சமூக தளங்களில் அரசுத் துறைகளை தொடர்பு கொள்ள புதிய வசதி!

பிரதமர், முதல்வர் என்று அனைவரையும் சமூக வலைத்தளங்களில் மக்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் ஒரு புதிய வழி முறையை உருவாக்க இருக்கிறது மத்திய அரசு.
இன்றைய சூழலில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் இதன் மூலம் முக்கியமான தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்பது தான்.
இதனால் மத்திய அரசும், சமூக வலைத்தளங்களின் மூலம் நேரடியாக மக்களுடன் இணைய ஒரு புதிய இயங்குதளத்தை உருவாக்க உள்ளது. அனைவரிடமும் அதிக வரவேற்பு உள்ள சமூக வலைத்தளங்களின் மூலம் மக்களிடம் நேரடியாக கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.
அவதூறு செய்திகளை பிரபலங்கள் மற்றும் தலைவர்களின் பெயர்களில் அப்லோடு செய்ய முடியாத வகையில், மிகவும் பாதுகாப்பானதாக இந்த புதிய ஆன்லைன் டூல் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்படி மத்திய அரசாங்க துறை தலைவர்களிடம் நேரடியாக பல தகவல்களை பகிர்ந்து கொள்வதன் மூலமும், மக்கள் அரசாங்க அதிகாரிகளின் முக்கிய வலியுறுத்தல்களை கேட்பதன் மூலமும் பல முக்கிய தகவல்கள் அனைவருக்கும் போய் சேரும். இதனால் எதிலும் ஒரு ஒழுங்கு முறையையும் எளிதாக பின்பற்ற முடியும்.


Click it and Unblock the Notifications