Home
News

டிவி, ஃபிரிட்ஜ், மொபைல் ஜிஎஸ்டி பாதிக்கு பாதி கட்! இனிமே வாங்கனா இதை கவனிங்க!

ஜிஎஸ்டி (GST) வரியின் பெயரை கேட்டாலே கடுப்பாகும் மக்கள் கூட இப்போது, "பரவால்லையே" என்று நினைக்கும்படி டிவி, மொபைல், ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மீதான வரி அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

மத்திய அரசு 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி என்றழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை (Goods and Services Tax) அறிமுகப்படுத்தியது. இந்த வரி, தங்க ஆபரணங்கள் முதல் மளிகை பொருட்கள் வரையில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது.

டிவி, ஃபிரிட்ஜ், மொபைல் ஜிஎஸ்டி பாதிக்கு பாதி கட்! இனிமே இதை கவனிங்க!

இந்த ஜிஎஸ்டி பல்வேறு துறைகளில் அதிகமாக விதிக்கப்படுவதாக, அதிருப்தி எழும் வேளையில், மத்திய அரசு அதை குறைக்கும் நடிவடிக்கையையும் அடிக்கடி எடுத்து வருகிறது. இந்த வரி குறைப்பு பெரும்பாலும் நிறுவனங்கள், உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே லாபத்தை ஏற்படுத்தும். ஆனால், இப்போது குறைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியானது, நேரடியாக மக்களுக்கு லாபத்தை பெற்றுத் தரப்போகிறது.

அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் டிவி (TV), ஏசி (AC), ஃபிரிட்ஜ் (Refrigerator), வாஷிங் மெஷின் (Washing Machine), மிக்ஸி (Mixer), கேஸ் ஸ்டவ் (Gas Stove), மொபைல் போன் (Mobile Phone) உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மீது அதிரடியாக வரி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போது, எந்தெந்த பொருள்களுக்கு எவ்வளவு வரி குறைக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு காண்போம்.

27 இன்ச் டிவிகள் மீதான வரி 31.3 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஃபிரிட்ஜ் மீதான வரி 31.3 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வாஷிங் மெஷின் மீதான வரி 31.3 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மிக்ஸி, ஜூஸர், வேக்கம் கிளீனர் உள்ளிட்ட பொருள்களின் மீதான வரி 31.3 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஃபேன், ஏர் கூலர் மீதான வரி 31.3 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கேஸ் ஸ்டவ் மீதான வரி 21 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எல்இடி லைட்கள் மீதான வரி 15 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சேவிங் மெஷின் (தையல் எந்திரம்) மீதான வரி 16 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

யுபிஎஸ் பவர் சப்ளை கன்வேர்டர் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்கள் மீதான ஜிஎஸ்டி வரி 31.3 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது இந்த வரி குறைப்பு நடவடிக்கை, ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், மேற்கண்ட பொருள்களை வாங்கும்போது, கனிசமான தொகை குறைக்கப்பட்டு வழங்கப்படும்.

அதுவும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக வரி சலுகை கிடைக்கும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
GST Reduce On Electronics Items With Mobiles, TV, Refrigerator, Washing Machine Other Home Appliances
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X