ஆனந்த கண்ணீரில் சமூகவலைதளம்- 2 சாக்லெட், ஒரு லெட்டர்- அப்படி என்ன இருந்தது அந்த லெட்டரில்?

|

காணாமல் போன கால்பந்தை கண்டுபிடித்துக் கொடுத்த பெண்ணுக்கு அவரது வீட்டு வாசலில் காத்திருந்த ஆச்சரிய சம்பவம் இணையத்தில் பெரிதளவு வைரலாகி வருகிறது. டெய்ரிமில்க், கேலக்ஸி ஆகிய இரண்டு சாக்லெட்களுடன் கையில் எழுதப்பட்ட ஒரு லெட்டர் உடன் ஒரு பெண் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வேறலெவலில் வைரலாகி வருகிறது.

அறியாமல் செய்த உதவியில் கிடைக்கும் பேரின்பம்

அறியாமல் செய்த உதவியில் கிடைக்கும் பேரின்பம்

நாம் அறியாமல் செய்யும் உதவிகூட பலரையும் பூரிப்பில் ஆழ்த்தும். அதைவிட அதன்மூலம் கிடைக்கும் பாராட்டும் அன்பளிப்பும் நம்மை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதன்படி ஒரு பெண் குழந்தைகளுக்கு செய்யும் உதவியும் அதன்மூலம் அந்த பெண்ணுக்கு கிடைத்து சிறு அன்பளிப்பு குறித்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி பெரிதளவு பாராட்டுகளை பெற்று வருகிறது.

இங்கிலாந்தில் வசித்து வரும் பெண்

டுவிட்டில் இதுகுறித்து பகிர்ந்த தகவலை பார்க்கலாம், இங்கிலாந்தின் ஈஸ்ட் மிட்லாண்ட்ஸில் வசிக்கும் டோலி சுட் என்பவர் வீட்டு வாசலில் கிடந்த சில ஆச்சரியங்களின் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இரண்டு சாக்லெட்களும், கையால் எழுதப்பட்ட ஒரு கடிதமும் இருந்துள்ளது. கடந்தவாரம் தனது தோட்டத்தில் தங்களது கால்பந்தை கண்டுபிடிக்க உதவியதற்காக நன்றி என எழுதப்பட்டிருந்தது.

உங்களின் மூன்று உடன்பிறப்புகள்

உங்களின் மூன்று உடன்பிறப்புகள்

குழந்தைகளுக்கான கால்பந்து போட்டியில் பந்து காணாமல் போகியிருந்தது. அவர்களால் பந்தை கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் உதவி செய்தீர்கள். இல்லாதபட்சத்தில் அவர்களால் விளையாட்டை விளையாட முடியாமல் போகியிருக்கும். மிஸ் லேடிக்கு குழந்தைகள் நன்றியுணர்வோடு இருப்பார்கள் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு அந்த கடிதத்தில் இப்படிக்கு எட்டு, ஆறு மற்றும் ஐந்து வயதுடைய மூன்று உடன்பிறப்புகள் என எழுதப்பட்டிருந்தது.

லைக்குகள் குவியும் டுவிட்

இந்த டுவிட் 72.3கே மேற்பட்ட லைக்குகள் மற்றும் 5கே ரீடுவிட் பெற்றுள்ளது. இந்த டுவிட் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. குழந்தைகள் செலுத்தும் நன்றிகடன் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது என கருத்துகள் பதிவாகியுள்ளது. அதேபோல் மற்றொரு பயனர் இந்த இனிமையான குழந்தைகளை யார் வளர்த்தார்கள் என பதிவிட்டுள்ளார்.

இந்த டுவிட்டை பார்த்த மற்றொரு பயனர், ஆச்சரியமடைந்து தனது குற்றத்தை வெளிப்படுத்தினார். அதில், தனது உடன்பிறப்புகள் எரிச்சலையும்படி படுக்கையில் ரொட்டி துண்டுகளை போட்டிருக்கிறேன் என எழுதியுள்ளார். அதேபோல் அந்த பெண்ணை மிஸ் லேடி என குறிப்பிட்டிருக்கும் குழந்தையின் கையெழுத்து மிகவும் அற்புதமானது என கருத்துகள் பதிவிட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியடையும் விஷயம் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
Handwritten note and two chocolates is enough for Happiness: Look at this Tweet

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X