ட்ரோன் மூலம் பான் மசாலா சப்ளை.! இருவர் கைது.!

|

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஊரடஙகு உத்தரவு நீட்டிக்கப்படலாம்

ஆனாலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது, எனவேஇந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 35பேர் மரணம் அடைந்துள்ளனர்

அன்மையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9512 ஆப உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 35பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 308ஆக உயர்ந்துள்ளது. பின்பு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை856-ஆக உயர்ந்துள்ளது.

சபாஷ்: ரூ.199-க்கு 1000 ஜிபி- Jio பைபர் காம்போ பிளான் அறிமுகம்!சபாஷ்: ரூ.199-க்கு 1000 ஜிபி- Jio பைபர் காம்போ பிளான் அறிமுகம்!

1985பேருக்கு கொரோனா தொற்று உறுதி

குறிப்பாக கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது, மாகாராஷ்டிராவில் 1985பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ட்ரோன் மூலம் வீடுகளுக்கு பான் மசாலாவ விநியோகம் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமலில் உள்ளது

நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது, எனவே அத்தியாவசியத் தேவைகளான காய்கறி, மளிகை மருந்து, பால் ஆகியவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள், டாஸ்மாக் போன்றவைகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மதுபானங்களுக்காக பலவேறு குற்றசம்பவங்கள் நடைபெறுகின்றன.

மசாலாவுக்காக ட்ரோன்கள்

பால்கேனல் மதுபானம் கடத்துப்படுவது, டாஸ்மாக்கை உடைத்து கொள்ளை என சம்பவங்கள் அரேங்கேறும் நிலையில்தற்போது பான் மசாலாவுக்காக ட்ரோன்கள் பறக்கத் தொடங்கியுள்ளன.

Whatsapp சாட்களை மறைப்பது எப்படி? உங்கள் ரகசிய சாட்களை இனி யாரும் பார்க்க வேண்டாம்.!Whatsapp சாட்களை மறைப்பது எப்படி? உங்கள் ரகசிய சாட்களை இனி யாரும் பார்க்க வேண்டாம்.!

தொடர்பான டிக்டாக்

அதாவது குஜராத்தின் மோர்பி பகுதியில் ட்ரோன் மூலம் பான் மசாலா வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, இதுதொடர்பான டிக்டாக் வீடியோவும் வைரலானது வீடியோவை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இருவரை
கைது செய்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Gujarat Man got arrested for delivering paan masala to people: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X