிடுகிறீர்களே என்று தோன்றலாம். இதுநாள் வரை கிடைத்தது சோதனை கட்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதையடுத்து நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் சோதனை இல்லாமல் முழுமையான 5ஜி சேவை வழங்க திட்டமிட்டிருக்கிறது. 2023க்குள் நாடு முழுவதும் 5ஜி சேவைக் கிடைக்கும் என ஜியோ உறுதியளித்திருக்கிறது.

5ஜி போன் என்பது மிக கட்டாயம்

5ஜி போன் என்பது மிக கட்டாயம்

ஜியோ 5ஜி சேவை பெறுவதற்கு புது சிம்கார்ட் எல்லாம் தேவையில்லை. தற்போது பயன்படுத்தும் 4ஜி சிம்கார்ட்டின் மூலமாகவே 5ஜி சேவையை பெறலாம். ஆனால் 5ஜி போன் என்பது மிக கட்டாயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதிகாரப்பூர்வ ஜியோ இணையதளம்

அதிகாரப்பூர்வ ஜியோ இணையதளம்

உங்கள் போனில் ஜியோ 5ஜி இணைப்பு கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டிருந்தால், ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபருடனான ரீசார்ஜ் திட்டத்துக்கு நீங்கள் மேம்பட வேண்டும். அதிகாரப்பூர்வ ஜியோ இணையதளத்தில் செக் செய்து ரீசார்ஜ் செய்தால் உங்கள் மொபைலில் 5ஜி சேவையை பெறலாம்.

5G வெல்கம் ஆஃபர்

5G வெல்கம் ஆஃபர்

மலிவு விலையில் அதிவேக 5ஜி என்ற முழக்கத்துடன் ஜியோ களமிறங்கி இருக்கிறது. Jio 5G வெல்கம் ஆஃபரின் கீழ், தகுதியான பயனர்களுக்கு நிறுவனம் 1gbps வேக இலவச வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. Ooklas Speedtest Intelligence அறிக்கையின்படி, ஒப்பீட்டளவில் ஜியோ பெரும்பாலான பகுதியில் அதிக மற்றும் அதீத 5ஜி வேகத்தை பதிவு செய்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Happy News For Jio Tamilnadu Users: Jio Expands 5G Services in New Cities

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X