ஜியோவின் அழிவு காலம் ஆரம்பமாகிறது - ஏன்.? எப்படி.? எதனால்.?

அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் அழிவு காலம் ஆரம்பமாகிறது என்கிறார்கள் வல்லுநர்கள் - ஏன் அவர்கள் அப்படி கூறுகிறார்கள்.?

|

இதுநாள் வரை இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவைகளை அள்ளியள்ளி வழங்கிய ரிலையன்ஸ் ஜியோவின் இலவச விளம்பர சேவைகளானது அடுத்த மார்ச் 31-ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இந்த இடத்தில் இருந்து அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் அழிவு காலம் ஆரம்பமாகிறது என்கிறார்கள் வல்லுநர்கள்.!

ஏன் அவர்கள் அப்படி கூறுகிறார்கள்.? ஒருவேளை அது நிஜமென்றால் அதற்கு காரணிகள் என்னவாக இருக்கும்.?

போராடி வருகின்றனர்

போராடி வருகின்றனர்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மூலம் நான்காவது தலைமுறை லாங்-டேர்ம் எவல்யூஷன் (4G-LTE) நெட்வொர்க்கின் கீழ் தரவு மற்றும் குரல் சேவைகளை வழங்க தொடங்கியதிலிருந்து பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார் மற்றும் இதர சேவை வழங்குநர்கள் தங்கள் நிதிநிலைகளை தக்கவைத்துகொள்ள போராடி வருகின்றனர்.

வலி மிகுந்த ஒரு காலம்

வலி மிகுந்த ஒரு காலம்

ஜியோ சேவைகளின் வணிக ரீதியிலான அறிமுகப்படுத்தலின் போது, ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேலாக அனைத்து விடயங்களும் ஒரு நிலையான மற்றும் நிதிநிலைப்பாடு கொண்டிருக்கும் என்று அம்பானி நம்பிக்கை தெரிவித்திருந்தார், உடன் இந்த தொலை தொடர்பு துறை வலி மிகுந்த ஒரு காலத்தை கடந்து கொண்டிருக்கிறது, ஆனால் அது இறுதியில் பல நல்ல விடயங்கள் வெளிவரும்" என்றும் அவர் கூறியிருந்தார்.

எழுச்சி அடையும் அதே நேரத்தில்

எழுச்சி அடையும் அதே நேரத்தில்

இதனையெல்லாம் ஆராய்ந்த பெங்களூரை சேர்ந்த தொலைத் தொடர்பு ஆய்வாளர் ஆன ஜி கிருஷ்ண குமார் ஜியோ நிறுவனம் ஆனது தொலைத்தொடர்பு துறையில் எழுச்சி அடையும் அதே நேரத்தில் தரவு சந்தை தீவிரப்படுத்தும் போட்டியை தொடர்ந்து நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.

மெல்ல மெல்ல

மெல்ல மெல்ல

மேலும் அவர் ஜியோவின் இலவச சேவைகள் முடிவடைந்து எப்போது அது கட்டண சேவையாக உருவெடுக்கிறதோ அன்று முதல் மெல்ல மெல்ல வாடிக்கையாளர்களை இழக்கும். இன்னும் சொல்லப்போனால் தற்போதைய பயனர்களை தக்கவைத்துகொள்ள போராடலாம் என்று கூறியுள்ளார்.

50% - 60% பயனர்கள்

50% - 60% பயனர்கள்

அதாவது கிருஷ்ண குமாரின் கணிப்புப்படி, ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து, வர்த்தக ரீதியிலான ரிலையன்ஸ் ஜியோவின் 50% - 60% பயனர்கள் சேவையில் இருந்து தங்களை விலக்கி கொள்வார்கள் என்கிறார்.

கேள்வி குறி

கேள்வி குறி

இந்திய சூழலில் பெரும்பாலான பயனர்கள் ப்ரீபெய்ட் பயனர்கள் ஆவர் மற்றும் இந்த பிரிவின் கீழ் இருக்கும் பயனரின் சராசரி வருவாய் (Arpu) ரூ.100 -130/- என்பதை சுற்றி உள்ளது. ரூ.300/- என்ற ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் கட்டண சேவையோடு ஒப்பிட்டால் எத்தனை பேர் இந்த சேவையை அணுகுவார்கள் என்பது கேள்வி குறித்தான் என்கிறார் கிருஷ்ண குமார்.

இலவச சேவை என்பதால்

இலவச சேவை என்பதால்

மேலும் வெளிப்படையாக "ஜியோ ஒரு இலவச சேவை என்பதால் தான் மக்கள் அதில் குவிந்துள்ளனர். அது கட்டண சேவையாக மாறியதும் இந்த நெட்வொர்க்கில் இருக்கும் 50% -60% வெளியேறுவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று குமார் கூறியுள்ளார்.

ஈர்க்க முடியாமல் போகலாம்

ஈர்க்க முடியாமல் போகலாம்

இன்று இந்தியாவில் உள்ள மொபைல் பயனர்களில் 96% ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் ஆவர். ஜியோவின் இந்த ரூ.3030 பிளான் ஆனது சந்தாதாரர்களை ஈர்க்க முயற்சிக்கும் ஆனால் நெட்வொர்க்கின் குரல் அழைப்பு தரம் மோசமாக இருப்பதால் மொபைல் போர்டர்களை ஈர்க்க முடியாமல் போகலாம் என்றும் குமார் கூறியுள்ளார்.

4% மட்டுமே

4% மட்டுமே

அவரை பொறுத்தவரை, ஜியோ சேவையானது சராசரி வருவாயாக (Arpu) ரூ.490/- கொண்டுள்ள போஸ்ட்பெயிட் பயனர்களை மட்டுமே ஈர்க்க முடியும்., அதாவது 4% இந்திய பயனர்களை மட்டுமே ஈர்க்க முடியும் என்கிறார்.

சில சதவீதம் குறைந்தால்

சில சதவீதம் குறைந்தால்

பெயர் குறிப்பிட விரும்பாத மற்றோரு ஆய்வாளர், ஜியோ மொபைல் தரவு பயன்பாடானது அதன் போட்டியாளர்களை விட ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கிறது என்பதால், அதன் விலையும் சில சதவீதம் குறைந்தால் நல்ல வரவேற்பை பெறலாம் என்று கூறியுள்ளார்.

ஜியோ பயனர்கள்

ஜியோ பயனர்கள்

போட்டியாளர்களின் சந்தாதாரர்கள் 1ஜிபிக்கும் குறைவான டேட்டா செலவை மேற்கொள்ள ஜியோ வாடிக்கையாளர்களோ 3 - 4 ஜிபிக்கும் அதிகமாக தரவு பயன்பாடு கொண்டு இயங்குகின்றன. அது கடந்த மாதம் 6 ஜிபிக்கு சென்றது. எனவே ஜியோ பயனர்கள் அதே 6 ஜிபி தரவு பயன்பாட்டை கட்டண சேவையாக பெறும்போதும் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன், ஏனெனில் பிற சேவைகளோடு இந்த விலை (ரூ.303/-) குறைவாக உள்ளது என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ முதல் ஏர்டெல் வரை எல்லோருக்கும் ஆப்பு.? உஷராகிக்கோ.!!

Best Mobiles in India

Read more about:
English summary
Half of Reliance Jio users may drop out after service goes paid. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X