வந்தது புது மோடி மாடல்.. மொபைலில் Google Pay, PhonePe UPI ஆப்ஸ் வச்சிக்கிட்டு டிராபிக் ரூல்ஸ்-ஐ மீறிடாதீங்க!
குஜராத் அரசு ஆனது போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதை எளிபடுத்தும் நோக்கத்தின் கீழ், போக்குவரத்து அபராதம் செலுத்தும் செயல்முறையை முக்கிய டிஜிட்டல் கட்டண தளங்களுடன் ஒருங்கிணைத்து உள்ளது. அதாவது டிராபிக் ஃபைன்களை இனிமேல் யுபிஐ ஆப்களின் வழியாக (Traffic Fine Via UPI Apps)செலுத்தலாம் என்று கூறி உள்ளது.
குஜராத் துணை முதல்வர் ஆன ஹர்ஷ் சங்கவி, கூகுள் பே (Google), போன்பே (PhonePe), பீம் பே (BHIM Pay) மற்றும் யோனோ (Yono) உள்ளிட்ட பிரபலமான ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified payment interface) ஆப்களை பயன்படுத்தி குடிமக்கள் இப்போது போக்குவரத்து அபராதங்களை செலுத்தலாம் என்று அறிவித்துள்ளார்.

இந்த நவீனமயமாக்கப்பட்ட வசதி ஆனது பாரத் பில் பேமென்ட் சிஸ்டத்தை ( Bharat bill Payment System - BBPS) பயன்படுத்துகிறது மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India - SBI) உடனான சமீபத்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum of understanding - MoU) பின்பற்றுகிறது.
இந்த புதிய வசதி, 2023 ஆம் ஆண்டு முதல் செயல்படும் 'ஒன் நேஷன் ஒன் சலான்' பயன்பாட்டின் அடித்தளத்தில் விரிவடைகிறது. இது நெட் பேங்கிங், டெபிட்/கிரெடிட் கார்டுகள் மற்றும் எம்-பரிவஹான் போர்ட்டலில் யுபிஐ வழியாக ஆன்லைன் மூலம் பணம் செலுத்த உதவுகிறது. இந்த ஆப் அடிப்படையிலான அமைப்பை பயன்படுத்த, பயனர்கள் 'மாநில போக்குவரத்து கிளை, குஜராத்' என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த முயற்சி மாநிலம் முழுவதும் போக்குவரத்து அபராதம் வசூலிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகிய இரண்டையும் மேம்படுத்தவும், இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India - RBI) வழிகாட்டுதல்களின் படி நிதி செலுத்தப்படுவதை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த புதிய முயற்சி ஆனது மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை அமல்படுத்துவதையும், ஓட்டுநர்களுக்கு அபராதம் செலுத்த எளிதான வழியை வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது, இது டிஜிட்டல் குஜராத்தின் (Digital Gujarat) இலக்கை நோக்கி ஒரு முக்கியமான படியாகும் என்றும் அரசாங்கம் தெரிவித்து உள்ளது.
யுபிஐ தொடர்பான மற்ற முக்கிய அப்டேட்களை பொறுத்தவரை வருகிற 2025 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின் அல்லது அதற்கு முன்னதாகவே கூட 2 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவதாக யுபிஐ ஆப் பயனர்கள் தங்கள் விருப்பப்படி எந்த ஆப்பின் வழியாகவும் ஆக்டிவ் ஆக உள்ள அனைத்து யுபிஐ மேன்டெட்களை (UPI Mandates), அதாவது உங்கள் வங்கி கணக்கிலிருந்து ஆட்டோமெட்டிக் ஆக அல்லது திட்டமிடப்பட்ட பேமண்ட்களை பார்க்க முடியும்.
இதற்கு அனுமதிக்கும் வகையில், என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. யுபிஐ மேன்டெட் வகையின் கீழ் வரும் பேமண்ட்கள் ஆனது பொதுவாக சந்தாக்கள், இஎம்ஐ-க்கள் மற்றும் பயன்பாட்டு பில்கள் போன்ற தொடர்ச்சியான பேமண்ட்களுக்கு அல்லது ஐபிஓ விண்ணப்பங்கள் மற்றும் அட்வான்ஸ் புக்கிங் போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவது மாற்றம்: பயனர்கள் ஒரு யுபிஐ ஆப்பில் இருந்து மற்றொரு யுபிஐ ஆப்பிற்கு மேன்டேட்களை போர்ட் செய்யும் விருப்பமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது வணிகர்கள் தங்களுக்கு பொருத்தமானதாக கருதும் போது, தங்களுக்கு பிடித்தமான பேயி பிஎஸ்பிகளுக்கு (Payee PSP), அதாவது ஒரு பயனரிடமிருந்து பணம் பெறுவதற்காக அமைக்கப்பட்ட கட்டண சேவை வழங்குநரின் மூலம் யுபிஐ ஆட்டோபே மேன்டேட்களை போர்ட் செய்து செயல்படுத்தவும் உதவும்.


Click it and Unblock the Notifications








