இப்ப இதுக்குள்ள கூடியும் வர ஆரம்பிச்சுடிங்களா: Corona மூலம் ஊடுருவும் ஹேக்கர்கள்- எச்சரிக்கை!

|

இது என்ன முழங்காலும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடுவது போல் உள்ளது என்று தோன்றலாம். அப்படி தோன்றினால் கொரோனா பேரில் ஹேக்கர்கள் எப்படி ஊடுருவுகிறார்கள் என கீழே பார்க்கலாம்.

இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழப்பு

சீனாவிற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி பிரிட்டன், ஸ்விட்சர்லாந்தில் முதல் முறையாக கொரோனா வைரஸால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 160 பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் 160 பேருக்கு கொரோனா

மேலும் ஸ்லோவேனியா, தென்னாப்பிரிக்கா, எகிப்து போன்ற நாடுகளிலும் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்க அரசு இந்திய மதிப்பில் 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு

3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு

இதில் ஈரானில் மட்டும் 3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. மேலும் அங்கு 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக 13 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது, 30 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம்

கொரோனாவுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம்

கொரோனா வைரஸ் பீதி பொது மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில், இதன் மூலமாகவும் தகவல்கள் திருடும் பணியில் ஹேக்கர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியம் கொரோனாவுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி வரலாம்.

ஐபிஎல்-ஐ விட சூடு பிடிக்கும் பிஎஸ்என்எல் அட்டகாசா சலுகைகள்: 300ஜிபி டேட்டா.! முழுவிவரம்.!ஐபிஎல்-ஐ விட சூடு பிடிக்கும் பிஎஸ்என்எல் அட்டகாசா சலுகைகள்: 300ஜிபி டேட்டா.! முழுவிவரம்.!

ஏணைய பி.டி.எப்., பைல்கள்

ஏணைய பி.டி.எப்., பைல்கள்

பொதுவாக அந்த நேரத்தில் எந்த நிகழ்வு டிரெண்டாக உள்ளதோ அதன்பேரில் ஹேக்கர்கள் சிந்தித்து செயல்பட தொடங்குவார்கள். அதன்படி தற்போது கொரோனா பேரில் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி, கொரோனா தடுப்பு முறைகள், கொரோனா மருந்து என, கொரோனா வைரஸ் போன்ற பல பெயரில் ஏணைய பி.டி.எப்., பைல்களை இணையதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

தகவல்கள் திருடத் தொடங்கப்பட்டு விடும்

தகவல்கள் திருடத் தொடங்கப்பட்டு விடும்

இதை டவுன்லோட் செய்து ஓபன் செய்தவுடன் சமயத்தில் ஏதாவது விஷயங்களோ, அல்லது ஒன்றும் இல்லாமல் கூட போகலாம். ஆனால் இதுபோன்ற பிடிஎப் பைல்கள் மால்வேர்களை கொண்டது. இதை டவுன்லோட் செய்து ஓபன் செய்ததும் மால்வேர்கள் ஊடுருவி தங்களது தகவல்கள் திருடத் தொடங்கப்பட்டு விடும். எனவே இணையத்தில் தகவலை தேடும் போதும், படிக்கும் போது கவனத்தோடு செயல்படவும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Hackers are stealing information on the name of Corona

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X