உக்ரைனுக்கு ஆதரவு: ரஷ்யாவுக்கு எதிராக சைபர் போரை தொடங்கிய ஹேக்கர்கள்.! முழு விவரம்.!
சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, உக்ரைகன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவிற்கு எதிராக ஹேக்கர்கள் சைபர் போரை துவங்கியுள்ளனர். குறிப்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சக தகவல்களை தாங்கள் கசியவிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த போரில்உக்ரைன் நாடு தனித்து விடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் உருக்கமாக தெரிவித்தார்.

அதேபோல் ஸ்வீடன் அரசு உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக தகவல் வெளவந்துள்ளது. அதன்படி தொழில்நுட்ப ரீதியலான உதவிகளை ஸ்வீடன் அரசு செய்து கொடுத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஷ்யாவின் ஏவுகணைகள் உக்ரைனின் முக்கியமான இடங்களை நோக்கி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன. பின்பு ரஷ்யாவின் போர்
விமானங்கள் உக்ரைனுக்குள் தாழ்வான உயரத்தில் பறந்து கொண்டிருப்பதாகவும், இந்த இக்கட்டான சுழலை மூன்றாம் உலகப் போர் என்றேஅனைவரும் கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வான்வழி, கடல்வழி தரைவழியாக நடத்தப்படும் தாக்குதலால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. பின்பு தங்களை பாதுகாத்துக்கொள்ளஉக்ரைன் தரப்பிலும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

மிகவும் பரபரப்பான சூழலில், உக்ரேனுக்கு ஆதரவாக உலக நாடுகளைச் சேர்ந்த ஹேக்கர் குழு ஒன்று கைகோர்த்துள்ளது. இந்த குழு ரஷ்யா மீது சைபர் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக இதன் முதல் கட்டமாக ரஷ்யாவின் ஃபெடரல் ஆன்டிமோனோபோலி சேவையை Anonymous எனப்படும் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வலைதளப்பக்கத்தை பல நாடுகளின் பயன்பாட்டர்களால் பயன்படுத்த இயலவில்லை.

இதை தொடார்ந்து ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சியான RT news, அரசு வலைதளங்களை இந்த ஹேக்கர்ஸ் குழு இணைய தாக்குதலை நடத்தியுள்ளது. பின்பு சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையதளங்களில் சில வேகம் குறைந்தன என்றும், மற்றவை செயல்படவில்லை என்று தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்பு இது தொடர வேண்டாம் என்றால் உடனே போரை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நேட்டோ கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தன. அதில் நேட்டோ கூட்டமைப்பை சேர்ந்த அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடைகளை ரஷ்யா மீதுவிதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த நாடுகள் நேரடியாக ராணுவ படைகளையோ, உதவிகளையோ அனுப்பவில்லை என்று
கூறப்படுகிறது. குறிப்பாக நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய நேட்டோவின் பொதுச்செயலாளர், தற்போதைக்கு நேரடியாக ராணுவபடைகளை அனுப்புவதற்கான திட்டம் எதுவம் இல்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications