Home
News

முதல் முறையாக.. ஏப்ரல் 25ல் சந்திர கிரகத்தின் மேல்பகுதியில் நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு!

நேற்று வரையிலாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவை (NASA) பற்றியும், அடுத்த ஆண்டு சந்திரனுக்கு "அருகே" மனிதர்களை அனுப்பும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் மூன் மிஷனுக்காக (Artemis Moon Mission) தேர்வு செய்யப்பட்ட விண்வெளி வீரர்கள் மட்டுமே பேசுபொருளாக இருந்தது / இருந்தன; ஆனால் இன்று அப்படி இல்லை!

வருகிற 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகத்தின் மேற்பகுதியில் "முதல் முறையாக" ஒரு வரலாற்று நிகழ்வு நடக்கவுள்ளது. அறிவியல் மற்றும் விண்வெளி (Science And Space) வட்டாரத்தில் - இப்போதைக்கு இது தான் ஹாட் டாப்பிக்!

ஏப்ரல் 25ல் சந்திர கிரகத்தில் நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு!

ஜப்பானின் ஹகுடோ-ஆர் விண்கலமானது ( Hakuto-R Spacecraft) வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதியன்று சந்திரனில் தரையிறங்க உள்ளது. "இதுல எப்படி ஸ்பெஷல்?" என்று நீங்கள் கேட்டால்.. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் முதல் தனியார் விண்கலம் (First Private Spacecraft ) என்ற சாதனையை ஹகுடோ-ஆர் படைக்கவுள்ளது!

தனியார் ஜப்பானிய நிறுவனத்தின் இந்த லூனார் லேண்டர் (Lunar Lander) தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் (Moon's Orbit) உள்ளது. இது சரியாக ஏப்ரல் 25 ஆம் தேதி மதியம் 12:40 க்கு (EDT) நிலவின் மேல்பகுதியில் தரை இறங்குவதை இலக்காக கொண்டுள்ளது.

ஒருவேளை ஏப்ரல் 25 இல் திட்டமிடப்பட்டுள்ள தரை இறக்கத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அது ஏப்ரல் 26 அல்லது மே 1 அல்லது மே 3 ஆம் தேதிக்கு மாற்றப்படும். நினைவூட்டும் வண்ணம் ஹகுடோ-ஆர் விண்கலமானது கடந்த டிசம்பர் 2022இல் எலான் மஸ்க்கின் (Elon Musk) ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கான் 9 (SpaceX Falcon 9) ராக்கெட்டில் ஏவப்பட்டது.

முன்னரே குறிப்பிட்டப்படி, எல்லாம் சரியாக நடந்தால் நிலவில் பாதுகாப்பாக தரையிறங்கும் தனியாரால் இயக்கப்படும் முதல் விண்கலம் என்கிற பெருமை ஹகுடோ-ஆர்க்கு கிடைக்கும். சுவாரசியமாக இந்த விண்கலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விண்வெளி நிறுவனத்திற்கு (United Arab Emirates' space agency) சொந்தமான ரஷித் என்கிற ஒரு சிறிய ரோவரையும் (Rashid rover) கொண்டு செல்கிறது.

கேனடென்சிஸ் ஏரோஸ்பேஸ் (Canadensys Aerospace) என்கிற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஹகுடோ-ஆர் விண்கலத்தில் மல்டி-கேமரா (Multi-Camera), ஏஐ-எனேபிள்டு லூனார் 360-டிகிரி இமேஜிங் சிஸ்டமும் (AI-enabled lunar 360-degree imaging system) உள்ளது. மேலும் இந்நிறுவனம் அதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலவு பயணங்களிலும் ஈடுபட்டுள்ளது. அவைகள் முறையே 2024 மற்றும் 2025 இல் நடக்கலாம்.

நாசாவின் ஆர்ட்டெமிஸ் மூன் மிஷன்களை (NASA (Artemis Missions) பொறுத்தவரை, இது அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான விண்வெளி ஆராய்ச்சிகளில் ஒன்றாகும். கடந்த ஆண்டு, இந்த திட்டத்தின் முதல் மிஷன் (ஆர்ட்டெமிஸ்-1) சந்திரனை சுற்றிய ஒரு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

அதனை தொடர்ந்து ஆர்ட்டெமிஸ்-2 மிஷன் ஆனது வருகிற 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடக்க உள்ளது. இதன் கீழ் நாசாவின் விண்வெளி வீரர்கள் ஓரியன் விண்கலத்தின் (Orion Spacecraft) உதவியுடன், சந்திரனை சுற்றிய 10 நாள் பயணத்தில் ஈடுபடுத்தப்பட உள்னனர். ஒட்டுமொத்த ஆர்ட்டெமிஸ் மிஷன்களின் நோக்கம் மீண்டும் மனிதர்களை சந்திரனில் தரை இறக்குவதே ஆகும்!

Photo courtesy: ispace-inc.com | HAKUTO-R Mission 1

Best Mobiles in India

English summary
Hakuto R Japan Spacecraft To Become First Private Lunar Lander To Land On Moon On April 25
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X