500 மில்லியன் ஆன்ட்ராய்டு சாதனங்களை ஆக்டிவேட் செய்திருக்கும் கூகுள்

Posted By: Karthikeyan
500 மில்லியன் ஆன்ட்ராய்டு சாதனங்களை ஆக்டிவேட் செய்திருக்கும் கூகுள்

கூகுளின் ஆன்ட்ராய்டு இயங்கு தளம் உலகில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. கணினி உலகில் இந்த ஆண்டை ஆன்ட்ரைய்டு ஆண்டு என்றுகூட அழைக்கலாம். அந்த அளவிற்கு எல்லா மொபைல் நிறுவனங்களும் தங்களது ஏராளமான ஆன்ட்ராய்டு மொபைல் சாதனங்களை இந்த ஆண்டு களம் இறக்கி இருக்கின்றன.

அந்த வகையில் உலக அளவில் இதுவரை 500 மில்லியன் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கும் சாதனங்களை ஆக்டிவேட் செய்து இருப்பதாக கூகுள் சமீபத்தில் ஆரம்பித்திருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் 1.3 மில்லியன் புதிய ஆன்ட்ராய்டு சாதனங்களை ஆக்டிவேட் செய்து வருவதாகவும் கூகுள் அறிவித்திருக்கிறது.

இந்த தகவலை கூகுளின் ஆன்ட்ராய்டு மேலாளர் ஹூகோ பாரா தனது கூகுள்+ போஸ்ட்டில் தெரிவித்திருக்கிறார். கடந்த ஜூன் மாதம் வரை 400 மில்லியன் ஆன்ட்ராய்டு சாதனங்களை கூகுள் ஆக்டிவேட் செய்திருந்தது.

ஐபோன் 5 அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் கூகுளின் இந்த அறிவிப்பு முக்கிய செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்