கூகுள் தனது அலுவலகத்தில் அழிந்து போன டைனோஸர் வகை ஒன்றின் எலும்புக்கூடை நிறுவியுள்ளது எதற்கு தெரியுமா

|

வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி சேவையை அள்ளி வழங்கும் கூகுளின் 21வது பிறந்தநாள் இன்று. இதே நாளின் தான் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலையில் பயின்ற இரண்டு மாணவர்களால் துவங்கப்பட்டது. இந்த கூகுள் நிறுவனம். இப்போது கூகுளின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அனைத்து தகவல்களும் அத்துப்படி

அனைத்து தகவல்களும் அத்துப்படி

கூகுள் நிறுவனத்திற்கு உலகில் உள்ள அனைத்து தகவல்களும் அத்துப்படி. எதனைக் கேட்டாலும் இணையத்திலிருந்து தேடி எடுத்துத் தரும் கூகுள். இங்கு கூகுள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பல ருசிகரமான தகவல்களைக் காணலாம்.

இன்டெல் நிறுவன மேனேஜர் வீட்டில்..

இன்டெல் நிறுவன மேனேஜர் வீட்டில்..

கூகுள் தேடுதல் தளத்தில் உள்ள சர்ச் இஞ்சினுக்கு, இந்நிறுவனத்தினை நிறுவிய லாரி பேஜ் மற்றும் பிரின் இட்ட பெயர் பேக்ரப் (BackRub). கூகுள் நிறுவனத்தில், முதல் முதலாக நியமிக்கப்பட்ட அலுவலர் பெயர் கிரெய்க் சில்வர்ஸ்டெய்ன் (Craig Silverstein) ஆவார்.

கூகுள் நிறுவனத்தின் முதல் அலுவலகம் இன்டெல் நிறுவன மேனேஜர் வீட்டில் இருந்த கார் ஷெட்டில் இயங்கியது. ஓர் இணைய தளத்தின் தரத்தினை அளக்க பேஜ் ரேங்க் (Page Rank)என்ற அலகினை கூகுள் பயன்படுத்துகிறது.

உலகளவிலான டிஜிட்டல் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா?உலகளவிலான டிஜிட்டல் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா?

பால் புக்ஹெய்ட்

பால் புக்ஹெய்ட்

ஜிமெயிலை உருவாக்கிய கூகுள் பொறியாளர் பால் புக்ஹெய்ட் (Paul Buchheit). இவர் தான் கூகுள் நிறுவனத்தின் புகழ் பெற்ற "Don't be evil" என்ற வாசகத்தைக் கொண்டு வந்தவர். கூகுள் நிறுவனம் துவங்கிய புதிதிலேயே பெரும் வளர்ச்சியைக் கண்டது. அதன் விளைவாக 2000வது ஆண்டிலேயே நியூயார்க்கில் அலுவலகத்தைத் துவங்கியது.

உலகிலேயே முதன் முறையாகக் கூகுள் நிறுவனம் தன் நிறுவன ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்கியது. இது மட்டுமில்லாமல் அவர்களது வீட்டு செல்ல பிராணிகளையும் அவர்களுடன் எடுத்துவர அனுமதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிராண்ட் சென்ட்ரல்

கிராண்ட் சென்ட்ரல்

கிராண்ட் சென்ட்ரல் (GrandCentral) என்ற நிறுவனத்தினைக் கையகப்படுத்தி, கூகுள், கூகுள் வாய்ஸ் (Google Voice) என்ற சேவையைக் கொண்டு வந்தது. கூகுள் நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டம் Google I/O என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு Google I/O கூட்டத்தின் போது, இதன் நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி பிரின், ஸ்கை டைவிங் செய்து, உலகத்தில் உள்ள பத்திரிக்கைகளில் செய்தியாக இடம் பெற்றார்.

அமேசான்: ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!!அமேசான்: ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!!

 அழிந்து போன டைனோஸர்

அழிந்து போன டைனோஸர்

கூகுள் தனது கலிபோர்னியா தலைமையகத்தில் அழிந்து போன டைனோஸர் வகை ஒன்றின் எலும்புக்கூடை நிறுவியுள்ளது. கூகுள் நிறுவனமும் அதுபோல அழிந்துவிடக்கூடாது என்பதை தங்கள் ஊழியர்களுக்கு நினைவுபடுத்தவே அது நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

தற்சமயம் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ வாக இருப்பதால், கூகுள் புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம்செய்து வருகிறது. மேலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளார் சுந்தர் பிச்சை அவர்கள்.

Best Mobiles in India

English summary
Happy Birthday Google: Search engine celebrates 21st birth anniversary and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X