ஆர்டர் பிச்சிக்குது.. AMOLED டிஸ்பிளே.. GPS கனெக்டிவிட்டி.. மெட்டாலிக் கர்வ்ட் டயல்.. எந்த மாடல்?
ஒரு ஸ்மார்ட்போனுக்கு நிகரான டிஸ்பிளே அம்சங்கள் மட்டுமல்லாமல், மெட்டாலிக் கர்வ்ட் டயல் டிசைனும் கொண்டு ஹம்மர் நிறுவனத்தின் ரோபஸ்ட் (Hammer Robust) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மற்ற அம்சங்கள், விலை மற்றும் விற்பனை தேதி குறித்த முழு விவரங்கள் இதோ.
மிட்-ரேஞ்ச் விலை போன்களில் வரும் அமோலெட் டிஸ்பிளே எவ்வளவு கிளாரிட்டி கொடுக்குமோ அதே அளவு கிளாரிட்டியை கொண்ட ஸ்மார்ட்வாட்ச்சாக ஹம்மர் ரோபஸ்ட் இருக்கிறது. 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே என்று பின்னி எடுக்கிறது.

ஹம்மர் ரோபஸ்ட் அம்சங்கள் (Hammer Robust Specifications): இந்த ஹம்மர் ஸ்மார்ட்வாட்ச் 1.96 இன்ச் (410 x 502 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு கர்வ் கட் டிசைன் டிஸ்பிளே மாடலாகும். இதில் 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always on Display) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாட்ச்சின் டயல் மெட்டாலிக் பினிஷிங் பாடி (Metallic Finishing Body) கொண்டுள்ளது. அதில் ஸ்கின் பிரெண்ட்லி ஸ்ட்ராப் (Skin Friendly Strap) வருகிறது. இந்த ஹம்மர் வாட்ச்சில் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டி உடன் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, இன்பில்ட் ஸ்பீக்கர் (In-built Speaker) மற்றும் மைக்ரோபோன் (Microphone) வருகிறது.
அதோடு குயிக் டயல் பேட் (Quick Dial Pad), வைப்ரேஷன் (Vibration), ரிங்கிங் (Ringing) மற்றும் வால்யூம் கன்ட்ரோல் (Volume Controls) பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஹம்மர் வாட்ச்சில் ரன்னிங் (Running), ஜாக்கிங் (Jogging), ஸ்விம்மிங் (Swimming), சைக்கிளிங் (Cycling), வாக்கிங் (Walking) உள்ளிட்ட 100க்கும் மேற்ப ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன. இந்த ஹம்மர் வாட்ச் தொடர்ந்து, உடற்பயிற்சியில் ஈடுபவடுவோர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.
இந்த வாட்ச்சில் 6 ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) வருகின்றன. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor). பிளட் பிரஷர் மானிட்டர் (Blood Pressure Monitor), எல்பிஓ2 லெவல் மானிட்டர் (SpO2 Levels Monitor), ப்ரீத் டிராக்கிங் மானிட்டர் (Breath Training Monitor) மற்றும் ஃபீமேல் ஹெல்த் டிராக்கிங் மானிட்டர் (Female Health Tracking Monitor) கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஹம்மர் வாட்ச்சில் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் வருகிறது. IP67 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்பில்ஸ் (Spills) மற்றும் ஸ்பிளாஷ் (Splashes) ரெசிஸ்டன்ட்டும் அடங்கும். இதில் 100+ கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Faces) இருக்கின்றன. இந்த வாட்ச் டேட்டாக்களை பிட்கிளவுட் ஆப் (Fitcloud App) மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த ஹம்மர் வாட்ச்சில் ஜிபிஎஸ் (GPS), டிரிங் வாட்டர் ரீமைன்டர் (Drinking Water Reminder), செடெண்டரி ரீமைன்டர் (Sedentary Reminder), ஆக்டிவிட்டி ப்ரோம்ட்ஸ் (Activity Prompts), வெதர் ரிப்போர்ட்ஸ் (Weather Reports) உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன. இந்த வாட்ச் பிளாக் (Black) மற்றும் மெரூன் (Maroon) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த வாட்ச் இன்று (ஆகஸ்ட் 21) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் (Amazon) மற்றும் ஹம்மர் ஆன்லைன்.இன் (Hammeronline.in) ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலையை பொறுத்தவரையில் ரூ.2999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கம்மியான பட்ஜெட்டில் பிரீமியம் லுக்கிலும், ஃபிளாக்ஷிப் அம்சங்களுடனும் ஸ்மார்ட்வாட்ச் வேண்டும் என்றால், இந்த ஹம்ம்ர வாட்ச் நல்ல தேர்வாகும்.


Click it and Unblock the Notifications








