20 மடங்கு எடையை எளிதாக தூக்க உதவும் ரோபோட்டிக் இயந்திரம்!

|

சர்கோஸ் என்ற புதிய ரோபாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு அறிவியல் புனைகதை எக்ஸோஸ்கெலட்டன்களின் உலகத்தை நிஜமாக்கியதற்கு நன்றி கூறியே தீர வேண்டும். சி.இ.ஓ 2020 இல் டெல்டா ஏர் லைன்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து எக்ஸோஸ்கெலட்டன் தொகுப்பினை மிக அழகாக தொடங்கியுள்ளது. இது மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது.

எக்ஸோஸ்கெலட்டன்

எக்ஸோஸ்கெலட்டன்

எக்ஸோஸ்கெலட்டன்களின் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் சர்கோஸ் பேட்டரியால் இயங்கும் முழுமையான எக்ஸோஸ்கெலட்டன் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது நீங்கள் தூக்கும் எந்த எடையும் தாங்குகிறது. உங்களுடைய எந்தவொரு பங்களிப்பும் இல்லாமல் ஒரு நபர் 200 பவுண்டுகளை ஒரே நேரத்தில் 8 மணிநேரம் வரை தூக்க இதனால் முடியும்

டெல்டா ஏர்லைன்ஸ் தங்களது சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான எக்ஸோஸ்கெலட்டன்களை ஒரு துணையாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு உண்மையில் உலகையே மாற்றும் என்றால் மிகையில்லை.

இந்த குறிப்பிட்ட எக்ஸோஸ்கெலட்டன் வடிவமைப்பே ஒரு தனித்துவமான விஷயம். ஒரு பொருளை நகர்த்துவதற்கு பயனரிடமிருந்து சிறிய அளவு உதவிதான் தேவைப்படுகிறது என்பதுதான் இதன் சிறப்பு அம்சம். சி.இ.ஓ இல் நடந்த சோதனை முயற்சியில் பயனர்கள் தங்களுடைய கைவிரல்களை மட்டுமே நகர்த்தினால் போதும், ஒரு பெரிய எடையை தூக்கும் வேலை முடிந்து விடும். மேலும் எக்ஸோஸ்கெலட்டன் கை 50 பவுண்டுகள் கொண்ட சூட்கேஸை உங்கள் தலைக்கு மேல் தூக்கும்.

கார்டியன் எக்ஸ்ஓ எக்ஸோஸ்கெலட்டன் எந்த ஒரு பொருளையும் தூக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆபத்தான அல்லது கடினமாக பொருளாக இருந்தாலும் பிரச்சனை இல்லை. டெல்டா ஏர்லைன்ஸ் அதன் சரக்குக் கிடங்குகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது

 சார்கோஸ் தலைமை நிர்வாக அதிகாரி

சார்கோஸ் தலைமை நிர்வாக அதிகாரி

வரலாற்றை திரும்பி பார்த்தால் அதிக உடல் வேலைகள் செய்ய வலுவான நபர்கள் தேவைப்பட்டனர். எனவே பல நிறுவனங்கள் தற்போது எக்ஸோஸ்கெலட்டன்களை ஏற்றுக்கொண்டால், இனி உடல் ரீதியான வலுவான நபர்களின் தேவை இருக்காது என்பதே இந்த கண்டுபிடிப்பின் சிறப்பு அம்சம். இந்த கண்டுபிடிப்பால் பல்வேறு உயர்-தொழில்துறை தொழில்கள் மிகவும் மாறுபட்ட அமைப்பாக மாறவும் அதனை பராமரிக்கவும் வழிவகை செய்யும்


சார்கோஸ் தலைமை நிர்வாக அதிகாரி இதுகுறித்து கூறியபோது, "தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் தெளிவான தலைவர்களாகவும், தேவைகளைப் பூர்த்தி செய்து புதுமையானவர்களாகவும் இருக்கும் நிறுவனங்களுக்காக இதனை அறிமுகம் செய்கிறோம். அவர்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்கள் இதனால் பயன் பெறுவார்கள். விமானத் துறை மற்றும் வணிக ரீதியான பல தொழில்களில் இந்த தொழில்நுட்பத்தை சிறப்பாக வடிவமைக்க நாங்கள் பணியாற்றுவதால் ஒரு சிறந்த பொருள் இது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்பாக்ஸில் உங்களுக்குத் தொல்லை தரும் விளம்பர மெயில்களை தடுப்பது எப்படி?இன்பாக்ஸில் உங்களுக்குத் தொல்லை தரும் விளம்பர மெயில்களை தடுப்பது எப்படி?

90 கிலோகிராம்

இந்நிறுவனம் இப்போது எக்ஸோஸ்கெலட்டுகளில் வளர்ச்சியின் கவனம் செலுத்தி கடைசி கட்டத்தில் உள்ளது. விரைவில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுடன் இதன் சோதனை நடவடிக்கைகளை நிரூபித்து, மேலும் விரிவுபடுத்த முயற்சியில் இறங்கவுள்ளது.

எக்ஸோஸ்கெலட்டனில் 24 டிகிரி வெப்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் இதை அணியும்போது முடிந்தவரை சுதந்திரமாகவும், எளிதாகவும் இருக்கும். இது பயனர்களை அதிகபட்சமாக 90 கிலோகிராம் (200 பவுண்ட்) தூக்க அனுமதிக்கிறது, ஆனால் அதை தூக்குபவர்கள் அந்த எடை 4.5 கிலோகிராம் எடையை தூக்கியது போலவே உணர்வார்கள்

இது ஒரு மின்சார பேட்டரியிலிருந்து இயங்கும் இயந்திரம் என்பதும் இந்த இயந்திரம் முழுவதும் மின் இயக்கிகள் மூலம் இயக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு தொகுப்பிலும் 2 மணிநேர இயக்க நேரம் உள்ளது. ரிச்சார்ஜபிள் பேட்டரிகள் இதனை எளிதான இயக்கலாம். ஒரு முழு நாள் வேலை செய்தால் அதன்பின் பேட்டரிகள் சூடானால் அதனை மாற்றிக் கொள்ளலாம்.

பெரிய தொகை

பெரிய தொகை

விலையைப் பொறுத்தவரை, கார்டியன் எக்ஸ்ஓ ஆண்டுக்கு, $100,000 வாடகையாக பெறப்படுகிறது. இது சாதாரணமானவர்களுக்கு பெரிய தொகை என்றாலும் பெரிய நிறுவனங்களுக்கு இதுவொரு பொருட்டாக இருக்காது. மனித தொழிலாளர்களை குறைக்க இந்த சூப்பர்சார்ஜ் செய்யக்கூடிய சாதனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம் என்பது மட்டுமின்றி சூப்பர் வலிமையைக் கொடுக்கும் என்பதும், ஒவ்வொரு தனிப்பட்ட ஊழியரின் வேலைத் திறனையும் வியத்தகு முறையில் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் கார்டியன் எக்ஸ்ஓவை ஒரு விதமாக சிந்திக்க வைக்கும் ரோபோவாகவும் மாற்றலாம். அதன் உள்ளே பொருள் இதற்கு உதவுகிறது.

இந்த இயந்திரம் நம்முடைய சுய வேலைகளுக்கு உதவுவது மட்டுமின்றி அடிப்படையில் ஒரு முக்கிய பொருள். ஒரு முழு 150 பவுண்டுகள் எடையை வெகு எளிதாக எந்தவித சிரமமும் இன்றி தூக்க உதவுவதோடு, அவ்வளவு பெரிய பொருளை நாம் தூக்குகிறோம் என்ற உணர்வை பயனர் எதுவும் உணர மாட்டார்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Guardian XO Exoskeleton Can Amplify User Strength by 20 Times: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X