விஎல்சி மீடியா பிளேயரை பயன்படுத்தி பயனர்களை கண்காணிக்கும் ஹேக்கர்கள்.!
உலகம் முழுவதும் அதிக மக்கள் விஎல்சி பிளேயர்-ஐ அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த பிரபலமான விஎல்சி பிளேயர் ஆனது பெரும்பாலான சாதனங்களில் ஆடியோ மற்றும் வீடியோவை இயக்க உதவுகிறது. டிவி, லேப்டாப் போன்ற பல சாதனங்களில் இந்த விஎல்சி மீடியா பிளேயர் அதிகம்
பயன்படுகிறது என்றே கூறலாம்.

குறிப்பாக லேப்டாப் சாதனங்களை பயன்படுத்தும் அனைவருக்கும் விருப்பமானது இந்த மீடியா பிளேயர் தான். அதாவது இது நமது லேப்டாப் சாதனத்தில் குறைந்த இடங்களை எடுத்துக்கொண்டு, வேகமாக செயல்படக்கூடியதும், பின்பு அனைத்து வகையான ஃபார்மெட்டுகளை பிளே செய்யும் அம்சங்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அனைவருக்கும் மிகவும் விருப்பமான இந்த விஎல்சி மீடியா பிளேயர் சீன அரசின் உதவியுடன் பயனர்களை கண்காணித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக விஎல்சி மீடியா பிளேயர் சீன அரசின் உதவியுடன் பயனர்களை கண்காணிப்பதாக சிமாண்டெக் சைபர் செக்யூரிட்டி ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வெளிவந்த தகவலின்படி, APT10 என்ற நிறுவனம் விஎல்சி மீடியா பிளேயரை பயன்படுத்தி மால்வேர் மூலம் அரசாங்கம், காவல்துறை, மருத்துவம், மதம் மற்றும் பிற நிறுவனங்களை கண்காணித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, கனடா, ஹாங்காங், துருக்கி, இஸ்ரேல், மோண்டகேரோ, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த தாக்குதல்கள் கடந்த 2021-ம் ஆண்டு மத்தியில் துவங்கி பிப்ரவரி 2022 வரை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சமீபத்தில் பிளே ஸ்டோரில் 10 செயலிகள் பயனர்களின் தகவல்களை திருடும் மால்வேரால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மால்வேரால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மால்வேரால் பாதிக்கப்பட்ட செயலிகள் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகிய தகவல்களை திருடும் வல்லமை கொண்டது எனறும், பின்பு வங்கி சார்ந்த தகவல்களை திருடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆபத்தான அந்த 10 செயலிகளையும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்துகூகுள் தடை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனாலும் ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இந்த ஆபத்தான செயலிகளை வைத்துள்ளனர். எனவே இவற்றை உடனே டெலிட் செய்வது மிகவும் நல்லது. இப்போது இந்த ஆபத்தான 10செயலிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய தீங்கிழைக்கும் செயலிகள் இதோ
1. Speed Radar Camera
2. Al-Moazin Lite (Prayer times)
3. Wi-Fi Mouse (Remote Control PC)
4. QR & Barcode Scanner Developed by AppSource Hub
5. Qibla Compass - Ramadan 2022
6. Simple Weather & Clock Widget (Developed by Difer)
7. Handcent Next SMS- Text With MMS
8. Smart kit 360
9. Full Quran MP3-50 Languages & Translation Audio
10. Audiosdroid Audio Studio DAW

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 10 செயலிகளை இதுவரை 60 மல்லியனுக்கு அதிகமாக பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். எனவே இந்த தீங்கிழைக்கும் செயலிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும். அதேபோல் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் அனைத்து செயலிகளும் கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பு கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications