பறிபோகும் Passwords.. வசமாக சிக்கிய Mac யூசர்கள்.. டெலிகிராமில் விற்பனையாகும் Malware
ஆப்பிள் மேக் (Mac) யூசர்களின் தனிப்பட்ட தகவல்கள் அட்டோமிக் மேக்ஒஎஸ் ஸ்டீலர் என்னும் (Atomic macOS Stealer (AMOS)) மால்வேர் (Malware) மூலம் திருடப்பட்டு வருகிறது. இந்த மால்வேர் டெலிகிராமில் (Telegram) விற்பனை செய்யப்பட்டு வருவதால் ஆப்பிள் யூசர்கள் கதிகலங்கிவிட்டனர். இதை எப்படி தடுப்பது, என்பதை இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
ஆப்பிள் நிறுவனத்தின் டெக்ஸ்டாப் (Desktop), லேப்டாப் (Laptop) ஆகியவற்றில் பெரும்பாலும் மேக்ஒஎஸ் (macOS) மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒஎஸ்ஸை ஹேக் செய்து, யூசர்களின் தனிப்பட்ட தகவல்களை திருட ஹேக்கர்கள் பல்வேறு வழிகளில் திட்டம் போட்டு வருகின்றனர்.

பொதுவாகவே ஆப்பிளின் அனைத்து புராடெக்ட்ஸ்களும் மிகுந்த பாதுகாப்பு கொண்டவையாக இருக்கும். அவற்றின் சாப்ட்வேர்களும் (Softwares) பல்வேறு கட்ட ஃபயர்வால்களை (Firewall) கொண்டிருக்கும். இதன் காரணமாகவே அவற்றின் விற்பனையும் உலகளவில் அமோகமாக இருந்து வருகிறது.
இருப்பினும், விடாகண்டன் கொடாகண்டன் என்பது போல அதையும் ஹேக் செய்யும் மால்வேர்களை ஹேக்கர்கள் உருவாக்கி ஆப்பிள் நிறுவனத்துக்கு தொடர்ந்து கொடைச்சல் கொடுப்பதை வழக்கமாக வைத்து வருகின்றனர். இதனால் ஆப்பிள் யூசர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் சம்பவங்களும் நடக்கின்றன.
அந்த வரிசையில், ஹோக்கர்கள் அட்டோமிக் மேக்ஒஎஸ் ஸ்டீலர் என்னும் புதிய மால்வேர் (Malware) மூலம் மேக்ஒஎஸ் யூசர்களின் தகவல்களை திருடி வருகின்றனர். சொல்லப்போனால், இதை டெலிகிராமில் விற்பனை செய்து, பெரும் சைபர் கொள்ளை சம்பவத்துக்கு விதை போட்டுள்ளனர்.
இந்த மால்வேர் மூலம் ஆப்பிள் யூசர்கள் தங்களது பிரவுசர்களில் பயன்படுத்திய ஆட்டோ ஃபில் டேட்டா (Auto-fills Data), பாஸ்வேர்ட்ஸ் (Passwords), குக்கீஸ் (Cookies ), வாலெட்ஸ் டேட்டா (Wallets Data), கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் டேட்டா (Credit and Debit Card Data) ஆகியவற்றை திருட முடியும். இதற்கு ஹேக்கர்கள் தேவையில்லை, அட்டோமிக் மேக்ஒஎஸ் ஸ்டீலர் மால்வேர் இருந்தால் மட்டும் போதும்.
இதனால் டெலிகிராமில் ஏராளமானோர் அட்டோமிக் மேக்ஒஎஸ் ஸ்டீலர் மால்வேரை வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இதில் அச்சப்பட வேண்டியது என்றவென்றால், இந்த மால்வேரை கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி ஹேக்கர்கள் அப்டேட் செய்துள்ளனர். இதைத்தடுக்க கூடிய ஆன்டி-மால்வேர்களுக்கு டப் கொடுத்து வருகின்றனர்.
இதனால் ஆப்பிள் யூசர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த தகவலை சைபிள் ஆராய்ச்சி மற்றும் நுண்ணறிவு ஆய்வகம் ( Cyble Research and Intelligence Labs ) வெளியிட்டுள்ளது. அதோடு அட்டோமிக் மேக்ஒஎஸ் ஸ்டீலர் மிகவும் ஆபத்தானது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேக் யூசர்கள் என்ன செய்ய வேண்டும்?: இந்த நேரத்தில் மேக் யூசர்கள் தங்களது பிரவுசர்களில் நம்பகமான மற்றும் பாதுகாப்பான வெப்சைட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குக்கீஸ்களை அடிக்கடி கிளியர் (Clear) செய்துவிட வேண்டும். அதேபோல ரியல்-டைம் ஆன்டி-மால்வேர்களை பயன்படுத்தலாம். குறிப்பாக, டிஸ்பிளேவில் தோன்றும் தேவையற்ற ஆட்டோ புஷ் லிங்ஸ்களை கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications








