கழுகு பார்வைடா எனக்கு.. அயோத்தி ராமர் கோவிலுக்குள் ஸ்பை கேமராவுடன் சிக்கிய நபர்.. யார் அந்த மர்ம ஆசாமி?
அயோத்தி ராமர் கோயிலில் (Ayodhya Ramar temple) வளாகத்திற்குள் மறைமுகமாக ஸ்பை கேமரா கண்ணாடியுடன் (spy camera glass wear) புகைப்படம் எடுத்து திரிந்த இளைஞரை கோவில் காவலர்களால் அடையாளம் காணப்பட்டு சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாரு இந்த இளைஞர்? எதற்காக புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாத கோவில் வளாகத்திற்குள் (No photo zone), யாருக்கும் தெரியமால் புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்? இவரிடம் எப்படி ஸ்பை கேமரா இருக்கிறது என்று கோவில் காவலர்கள் அடையாளம் கண்டனர் என்ற தகவலை தெளிவாக பார்க்கலாம்.
அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி வளாகத்தில் (Ram Janmabhoomi complex in Ayodhya) ஸ்பை கேமரா (spy camera) பொருத்தப்பட்ட சன்கிளாஸை எடுத்துச் சென்று, யாருக்கும் தெரியாமல் புகைப்படம் (photos) எடுத்த நபர், கோவில் காவலரின் (temple security) கழுகு கண்களில் சிக்கி சிறைபிடிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக கோவில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பது மற்றும் வீடியோ (video) எடுப்பது போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

கழுகு பார்வைடா எனக்கு.. அயோத்தி ராமர் கோவிலுக்குள் ஸ்பை கேமராவுடன் சிக்கிய மர்ம ஆசாமி:
குஜராத்தின் வதோதராவைச் (Vadodara in Gujarat) சேர்ந்த ஜானி ஜெய்குமார் (Jani Jaikumar) என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், தனது சண் கிளாஸ் இல்லை மறைத்து வைக்கப்பட்ட ஸ்பை கேமராவுடன், ராம ஜென்மபூமி பாதையில் பல சோதனைச் சாவடிகளைக் கடந்து திங்கட்கிழமை கோயில் வளாகத்தின் சிங்த்வார் (Singhdwar) அருகே சென்றடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் தெரிவித்தனர்.
யாருக்கும் தெரியாமல் மிகவும் நேக்காக கோவிலின் உள்ளடக்கங்களை படம்பிடித்து வந்திருக்கிறார் ஜானி ஜெய்குமார். இருப்பினும், ஒரே ஒரு காவலரின் கண்களில் அவருடைய ஸ்பை கேமரா (spy camera glass) மாட்டிக்கொண்டது. ஜானி ஜெய்குமார் படம்பிடிக்கும் பொழுது, அவருடைய கண்களில் மாட்டப்பட்டிருந்த கண் கண்ணாடியில் (eye wear glass) இருந்து பிளாஷ் (flash) வருவதை கண்டிருக்கிறார்.
கோவில் காவலரின் கழுகு பார்வையில் எப்படி Spy camera மாட்டியது?
சந்தேகத்தின் பெயரில் ஜெய்குமார் அந்த காவலர் மற்றும் கோவில் அதிகாரிகளால் நிறுத்தப்பட்டு சோதனை செய்ப்பட்டிருக்கிறார். சோதனையில், அவரது கண்களில் அணிந்து இருந்த சன் கிளாஸ் இன் இரண்டு பக்கங்களிலும் கண்களுக்கு எளிதில் தெரியாத மிக நுணுக்கமான ஸ்பை கேமராக்கள் இருப்பதை (minute spy camera placed on either sides of the sunglass) அதிகாரிகள் கண்டறித்தனர். புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லாத இடங்களில் (No photo zone) தடையை மீறி புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக அந்த நபர் கைது (arrested) செய்யப்பட்டிருக்கிறார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, அவர் அணிந்து இருந்த ஸ்பை கேமரா பொருந்திய சன் கிளாஸ் சாதனமும் கோவில் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த நபர் அணிந்து வந்த ஸ்பை கேம் பொருந்திய அந்த கண் கண்ணாடியின் விலை ரூ. 50,000 மேல் இருக்கும் என்று (cost of the sunglass spy camera is around Rs 50,000) கோவில் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அனுராக் பாஜ்பாய் (Anurag Bajpai) என்ற SSF ஜவான் காவலர் (Jawan guard) தான் இந்த நபரை அடையாள கண்டு சிறைபிடித்திருக்கிறார்.
இவரை கோவில் பாதுகாப்பு படை அதிகாரி பலராமச்சரி டுபேய் பாராட்டியுள்ளார். பல காவல் அதிகாரிகளை ஏமாற்றி, பல ராம ஜென்மபூமி பாதையில் பல சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்ற நபரை நுணுக்கமாக கவனித்து கைது செய்த SSF அதிகாரி அனுராக் பாஜ்பாய்க்கு பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக மறைமுகமாக கோவிலுக்குள் புகைப்படம் எடுத்தார்? ஏதேனும் ஆபத்தான நோக்கம் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








