BSNL நீ கலக்கு! பாதிக்கு பாதி விலையில் 365 நாள் வேலிடிட்டி.. டெய்லி 2GB டேட்டா.. 100 SMS.. அன்லிமிட்ட் வாய்ஸ்!
ஆள் ஆளுக்கு எடுக்குற முடிவு நமக்கு சாதகமா அமையுதுப்பா என்கிற வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ..அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திற்கு கனகச்சிதமாக பொருந்தும். ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகிய மூன்று தனியார் நிறுவனங்களுமே 2024 ஜூலை முதல் வாரத்தில் தத்தம் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை 10-27% வரை அதிகரித்தன.
ஆனால் தற்போது வரையிலாக பிஎஸ்என்எல் எந்தவிதமான சிறிய அளவிலான விலை உயர்வை கூட அறிவிக்கவில்லை. இதன் விளைவாக ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா சேவையில் இருந்த வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்குள் நுழைய தொடங்கினர். டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2024 செப்டம்பரில் மட்டும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய மூன்றும் ஒட்டுமொத்தமாக ஒரு கோடிக்கும் அதிகமான வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளன.

மறுகையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனமானது அதே செப்டம்பரில் கிட்டத்தட்ட 8.5 லட்சம் புதிய மொபைல் பயனர்களை சேர்த்துள்ளது. இப்படியாக ஏற்கனவே டாப் கியரில் போய்க்கொண்டு இருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனமானது ஜியோவுடன் ஒப்பிடும் போது கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலையில் 365 நாள் ரீசார்ஜ் ஒன்றை வழங்கி வருகிறது. அதென்ன திட்டம்? இதோ விவரங்கள்:
ஜியோ சேவையின் கீழ் இப்போது 2 வருடாந்திர திட்டங்கள் மட்டுமே உள்ளன. மேலும் அவைகள் இரண்டுமே டெய்லி 2.5 ஜிபி டேட்டாவை வழங்குவதால் மிகவும் விலை உயர்ந்தவைகளாக உள்ளன. இப்போதைக்கு ஜியோவின் கீழ் வருடாந்திர திட்டத்தை தேர்வு செய்தால் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.4000 செலவழிக்க வேண்டும். இது எல்லோராலும் செலவழிக்க முடியாத ஒரு தொகையாகும்
இந்த இடத்தில் தான் பிஎஸ்என்எல் நிறுவனம் நுழைகிறது. ரூ.4000 க்கு ஜியோ கொடுப்பதை பிஎஸ்என்எல் நிறுவனமானது ரூ.2000 க்கு கீழ் கொடுக்கிறது. நாம் இங்கே பேசுவது பிஎஸ்என்எல்-ன் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை (BSNL Rs 2399 Prepaid Plan) பற்றித்தான். இது 365 நாட்கள் அல்ல 395 நாட்கள் என்கிற வெய்ட்டிடியூடன் வருகிறது (எனவே தான் இது ஒப்பீட்டளவில் ரூ.2000 க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது என்று குறிப்பிட்டுளோம்)
பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் (Unlimited Voice Calling) மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களை (Daily 100 Free SMS) வழங்கும்.டேட்டா நன்மையை பொறுத்தவரை இது டெய்லி 2ஜிபி டேட்டாவுடன் (Daily 2GB Data) வருகிறது. டெய்லி டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர், அதாவது 2ஜிபி டேட்டா காலியான பின்னர், இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 40கேபிபிஎஸ் (40Kbps) ஆக குறையும்.
கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, ஹார்டி கேம்ஸ் (Hardy Games), சேலன்ஜர் அரேனா கேம்ஸ் (Challenger Arena Games), கேம்ஆன் (Gameon), ஆஸ்ட்ரோடெல் (Astrotell), கேமியம் (Gameium), லிஸட்ன் பாட்காஸ்ட் (Lystn Podcast), ஸிங் ம்யூசிக் (Zing Music), பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் (BSNL Tunes) ஆகியவைகளும் கிடைக்கும். மேற்கண்ட எல்லா நன்மைகளும் 395 நாட்களுக்கு கிடைக்கும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ரூ.2999 மதிப்புள்ள இன்னொரு திட்டமும் (BSNL Rs 2999 Prepaid Plan) உள்ளது. இது 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், டெய்லி 3ஜிபி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும்.உங்களுக்கு கூடுதல் டேட்டா தேவை என்றால், ரூ.2999 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். அதுவே லாபகரமான திட்டத்தை தேடினால், டெய்லி 2ஜிபி டேட்டா போதுமானதாக இருந்தால், நீங்கள் ரூ.2399 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications