Home
News

வேலை வேண்டி ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம்: ஏலம்.!

பெரிய அளவிலான அறிமுகமே தேவையில்லாத, கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமை சக்தியாக இருந்தவர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ். பிப்ரவரி 24 ஆம் தேதி, சான் ப்ரான்ஸிஸ்க்கோவில் பிறந்து, பால் மற்றும் க்ளாரா தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டார்.

ட்டு, ஆன்மீக ஞானம்

கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு, ஆன்மீக ஞானம் தேடி இந்தியாவிற்கு பயணம் செய்து, பின் அமெரிக்கா திரும்பி 1976-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினார். ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் அவரின் காதலியான க்ரிஸ்ஸன் பென்னன் ஆகியோருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய் காரணமாக காலமானர்

புற்றுநோய் காரணமாக காலமானர்

அதேபோல் சிறந்த நிர்வாகத்தலைவர், சிறந்த உழைப்பாளர் மற்றும் சிறந்த தொழில்நுட்ப அறிவாளி எனப் புகழ்படும் ஸ்டீவ் ஜாப்ஸ் 2011-ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக காலமானர். இருந்தபோதிலும் இவருக்கு உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் உண்டு.

1973-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் தனது கைப்பட எழுதி

இந்த நிலையில் கடந்த 1973-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் தனது கைப்பட எழுதி வேலைக்கு விண்ணப்பம் ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது. மேலும் இந்த ஏலம் charterfields என்ற தளத்தில் நடைபெறுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஏற்கனவே ஸ்டீவ் ஜாப்ஸின் விண்ணப்பம் ஏலத்தில் விடப்பட்டது. அந்த சமயம் அது ஒரு லட்சத்து 75 ஆயிரம் டாலர் ஏலம் போனது. அப்போது இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் ஏலத்தில் எடுத்தார்.

இங்கிலீஸ் லிட்ரேச்சர்

மேலும் அந்த விண்ணப்பத்தில் மேஜர் படிப்பாக இங்கிலீஸ் லிட்ரேச்சர் எனக் குறிப்பிட்டுள்ளார். பின்பு ஸ்கில்ஸ் பகுதியில் கணினி, கால்குலேட்டர், தொழில்நுட்பம், டிசைன் பொறியியலில் போன்றவற்றில் சிறந்த தகுதி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விண்ணப்பத்தில் எந்த வேலை, எந்த நிறுவனம்

அதேபோல் அந்த விண்ணப்பத்தில் எந்த வேலை, எந்த நிறுவனம் போன்ற தகவல்கள் இடம்பெறவில்லை. ஆனாலும் அதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் கணினி நிறுவனம் என்பதை குறிப்பதாகவே உள்ளது. இந்த ஏலம் ஆனது பிப்ரவரி 24-ம் தேதி துவங்கி மார்ச் 24-ம் தேதி வரை நடைபெறும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Handwritten application for a job by Steve Jobs: Auction: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X