'காட்டிக்கொடுத்த' ஐபி விலாசம், ஐஎஸ்ஐஎஸ் உடன் பிரிட்‌டனுக்கு தொடர்பு..?!

|

சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பேசிய வார்த்தைகள், உலக அரங்கில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, அதாவது "ஐஎஸ்ஐஎஸ் என்பது பணத்திற்காக கொலை செய்யும் ஒரு கூலிப்படை. பணம் கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் அவர்கள் கொல்ல துணிவார்கள், கொல்வார்கள். அப்படியான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை வளர்ப்பது யார் யார் என்பது தொடங்கி, கொலை செய்ய எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பதுவரை பல விடயங்கள் எனக்கு தெரியும்..!" என்று அவர் கூறியிருந்தார்.

புதினின் இந்த உரைக்கு பின் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் இன்னும் அழியாமல் இருப்பதற்கு, பல உலக நாடுகளுக்கும் தொடர்பு உண்டு என்பது போல் ஒரு பிரமை உருவானது. சமீபத்தில் உருவாகி அபார வளர்ச்சி அடைந்து இருக்கும் ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக அமெரிக்கா போன்ற நாடுகள் சிறிதளவு கோபத்தை மட்டுமே காட்டுவது அந்த பிரமையை சந்தேகமாக உருமாற்றியது. தற்போது வெளியாகி உள்ள தகவல் ஒன்று அந்த சந்தேகத்தை மேலும் வலிமையாக்குகிறது என்றே கூற வேண்டும்.

ஃபேஸ்புக், ட்விட்டர் :

ஃபேஸ்புக், ட்விட்டர் :

சாதாரண மக்களை போலவே தீவிரவாதிகளும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை பெரிதளவில் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

பயன்பாடு :

பயன்பாடு :

அப்படியாக தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான ஐஎஸ்ஐஎஸ் இயக்கமும் தங்களின் பிரச்சாரத்தை பரப்புவதற்கு சமூக வலைதளங்களை பெரிதும் பயன்படுத்துக்கொள்கிறது.

வலைதளங்கள் :

வலைதளங்கள் :

சமூக வலைதளங்கள் மட்டுமின்றி ஈராக் மற்றும் சிரியாவில் தற்போதைய நிலை என்ன என்பதை தொடர்ச்சியான முறையில் வலைதளங்கள் மூலம் பரிமாறிக்கொண்டே இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பு :

எதிர்ப்பு :

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு பின் அந்த இயக்கம் உலகம் முழுக்க பெரிய அளவிலான
எதிர்ப்புகளை சந்தித்துக்கொண்டு வருகிறது.

அனானமஸ் :

அனானமஸ் :

அப்படியான ஒரு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அனானமஸ் எனப்படும் அடையாளம் தெரியாத ஹேக் செய்யும் குழுக்கள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் பல வலைதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களை ஹேக் செய்து முடக்கியது.

ட்ராக் :

ட்ராக் :

ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிரான ஹேக் ஒன்றில் அனானமஸ் ஈடுபடும் போது, ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் ட்விட்டர் அக்கவுண்ட்கள் பிரட்டன் நாட்டு அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பது ட்ராக் செய்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லண்டன் :

லண்டன் :

அதாவது சமூக வலைதளங்களில் இயங்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள், லண்டனின் தொழிலாளர் மற்றும் ஓய்வூதிய துறையுடன் (Department of Labor and Pensions ) இணைப்பில் உள்ள ஐபி அட்ரஸ் (IP address) மூலம் இயங்குவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

வல்லுநர்கள் :

வல்லுநர்கள் :

கம்ப்யூட்டர் மூலம் ஆதாரங்களை திரட்டும் 4 இளம் ஹேக்கிங் வல்லுநர்கள் மூலம், லண்டனின் தொழிலாளர் மற்றும் ஓய்வூதிய துறையின் கீழ் வரும் ஐபி அட்ரஸ் மூலம் இயங்கும் சுமார் 3 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களின் அக்கவுண்ட்கள் ட்ராக் செய்யப்பட்டுள்ளது.

லாக்-இன் :

லாக்-இன் :

மேலும் அந்த ஐபி அட்ரஸின் கீழ்வரும் குறிப்பிட்ட அக்கவுண்ட்கள், கம்ப்யூட்டர்கள் அல்லது ஸ்மார்ட்போன்கள் மூலம் லாக்-இன் (Log-in) செய்யப்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

பிரச்சாரம் :

பிரச்சாரம் :

மேலும் குறிப்பிட்ட இந்த அக்கவுண்ட்கள் 'ஜிகாத்' பிரச்சாரம் செய்யவும், ஆள் சேர்ப்பு நடத்தவும் பயன்படுத்தப்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஐபி அட்ரஸ் :

ஐபி அட்ரஸ் :

முதலில் இந்த ஐபி அட்ரஸ்கள் சவூதி அரேபியாவை சேர்ந்தது போல் தெரிந்தாலும் பின் 'சிறப்பு கருவிகள்' மூலம் குறிப்பிட்ட 'ஐபி அட்ரஸ்'கள், லண்டனின் தொழிலாளர் மற்றும் ஓய்வூதிய துறையுடையது என்று உறுதி செய்யபட்டுள்ளது.

கேள்வி :

கேள்வி :

"இது மிகவும் வழக்கமில்லாத ஒன்றாக இருக்கிறது. பிரிட்டிஷ் உளவுத்துறையின் 'தலைமையகமான' லண்டனின் ஐபி விலாசத்தின் கீழ் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களா.!?" என்று ஹேக்கர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளக்கம் :

விளக்கம் :

ஆனால், இது சார்ந்த பிரிட்டன் நாட்டு அரசாங்கத்தின் விளக்கத்தில், சவூதி அரேபிய நிறுவனங்களுக்கு அதிகப்படியான ஐபி விலாசங்களை விற்று உள்ளதாகவும், அந்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதத்தோடு முடிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் அரசு :

பிரிட்டன் அரசு :

மேலும் விற்கப்பட்ட ஐபி விலாசங்கள் தற்போது தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படலாம் என்றும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>அனானமஸ் எச்சரிக்கை, 'அஞ்சி' நடுங்கும் ஐஎஸ்ஐஎஸ்..!! </strong>அனானமஸ் எச்சரிக்கை, 'அஞ்சி' நடுங்கும் ஐஎஸ்ஐஎஸ்..!!

<strong>ஐஎஸ்ஐஎஸ் மீது போர், இது தான் அனானமஸ் தந்திரங்கள்..!?</strong>ஐஎஸ்ஐஎஸ் மீது போர், இது தான் அனானமஸ் தந்திரங்கள்..!?

<strong>ஐஎஸ்ஐஎஸ் ரகசியங்கள் அம்பலமானது..!!</strong>ஐஎஸ்ஐஎஸ் ரகசியங்கள் அம்பலமானது..!!

<strong>அனானமஸ் நல்லதா கெட்டதா..??</strong>அனானமஸ் நல்லதா கெட்டதா..??

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Hackers Trace ISIS Twitter Accounts Linked With UK Government. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X