Home
News

2018 இல் உலகின் 50% பேர் ஆன்லைனில் இருப்பாங்க, அட ஆமாங்க

By Meganathan

இன்டெர்நெட் கூட்டம் இன்னும் அதிகமாக போகுதுங்க. ஈமார்க்கெட்டர் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் இன்டெர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்னிக்கை 2015 ஆம் ஆண்டில் 2.89 பில்லியனாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 இல் உலக மக்கள் தொகையில் பாதி பேர் ஆன்லைனில் இருப்பாங்க

அதுக்கு இப்ப என்னனு கேக்குறீங்களா, இந்த எண்னிக்கை உலக மக்கள் தொகையில் 42.4% என்றும் சீக்கிரமாகவே இது 6.2% உயர்ந்து உலக மக்கள் தொகையில் ஐந்தில் இருவர் என்ற கனக்கை எட்டும் என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் இன்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்னிக்கை அதிகரிக்கும் என்றும் 2018 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் பாதியான 3.6 பில்லியனுக்கும் அதிகமானோர் இன்டெர்நெட் பயன்படுத்துவார்கள் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

இந்தியா மற்றும் இந்தோனேஷிய சந்தையில் குறைந்த விலை ஸ்மார்ட்போன் விற்பனை மற்றும் ப்ராட்பேன்ட் கனெக்ஷன்கள் அதிகரிப்பது தான் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.

இந்தியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் இந்த எண்னிக்கை இரு மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி 620.7 மில்லியன் இன்டெர்நெட் பயனாளிகளை கொண்டு சீனா முதல் இடம் வகிக்கின்றது, இதை தொடர்ந்து 246 மில்லியன் பயனாளிகளோடு அமெரிக்கா இரண்டாமிடத்தில் உள்ளது. வரும் ஆண்டுகளில் அமெரிக்காவை பின்தள்ளி இந்தியா இரண்டாமிடம் பிடிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Half of the world's population will be online in 2018. Check out the next big thing which you wont believe right now.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X